Tuesday, October 23, 2012

Arika Iyarpiyal


அறிக அறிவியல்

மின்னூட்டங்களில் நேர் (+) ,எதிர் (-) என இரு வகையுண்டு .ஒத்த வகை மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கிக் கொள்ள ,மாறு வகை மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து இழுத்துக் கொள்கின்றன. மின்னூட்டங்களுக்கு இடையேயான இவ்விசை யை கூலும் என்பார் வரையறுத்து அதன் அளவு அவ்விரு மின்னூட்டங்களின் பெருக்கற் பலனுக்கு நேர் விகிதத்திலும் ,இடைத் தொலைவின் இருமடிக்கு எதிர் விகித்தத்திலும் இருக்கிறது என்று தெரிவித்தார். அணுக்கள் ,மூலக் கூறுக்களின் கட்டமைப்பின் நிலைப்புத் தன்மையை இந்த நிலை மின் விசையைக் கொண்டு விளக்கி அறிந்து கொள்ள முடியும்.

r என்ற இடைத் தொலைவில் Q என்ற மின்னூட்ட த்துடன் கூடிய இரு துகள்கள் ஒன்றை ஒன்று விலக்கிக் கொள்கின்றன. அவை அதே இடத்தில் நிலையாக ஒரு சம நிலையில் இருக்க என்ன செய்யலாம். ?

இரு நேர் மின் துகள்களுக்கும் மிகச் சரியாக நடுவில் ஒரு எதிர் மின் துகளை வைக்கலாம். எதிர் மின்னூட்டத்தின் அளவு ஒரு குறிப்பிட்ட அளவிருக்கும் போது மட்டுமே அமைப்பின் சமநிலையை ப் பெறமுடியும். ஒரு நேர் மின் துகள் சமநிலையில் இருக்க வேண்டுமானால் அதன் மீது r தொலைவில் உள்ள மற்றொரு நேர் மின் துகள் செயல்படுத்தும் விலகு விசையும் ,r /2 தொலைவில் உள்ள எதிர் மின் துகள் செயல் படுத்தும் கவர்ச்சி விசையும் சமமாக இருக்கவேண்டும். கூலும் விதிப் படி விலகு விசை QQ /r2 க்கும் கவர்ச்சி விசை 4 Q q /r 2 க்கும் நேர் விகிதத்தில் இருக்கிறது. .நேர் மின் துகள்கள் நிலையாக இருக்க எதிர் மின்னூட்டம் q =Q /4 என்றிருக்க வேண்டும். q ன் மதிப்பு Q /4 விட அதிகமாக இருந்தால் அமைப்பில் சமநிலை ஏற்படாது.

No comments:

Post a Comment