Friday, February 1, 2013

Creative thoughts


காதல்

ஆண்களுக்கு வலிமை அழகு .பெண்களுக்கு மென்மை அழகு.வலிமையைக் கண்டு மென்மை ஏங்கும் .மென்மையைக் கண்டு வலிமை மயங்கும் .வலிமையிடம் இல்லாத ஒன்று மென்மையிலும் மென்மையில் இல்லாத ஒன்று வலிமையிலும் இருப்பதே இதற்க்குக் காரணம் .

செய்யும் தொழிலில் தொடந்து ஈடுபடுகின்றவன் செயல் மீது காதல் கொள்வான் தீய செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டான் .அப்படிப் பட்ட சிந்தனை எண்ணத்தில் மலருவதற்கு வாய்ப்பும் நேரமும் கிடைப்பதில்லை .பெரும்பாலும் வேலை ஏதும் இல்லாமல் இருப்பவர்களுக்கே தீய செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை ஆராய நேரம் கிடைக்கிறது

உணர்வுகளில் மிக வலிமையானது காதல் .இது கட்டுக் கடங்காது போனால் உறவுகளைக் கூட முறித்துக் கொள்ளத் தயங்காது .

காதல் என்பது மிகவும் வலிமையானது .அதற்காக மனம் எத்தகைய முயற்சிகளையும் எடுத்துக் கொள்ளத் தயங்குவதில்லை.விலங்கினங்களைப் பாருங்கள்.உறவுக்காகாக நெடுத்துரம் கடக்கின்றன .பல காலம் காத்திருக்கின்றன .பல விளையாட்டுக்களைக் காட்டுகின்றன .போட்டிக்கு வரும் எதிரியோடு சண்டை போடுகின்றன .அவைகளுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையெல்லாம் கிடையாது .தன்னினத்தைப் பெருக்குவதுதான் அவற்றின் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கின்றது .பெருகும் இனம் தன்னினத்திற்குப் பாதுகாப்பு என்று அவைகள் நினைப்பதின் விளைவே இது .இந்த எண்ணம் மனிதர்களிடமும் வளர்ந்திருக்கிறது .ஆனால் மனிதர்கள் எல்லோரும் ஓர் இனம் என்று நினைக்காமல் ஜாதி ,மதம் மொழி,தொழில் இப்படிப் பல்வேறு காரணங்களினால் பாகுபடுத்தி வேற்றினமாகக் கருதி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள முற்படுகின்றார்கள் .

கொஞ்சம் அன்பு கொஞ்சம் நட்பு ,கொஞ்சம் பாலுணர்வு இவையெல்லாம் ஒரு சேரக் கலந்ததுதான் காதல்.எந்த நேரத்தில் எதை மிகைபடுத்திக் காட்டுவது என்பதைத் தெரிந்து கொண்டால் காதல் கடைசி வரை தொடர்ந்து வரும்.அதைவிடச் சிறந்த இல்வாழ்கை வேறெதுவும் இருக்கமுடியாது.

காதல் வேண்டியதுதான் .ஆனால் காதலே வாழ்கையில்லை .காதலை வெளிப்படுத்த வேண்டிய பருவத்தில் மட்டுமே மனிதனைத் தவிர்த்த மற்ற விலங்கினங்கள் எல்லாம் வெளிப்படுத்துகின்றன.விலங்கினங்களுக்கு ஒரு பலமாக இருக்கும் காதல் ,மனிதர்களுக்கு பலவீனமாக மாறி வருகிறது .

ஓர் இனத்தின் சாகாமைக்கு இயற்கை அளித்த வரமே காதல். சாகாத சமுதாயத்திற்கு இந்தக் காதலே துணை

No comments:

Post a Comment