Wednesday, February 6, 2013

Mind Without Fear


Mind Without Fear

பயம் மனதில் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன .அவற்றுள் முக்கியமானது நம்முடைய நோக்கத்திற்கும் அதை அடைவதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தி வைத்திருப்பதுதான். வெல்வதற்கான தகுதிப்பாட்டை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதால் மனதில் கொள்ளப்படும் நோக்கங்கள் காலப்போக்கில் ஆசைகளாகவும் பேராசைகளாகவும் மாற்றம் பெறுகின்றன. இல்லாத தகுதிப்பாட்டினால் மனதில் பயம் நிலைப்படுகின்றது.தகுதிப்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வந்துவிடுவதில்லை.ஒருசில முயற்சிகளோடும் முற்றுப் பெறுவதில்லை.அது கல்வி,அனுபவம்,பிறருடன் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பு,பகுத்தறிவு போன்றவைகளால் மேம்படுகின்றது என்றாலும் ஒருநாளும் முழுமை பெறுவதில்லை.ஆசையை அளவில்லாமல் பெருக்கிக் கொண்டே போவதாலும் முயற்சி செய்வதற்கான தகுதிப்பாட்டை வளர்த்துக் கொள்ளாமல் சுருக்கிக் கொண்டே போவதாலும் இல்லாத தகுதிகளால் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் மனதில் பயம் நிலை கொள்கின்றது. தகுதிப்பாட்டை மேம்படுத்திக் கொள்வது என்பது சராசரி நிலைக்கும் அப்பால் செல்வது என்று பொருள்.சராசரி நிலைக்குக் கீழ் தகுதிப்பாட்டை மேம்படுத்திக் கொள்வது மன பயத்தைப் போக்கிவிடுவதில்லை.              காலத்தால் சராசரி நிலையும் இடம்பெயர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மேம்படுவதற்கு கூடுதல் முயற்சிகளை             ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டியது தவிர்க்க இயலாததாகின்றது. ஒரு செயலைச் செய்யும் போது எல்லோரும் செய்வதைப் போல சராசரியாகச் செய்து முடித்தால் சரி என்று திருப்தி அடைந்து விடக்கூடாது .அதையும் தாண்டி எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதை நிரந்தர இலக்காக எண்ணத்தில் கொண்டால் நாம் இதுகாறும் வளர்த்துக் கொள்ளத் தவறவிட்ட தகுதிப் பாட்டை ஓரளவாவது மேம்படுத்திக் கொண்டு அவ்வப்போது குறுக்கிடும் பயத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியும். தகுதிப் பாட்டை வளர்த்துக் கொண்டு நம்மை நாம் உயர்த்திக் கொள்வது நமக்காக மட்டுமே என்ற எண்ணம் இருக்கும் வரை மன பயத்தை நீக்கி விட முடியாது .மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யத் தகுதியுடையவனாக இருப்பதற்கு தகுதிப் பாட்டை வளர்த்துக் கொள்ள நினைக்கும் போது வாழ்கையின் எந்த கால கட்டத்திலும் பயம் வருவதேயில்லை மற்றவர்களுக்காக வாழும்போதுதான் காந்தி ,இயேசு போன்ற பெரியோர்கள் எந்த எதிர்ப்பையும் பயமின்றிச் சந்தித்தார்கள் .பயத்தைப் போக்கிக் கொள்ள எளிய வழிதான் என்றாலும் பின்பன்றுவது அவ்வளவு எளிதில்லை.மனப் பக்குவம் இல்லாத நிலையில் எதுவும் எளிதில்லை

No comments:

Post a Comment