Sunday, February 17, 2013

philosophy


தத்துவம்

ஆற்றலும் பொருளும் ஒரே மூலத்தின் இருவேறு நிலைகள் ஆற்றலைப் பொருளாக மாற்றலாம் பொருளை ஆற்றலாக மாற்றலாம்.ஒரு மூலம் ஒரே சமயத்தில் ஆற்றலாகவும் பொருளாகவும் இருக்க முடியாது .அதாவது ஆற்றலாக இருக்கும் போது பொருள் இல்லை பொருளாக இருக்கும் போது ஆற்றல் இல்லை.

வாலி படத்தில் அஜித் கதாநாயகனாகவும்,வில்லனாகவும் இரு வேடங்களில் நடிப்பார் கதாநாயகனாக நடிக்கும் போது வில்லன் இல்லை, வில்லனாக நடிக்கும் போது கதாநாயகன் இல்லை. சினிமாவில் வேண்டுமானால் இரு பாத்திரங்களையும் ஒரே காட்சியில் காட்டிவிட முடியும் ஆனால் அது உண்மைக் காட்சி இல்லை. நாடகத்தில் அப்படிக் காட்டிவிட முடியாது.இதிலிருந்து ஆற்றல்-பொருளின் தோற்ற நிலையை நாம் ஒருவாறு புரிந்து கொள்ளமுடியும் .

ஆற்றல்,பொருளில் , பொருளை மட்டும் கண்ணால் பார்த்து தெரிந்து,அறிந்து புரிந்து கொள்ளமுடியும் .ஆனால் ஆற்றலை நேரடியாக உணரமுடியாது .அதற்காக ஆற்றல் நிலையே இல்லை என்று கூறிவிட முடியாது.நுண்ணறிவால் மட்டும் புரிந்து கொள்ள முடியும் .அதுபோலத்தான் கடவுளும் மனிதனும் இயற்கையின் இருவேறு தோற்றங்கள் .இதில் மனிதனை மட்டும்தான் மனிதனால் காணமுடியும் .ஆற்றலைப் போல கடவுளைக் காணமுடியாது ஆனால் புரிந்து கொள்ள முடியும் . ஆற்றல் முழுமுதலானது பொருளுக்கும் முந்தியது .ஆற்றலைக் கொண்டு ஒன்றை உருவாக்கலாம் ,இயக்கலாம் ,இயங்காமல் நிறுத்தி வைக்கலாம் ,என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆற்றலின் பயன்பாடு விரிவானது ,விசாலமானது .பொருள் அப்படியில்லை .ஒரு சில குறிப்பிட்ட பயன்பாடுகளை மட்டுமே பெறமுடியும் ஒரு பொருள் உருவாக்கப் படுவதற்கு முன்பும் ,பொருள் அழிவுற்ற பின்பும் ஆற்றலாக மாற்றம் பெறுகின்றது. அடிப்படையில் ஒரு பொருளை நேரடியாக வேறொரு பொருளாக மாற்றவே முடியாது. ஒரு பொருள் ஆற்றலாக மாறிய பின்பே வேறொரு பொருளாக மாறமுடியும். ஆற்றலுக்கு அழிவில்லை என்றால் பொருளுக்கும் அழிவில்லை. உயிருக்கு அழிவில்லை என்றால் உடலுக்கும் அழிவில்லை.உயிரற்ற உடலையும் ,எரிக்கப் பட்ட உடலையும் தான் நாம் அழிவு என்று கூறுகின்றோம் .உண்மையில் உடலுக்கு அது அழிவில்லை.ஆற்றலால் வேறொரு பொருள் தோற்றத்தைப் பெற உடல் அடிப்படைக் கூறுகளாக ப் பகுக்கப் படுகின்றன.

No comments:

Post a Comment