Monday, October 8, 2012

Mind without fear


Mind without Fear

பயம் என்பது நம் அன்றாட வாழ்கையின் ஓர் அங்கமாகிவிட்டது. இது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதில்லை என்றாலும் அச்சுறுத்தலுக்கும், அபாயங்களுக்கும் உயிர் இயல்பாக வெளிப்படுத்தும் மறுமொழியாகும் சில சமயங்களில் பயம் கட்டுக்கடங்காமல் போகும் போது உள ரீதியில் ஒரு சில கோளாறுகளை ஏற்படுத்திவிடுகிறது.

இரவுக் காட்சி சினிமா படம் பார்த்து விட்டு நடு நிசியில் தனியாக வீட்டிற்கு போய்க் கொண்டிருகின்றோம். யாரோ பின் தொடர்வது போன்ற உள்ளுணர்வு கூறும்போது பயம் தோன்றுகிறது. அப்போது இதயம் வேகமாக இயங்குகிறது. சுவாசம் விரைவாக நடைபெறுகிறது. ,குளிரிலும் கூட உடல் வேர்க்கிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது,நா வறண்டு போகிறது. இந்த உடல் மாற்றங்கள் யாவும் ஓடும் இரத்தத்தை தசைகளுக்குத் திருப்பி பயத்தைத் தந்த அந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடவும் அல்லது பின்தொடர்பவரை எதிர்த்துப் போராடவும் தேவையான சக்தியை அளிக்கிறது.தொடர்ந்து உயிர் வாழ 'போராடு அல்லது போய்விடு' என்ற அடிப்படையில் உள்ளம் பயத்திற்கு எதிராகச் சிந்திப்பது அதிலிருந்து விடுபடும் ஒரு இயல்பான வழியாகும்.

எதிர்த்துப் போராடுவதற்கு எதிரியின் வலிமையைப் பற்றி ஓரளவாவது முன் தெரிந்திருக்க வேண்டும். முன் பின் தெரியாத ஒரு எதிரியோடு மோதுவது எப்போதும் எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை. போராடத் துணிவில்லாதவர்கள் எதிர்க்க மனமின்றி விலகிப் போய் விடுவார்கள். சில சமயங்களில் ஒருவருக்கு அவரே உள் எதிரியாக அமைந்து விடுவதுண்டு.சமுதாயத்தோடு இணைந்து வாழ்க்கையைத் தொடர முடியாமல் சமுதாயப் பயம் மனதில் ஆழப் பதியுமானால் அதை எதிர்த்துப் போராட முடியாமல் ஒருவர் தன் வாழ்கையை முடித்துக்கொள்ள தயங்குவதில்லை

பெரும்பாலான தற்கொலைகள் சமுதாயப் பயம் காரணமாகவே நிகழ்கின்றன. தேர்வில் படு தோல்வி அடைந்த மாணவன் ,பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம் பெண் ,வியாபாரத்தில் பெருத்த நஷ்டமடைந்த வியாபாரி ,குற்றம் செய்து மாட்டிக் கொண்டஎதிர்பாராத குற்றவாளி ,பலர் முன்னே அவமானப்பட்டு போன நல்லவன் -இவர்கள் எல்லோரும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள் தோல்வி என்பது வெற்றிக்கு ஒரு பாடம் .ஒரு முறை தோல்வி வந்தால் மீண்டும் தோல்வி வரும் என்பதில்லை.தோல்வியைச் சீரணித்துக் கொண்டு உள்ளுக்குள் ஒரு மாற்றம் விளையுமாறு நம்மை நாமே திருத்திக் கொண்டால் தற்கொலை முடிவிலிருந்து விடுபட முடியும். தோல்வியை எதிர்த்துப் போராடத் தகுதியை வளர்த்துக் கொள்ளாதவர்களே வீரனாய்க் கற்பனை செய் து கொண்டு ஒரு கோழை போலச் செயல் படுகின்றார்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் தற்கொலை செய்து கொள்ள நியாயமே இல்லை. இதற்காக உண்மையில் இந்த சமுதாயம்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.வெறுங் கையேடு பிறந்த நமக்கு நஷ்டம் இல்லவே இல்லை .நஷ்டமடைந்ததால் நீங்கள்தான் மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக இருக்க முடியும்.மற்றவர்கள் நஷ்டமடையாமல் இருக்க நீங்கள் வழி காட்ட முடியுமே. ஒருவரை ஒரு நாளைக்கு ஏமாற்றலாம், ஒருவரை பல நாளைக்கு ஏமாற்றலாம் ஆனால் பலரை பல நாளைக்கு ஏமாற்ற முடியாது. திருந்தி விட்டால் யாருமே குற்றவாளிகளாக இருக்க முடியாது. உண்மையில் நல்லவர்களை விட திருந்திய குற்றவாளிகளே மிகச் சிறந்த நல்லவர்களாக விளங்கியிருக்கின்றார்கள்.மனம் சரியாகச் சிந்தித்துச் செயல்படுமாறு பக்குவப் பட்டிருந்தால் தற்கொலை முயற்சிகள் வருவதற்கு வழியில்லை. பக்குவம் இல்லாதவர்கள் அப்படிப் பட்டவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளவேண்டும். செயல்பாடுகளும்,எண்ணங்களும் எவ்வளவுக் கெவ்வளவு வெளிப்படையாக இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு மனதில் அழுத்தம் குறைவாக இருக்கும். தற்கொலை முயற்சிகளும் தோன்றுவதில்லை.  

No comments:

Post a Comment