Saturday, February 23, 2013

Mind without fear


Mind Without Fear

தீய பயம் என்பது ஒரு பலவீனம் .நம்மிடம் தீர்மானமாய் ச் சொல்லமுடியாத ஏதோ சில குறைபாடுகள் இருப்பதை ஒப்புக் கொண்டு நம் மை நாமே திருத்திக் கொள்ள முன்வராத போது இந்த இந்த பலவீனங்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டே பெரிதாக வளர்ந்து விடுகின்றன .நமக்கு நாமே எதிரி என்று பெரியோர்களால் சுட்டிக் காட்டப் படுவது மனிதர்கனில் இததகைய போக்கினால்தான் ..

பேசுவது ஒரு கலை .அதுவும் எல்லோரையும் மனங் கவருமாறு பேசுவது எல்லோருக்கும் எளிதில் வசப்படாத நிலை .மெத்தப் படித்தவனையும் ,எழுதிக் குவித்தவனையும் விட பேசத் தெரிந்தவன் அதிகம் புகழ் பெற்றுவிடுகின்றான் .

மேடையில் பேசும் பழக்கம் இல்லாததால் பேச்சாளர்களுக்கு நடுக்கம் வருவதுண்டு .கூட்டம் அதிகாக இருக்க இந்த பயத்தின் அளவு அதிகரிக்கின்றது .இடையிடையே மறந்துபோய் சொல்ல வேண்டிய விஷயத்தைக் கோர்வையாகப் பேசமுடியாமல் போவதாலும் போவதாலும் ,சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லவேண்டிய நேரத்தால் சொல்லாமல் சொல்லக் கூடாத நேரத்தில் சொல்வதாலும் ,விஷயங்களை மறந்து விடுவதாலும் சொதப்பிவிடுகின்றோம் .மனதில் பயம் சட்டென கவ்விப் பிடித்துக் கொண்டு விடுகின்றது .மேடையில் இதிலிருந்து விடுவித்துக் கொள்ளத் தடுமாறி இதில் மேலும் மேலும் சிக்கிக் கொள்கின்றோம் .

செந்தமிழும் நாப் பழக்கம் என்று கூறுவார்கள். முன்றால் இயற்கையில் இயலாதது என்று எதுவுமே இல்லை .பேசுவதற்கு முன் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.அவற்றை மறந்துவிடாமல் இருக்க அவற்றை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி குறியீட்டு மொழியால் நினைவு படுத்திக் கொள்ளுங்கள் .தொடக்கத்திலேயே விரிவாகப் பேசாமல் சுருக்கமாகப் பேசுங்கள்.எல்லோருக்கும் புரியும்படி எளிய சொற்களால் எளிமையாகப் பேசுங்கள் .யாரையும் புண்படுத்தாதவாறு பேசுங்கள் .புதிய புதிய விஷயங்களைக் கூறுங்கள், சின்னச் சின்னச் கதைகளைக் கூறுங்கள் ,உறுதியான குரலில் ஒலி நயத்துடன் பேசுங்கள் .பழமொழிகள் ,பொன் மொழிகள் ,இலக்கிய வரிகளை அள்ளி விடுங்கள் .உணர்ச்சி வயப்படும் நிலைகளில் உணர்ச்சி பொங்கப் பேசுங்கள் ,நகைச் சுவையையும் கலந்து உரையாடுங்கள் .பேச்சின் போக்கில் எந்த இடத்தில் என்னென்ன விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என்பதை முன் திட்டமிடுங்கள். சிறந்த மேடைப் பேச்சாளர்கள் எப்படிப் பேசுகின்றார்கள் என்று கூர்ந்து கவனியுங்கள்  .மறக்காமல் எல்லோருக்கும் நன்றி கூறுங்கள் .

No comments:

Post a Comment