Thursday, December 30, 2010

Vanna vanna ennangal

.மரம் போல வாழவேண்டும் மனிதா




மரம் போல வாழவேண்டும் மனிதா

வரமாகும் வாழ்க்கை இனிதாய்



ஓங்கி மரம் வளர்வதற்கும்

ஒடுங்கி இடுங்கிப் போவதற்கும்

சரியான காரணம் சல்லிவேராகும்

மண்ணில் மறைந்திருக்கும் அவை

கண்ணில் என்றும் தெரிவதில்லை



மரத்திற்கு அது வேர்

மனிதனுக்கு அது ஒழுக்கம்



உயர்ந்து மனிதன் வாழ்வதற்கும்

தாழ்ந்து வீழ்ந்து போவதற்கும்

முழுமையான காரணம் ஒழுக்கமாகும்

மனதில் ஒளிந்திருக்கும் அவை

மற்றவனுக்கு உடன் தெரிவதில்லை



மரம் போல வாழவேண்டும் மனிதா

வரமாகும் வாழ்க்கை இனிதாய்



பெருத்து பெருக்கம் செய்வதற்கும்

பெயராமல் உறுதியாய் உய்வதற்கும்

உறுதுணைக் காரணம் ஆணிவேராகும்

பூமிக்குள் புதைந்திருக்கும் அது

புயல் அடித்தாலும் அசைவதில்லை



மரத்திற்கு உறுதி ஆணிவேர் என்றால்

மனிதனுக்கு அது மனமாகும்

 
மரத்தில் விரியும் கிளைகள்


மனிதன் நடக்கும் வழிகள்

கிளையில் துளிர்க்கும் இலைகள்

மனதில் முளைக்கும் எண்ணங்கள்



நஞ்சை உறிஞ்சி நல்லதைத் தரும்

நாளும் பூத்து நற்கனி தரும்

வெயிலைத் தடுத்து நிழலைத் தரும்

வெட்டிய பின்னும் பொருளைத் தரும்



தான்வாழ பிறர்வாழ நினைக்கும்

பிறர்வாழ தான்வாழ நினைக்கும்

இதை மறந்துபோன மனிதனுக்கு

மரமே நீ உணர்த்தவேண்டும்

Tuesday, December 28, 2010

arika iyarppiyal

 ஈயக் குண்டு புதைக்கப் பட்ட பனிக்கட்டி


ஓர் ஈயக்குண்டு புதைக்கப்பட்ட பனிக்கட்டித் துண்டு
ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நீரில்
மிதக்கின்றது .அமைப்பின் வெப்பநிலை
௦0 டிகிரி செல்சியஸ் என்றிருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்ட
நிலையில் பனிக்கட்டி உருகுகின்றது .இப்போது
பாத்திரத்தில் நீர் மட்டம் உயருமா ? குறையுமா ?
அல்லது முன்பு போல மாறாதிருக்குமா ?
                                        ***************
பனிக்கட்டி முழுதும் உருகிய பின் ,பாத்திரத்தில் நீரின்
மட்டம் சிறிது குறையும் . மிதக்கும் ஈயக்குண்டு புதைக்கப்பட்ட பனிக்கட்டி ,அதிக அளவுஎடையுள்ள நீரை இடம்பெயர்க்கிறது . இது பனிக்கட்டி மற்றும் ஈயக்குண்டு இவற்றின் எடைக்குச்
சமமாக இருக்கும். பனிக்கட்டி உருகும் போது
ஈயக்குண்டு நீரில் அமிழ்ந்து விடுகிறது .அப்போது அதன்
கன அளவிற்குச் சமமான கனஅளவுள்ள நீரை மட்டுமே இடம்பெயர்க்கிறது . உருகும் பனிக்கட்டி தன் எடைக்குச்
சமமான நீரை மட்டுமே உருகுவதால் மீட்டுத்தருகிறது .
இதனால் பாத்திரத்தில் நீர்மட்டம் குறைகிறது .

Monday, December 27, 2010

Vinveliyil ulaa

கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் (Globular cluster)


                                        கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள்




ஒவ்வொரு அண்டத்திலும் விண்மீன்கள் ஓரிடத்தில் கூட்டம் கூட்டமாகவும் வேறிடத்தில் விலகி விரிந்தும்
காணப்படுகின்றன. அண்டவெளி வளிமத்திலிருந்து
விண்மீன்கள் ஒரே சமயத்தில் உருவாகும் போது
அவையாவும் பொது ஈர்ப்பால் கட்டுண்டு ஒரே
மாதிரியான இயக்கத்திற்கு இணைந்து உட்படுகின்றன.
இது போன்ற கொத்துக் கொத்தான விண்மீன்களை
cluster என்பர். கொத்து விண்மீன் கூட்டங்களில்
இரு வகைகள் உள்ளன. அவை அண்டவெளி
அல்லது அண்டகக் கொத்து விண்மீன் கூட்டம்
அல்லது தனிக் கொத்து விண்மீன் கூட்டம்
(galactic or open cluster) மற்றும் கோளகக் கொத்து
விண்மீன் கூட்டம் (Globular cluster)எனப்படும்.
முன்னதில் சில பத்து முதல் சில நூறு
வரையிலான விண்மீன்கள் ஓரளவு தளர்ச்சியாக
கட்டுண்டு குறிப்பிடும்படியான கட்டமைப்புச் சீர்மை
ஏதுமின்றி காணப்படும். பொதுவாக இவை
அண்டத்தட்டின் தளத்தில் அமைந்துள்ளன..
மாறாக கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள்
ஏறக்குறைய கோள வடிவச் சீர்மையுடன்
காணப்படுகின்றன. இதில் விண்மீன்கள் அடர்த்தியாக,
நெருக்கமாகக் கட்டுண்டு இருக்கின்றன. சராசரியாக
பத்தாயிரம் முதல் பத்து இலட்சம் வரை
விண்மீன்களைக் கொண்டிருக்கும் இவை பெரும்பாலும்
அண்டத்தட்டின் தளத்தில் அமைவதில்லை.
அண்ட வட்டத்தில்(halo) அதிகம் உள்ளன


கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் (Globular cluster)
என்பது கோள வடிவில் உருவாகியுள்ள விண்மீன்களின் கூட்டமாகும் .இவை ஒரு கோளின் துணைக் கோள்
போல அண்ட மையத்தை (galactic centre) சுற்றி வலம்
வருகின்றன. ஈர்ப்பினால் மிகவும் வலுவாக இணைக்கப்பட்ட
ஒரு கட்டமைப்பாக இருப்பதால், இது பொதுவாக கோள வடிவிலும்,அடர்த்தி மிக்கதாகவும் விளங்குகின்றது.
இலத்தீன் மொழியில் globulus  என்றால் சிறிய கோளம்
என்று பொருள். கொத்துக் கொத்தாய் காணப்படும்
விண்மீன் கூட்டம் அண்டத்தின் கட்டமைப்பிற்கு
வெளியே உள்ள அண்டவெளியில் (halo) மட்டுமின்றி,
அண்டத்தின் கட்டமைப்பிலும் இடம் பெறுவதுண்டு.
அண்டவெளியில் காணப்படும் கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில்
விண்மீன்கள் உள்ளன. இவை மிகவும் கூடுதலான
வயதுடையனவாகவும் இருக்கின்றன. அண்டத் தட்டில்
காணப்படும் அண்டகக் கொத்து விண்மீன் கூட்டங்கள்
(galactic cluster) அல்லது தனிக்கொத்து விண்மீன் கூட்டங்கள்
(open) செறிவு தாழ்ந்தனவாக உள்ளன. கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்கள் என்பது மிகவும் பரவலாக
அண்ட வெளியில் எங்கும் காணப்படுகின்றன. பால்வழி
மண்டலத்தில் (Milky way) 150 -158 கோளகக் கொத்து விண்மீன்
கூட்டங்களை இனமறிந்துள்ளனர் .பெரிய அண்டங்களில்
இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்கள் இருக்கலாம்.நமக்கு அருகில் உள்ள ஆண்ட்ரோமெடா(Andromeda) என்னும் அண்டத்தில் 500 கோளகக்
கொத்து விண்மீன் கூட்டங்களைக் கண்டறிந்துள்ளனர்.
M .87 என்று பெயரிடப்பட்ட மிகப்பெரிய நீள்கோள வடிவ
அண்டத்தில் 13000 கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள்
இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இவை 131,000 ஒளிஆண்டுகள்
ஆரமுள்ள வட்டப்பாதையில் அண்டத்தைச் சுற்றி வலம் வருகின்றன.வட்டார வரம்புக்கு உட்பட்ட பகுதியில்
போதிய நிறையுடைய ஒவ்வொரு அண்டமும் கோளகக்
கொத்து விண்மீன் கூட்டங்களின் குழுமத்தோடு
தொடர்புடையனவாக இருக்கின்றன. சக்கிடாரியஸ்
குறு அண்டம் (Sagittarius dwarf), கானிஸ் மேஜர் (Canis Major )
குறு அண்டம் போன்ற அண்டங்கள் போலோமர் 12
(Polomer 12 ) என்பது போன்ற கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்களை பால் வழி மண்டலத்திற்கு
அளிக்கும் வழி முறையில் உள்ளன. இது கடந்த காலத்தில் அண்டங்களிலிருந்து எவ்வளவு கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதை
விவரிக்கக் கூடியதாக இருக்கின்றது



அண்டத்தில் முதன் முதலாக உருவான சில விண்மீன்கள்
கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் காணப்பட்டாலும்
அவற்றின் மூலமும் அண்டத்தின் பரிணாம வளர்ச்சியில்
அவற்றின் பங்கும் இன்னும் தெளிவாக வரையறுக்கப்
படாமலேயே இருக்கின்றது. கோளகக் கொத்து விண்மீன்
கூட்டங்கள் பொதுவாக 100 - 1000 வரையில் உலோகச்
செறிவு தாழ்ந்த,பழமையான விண்மீன்களைக் கொண்டுள்ளன.
கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் காணப்படும்
இந்த வகை விண்மீன்கள்,சுருள் புய அண்டங்களின்(Spiral galaxy)
மையக் கருப் பகுதியில் இருக்கும் விண்மீன்களைப்
போல இருக்கின்றன. எனினும் மிகக் குறுகிய விண்வெளிப்
பகுதிக்குள் அடங்கியிருக்கின்றன.இவற்றுள்
வளிமமோ ,தூசிப் படலமா காணப்படவில்லை. இது
வெகு காலத்திற்கு முன்பே கவரப்பட்டு விண்மீனாகத்
திரண்டிருக்கலாம் என்பதைத் தெரிவிக்கக் கூடியதாக
இருக்கின்றது. 

ஒரு கன பார்செக்(Cubic parsec ) பரும வெளியில் 0௦.4
விண்மீன்கள் என்ற வீதத்தில் கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்களில் விண்மீன்கள் செறிவாக அடங்கி
இருக்கின்றன .எனினும் இக்கட்டமைப்பு விண்மீன்-கோள்
அமைப்பிற்கு அனுகூலமிக்கதாக இல்லை. நெருக்கமாக
உள்ள விண்மீன்களின் கூட்டத்தில் கோள்களின்
சுற்றுப்பாதை இயக்கம் தாய் விண்மீனின் ஈர்ப்புக்கு
மட்டும் கட்டுப்படாமல் பிற விண்மீன்களினாலும்
பாதிப்பிற்கு உள்ளாகிறது. இத்தகைய கட்டமைப்பில்
கோள்களின் சுற்றுப்பாதை இயக்கம் நிலையற்றதாக
இருப்பதால் அவற்றின் வாழ்வுக் காலம் மிகவும்
குறுகியதாக இருக்கும் .பெரும்பாலும் கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்களில் உள்ள விண்மீன்கள்
யாவும் பரிமாண வளர்ச்சிப் படியில் ஏறக்குறைய ஒரே
காலகட்டத்தில் உள்ளன. இது ஒரு கோளகக் கொத்து
விண்மீன் கூட்டத்திலுள்ள விண்மீன்கள் எல்லாம்
சற்றேறக்குறைய ஒரே சமயத்தில் ஒரே மூலத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றது.

பால் வழி மண்டலத்திலுள்ள உமேகா செண்டாரி,
M 31 ல் உள்ள G 1 என்ற கோளகக் கொத்து விண்மீன்
கூட்டம் போன்றவை மாபெரும் நிறை கொண்டவை .
இவற்றின் நிறை பல மில்லியன் சூரிய நிறையாக
உள்ளது.மாபெரும் நிறையுடைய கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்கள் உண்மையில் அவ்வட்டாரத்திலுள்ள
பெரிய அண்டங்களால்உட்கவரப்படும் குறு அண்டங்களின்
(dwarf galaxy )உள்ளகமாக உள்ளன. என்பதற்கு இவை இரண்டும்
சான்றாக உள்ளன. பால் வழி மண்டலத்தில்
காணப்படும் கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில்
25 விழுக்காடு குறு அண்டத்துடன் உட்கவரப்பட்டவைகளாக உள்ளன .நிறைமிக்க பல கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்களில் மையக் கருப் பகுதிகளில்
கருந்துளை விண்மீன்கள் (Black hole) இருக்கலாம்
என்றும் நம்பப்படுகிறது.

விண்மீன்களை இரு வகையாகப் பிரித்திருக்கின்றர்கள் .
ஹைட்ரஜன், ஹீலியம் தவிர்த்த பிற தனிமங்களின் செழுமை
அதிகமாக இருப்பின் அவற்றை இரண்டாம் வகை
(Population II ) விண்மீன் என்பர்.குறைவான் செழுமை
கொண்டவைகளால் ஆனவற்றை முதல் வகை
(population I ) என்பர். பொதுவாக கோளகக் கொத்து
விண்மீன் கூட்டங்களில் உள்ள விண்மீன்கள் எல்லாம்
இரண்டாம் வகை விண்மீன்களாக உள்ளன.

உலோகத் தனிமங்கள் ,விண்மீன்களின் பரிமாண
வளர்ச்சிப் படியில் உயர் வெப்ப நிலைகளில்
நிகழும் அணுக்கருச் சேர்க்கை வினைகளால்
ஏற்படுகின்றன. உயர் வெப்ப நிலைகளில் நிகழ்வதால்
ஒரு விண்மீனில் இருக்கும் உலோக அணுக்களின்
செழுமை அவ விண்மீனின் வயதைக் குறிக்கும்
ஒரு காரணியாக விளங்குகிறது .

Sunday, December 26, 2010

Arika iyarpiyal

மிதக்கும் பலூன் அமிழ்ந்து போனதேன் ?




எடை கட்டி தொங்க விடப்பட்ட ஒரு பலூன் ஒரு
நீர் தொட்டியில் நீரின் மேல் மட்டத்தைத் தொட்டுக்
கொண்டு முழுதும் அமிழ்ந்திருக்குமாறு
மிதக்கின்றது .பலூனை உள் நோக்கி அழுத்தினால்
பலூன் அமிழ்ந்து விடுகின்றது . ஏன் அப்படி ?.
                              ***************

காற்றடைத்த பலூன் மற்றும் கட்டித் தொங்க
விடப்பட்டுள்ள எடைக்கல் இவற்றின் எடைக்குச்
சமமாக அவற்றால் இடப்பெயர்வுக்கு ஆளான
நீரின் எடை இருக்கிறது .பலூனைச் சிறிது
உள்நோக்கி அமிழ்த்தினால் அவ்வாழத்தில் நீரின்
நிலை நீர்ம அழுத்தம் செயல்பட்டு பலூனை
இறுக்கத்திற்கு உள்ளாக்குகிறது. குறைவான அளவு
நீர் இடப்பெயர்ச்சிக்கு உள்ளாவதால் எடையை
ஈடுகட்ட முடியாது ,அப்பலூன் மேலும் அமிழ்ந்து
விடுகிறது .

Wednesday, December 22, 2010

arika iyarppiyal

நேரான இரும்புத் தண்டும்
வளைக்கப் பட்ட இரும்புத் தண்டும்


ஓர் இரும்புத் தண்டை வளைக்கும் போது செய்யப்பட்ட
வேலை அதில் நிலையாற்றலாக உறைந்திருக்கும்.இந்த
வளைந்த இரும்புத் துண்டை ஒரு பீக்கரில்
வைத்து அடர் கந்தக அமிலத்தை ஊற்றினால் அது
கரைகின்றது. அது சரி, அந்த நிலையாற்றல்
என்னவானது?
                                  ******************
 
 
.ஆற்றல் அழிவதில்லை .ஒரு வகையான ஆற்றல்
மற்றொரு வகையான ஆற்றலாக மாறுகிறது .
மிகத் துல்லியமாக மதிப்பிட முடியுமானால்
வளைந்த இரும்புத் துண்டு கரைந்த கந்தக
அமிலத்தின் வெப்பநிலை அதே அளவு விளையாத
இரும்புத்துண்டு கரைந்த கந்தக அமிலத்தின்
வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதை
உணரலாம் . வளையாத இரும்புத் துண்டு கந்தக
அமிலத்தில் விரைவாகக் கரைகிறது

Tuesday, December 21, 2010

arika iyarppiyal

வைரம் மின்கடத்தியா ?






நல்ல வெப்பக் கடத்தியான
தங்கம் ,வெள்ளி ,செம்பு போன்ற உலோகங்கள் நல்ல கடத்திகளாகும்.கண்ணாடி,பீங்கான், மரம் போன்றவை வெப்பம்
கடத்தாப் பொருள்களாகும். பொதுவாக வெப்பத்தைக்
கடத்தும் ஒரு பொருள் மின்சாரத்தையும் கடத்தும். அதுபோல
ஒரு நல்ல மின் கடத்தி நல்ல வெப்பக் கடத்தியாகச்
செயல்படும். ஏனெனில் ஒரு பொருளில் மின்சாரமும்,
வெப்பமும் கடத்தப்படுதல் என்பது அதில் உள்ள கட்டற்ற
எலக்ட்ரான்களால் நிகழ்கின்றது .தங்கம்,வெள்ளி ,செம்பு
போன்ற உலோகங்கள் நல்ல மின் மற்றும் வெப்பக் கடத்திகளாக

இருப்பதிலிருந்தும் இதை அறியலாம் . ஆனால் வைரம்
நல்ல வெப்பக் கடத்தியாக இருந்தும் மின் கடத்தியாக
இல்லை .அறை வெப்ப நிலையில் தூய வைரத்தின் வெப்பக்கடத்தும் திறன் செம்பை விட 5 மடங்கு அதிகம் .முரண்பாடான வைரத்தின்
இப் பண்பிற்கு விளக்கம் கொடுக்க முடியுமா ?
                                              *************

வைரம் படிகக் கட்டமைப்பைக் கொண்டது .இதில் கட்டற்ற

எலெக்ட்ரான்கள் ஏதுமில்லை என்பதால் அது குறைமின்
கடத்தியாக விளங்குகிறது .ஆனால் வெப்பமானது
வைரங்களில் கட்டற்ற எலெக்ட்ரான்களால்
கடத்தப்படுவதில்லை என்றாலும் படிகத்தளவிடை
அதிர்வுகளினால்(lattice vibrations) வெப்பக்கடத்தல் இயலுவதாக
இருக்கிறது .இப்பண்பைக் கொண்டு சிலர் வைரத்தின்
போலித் தன்மையை அறிந்து கொள்கிறார்கள் .அறை
வெப்ப நிலையில் இருக்கும் வைரத்தை கைக்குட்டையால்
எடுத்து நாக்கின் நுனியில் வைக்க உண்மையான
வைரம் வெப்பத்தை உறிஞ்சி விரைவாகக்
கடத்துவதால் குளிர்ச்சியாக இருப்பது போலத் தோன்றும்.
போலி வைரம் வெதுவெதுப்பாக இருக்கும் .

Monday, December 20, 2010

arika iyarppiyal

1.ஒரு நீர்மத்தின் கொதிநிலையை மாற்ற முடியுமா ?




ஒவ்வொரு நீர்மத் திற்கும் ஒரு கொதி நிலை உண்டு.
இந்த வெப்ப நிலையில் நீர்மம் கொதித்து ஆவியாகும்.
கொதி நிலையை இயல் வளி அழுத்தத்தில்
குறிப்பிடுவது வழக்கம்.ஒரு நீர்மத்தின் கொதிநிலையைக்
கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியுமா ?
                                     ****************
2.உப்புத் தண்ணீரில் பருப்பு வேக அதிக நேரமாவதேன் ?


சமையலுக்கு உப்புத் தண்ணீரைப் பயன்படுத்தும்
போது சமைப்பதற்கு அதிக நேரமாகின்றது. அதனால்
பருப்பு வகைகளைச் சமைத்துவிட்டு இறுதி நிலையில்
உப்பைச் சேர்ப்பார்கள் .நீரில் உப்பைச் சேர்ப்பதால்
சமைப்பதற்கு ஏன் அதிக நேரமாகின்றது ?
                                         *****************
1.ஆவியாதல் என்பது பொதுவாக நீர்மத்தின் பரப்பில்
மட்டும் நிகழக்கூடியது. ஆவியாக்க வீதம் அல்லது பரப்பு
இவற்றை அதிகரிப்பதினால் ஆவியாக்கத்தை அதிகரிக்க
முடியும். ஆவியாக்கம் எந்த அளவிற்கு நீர்மப் பரப்போடு
மட்டும் தொடர்புடையதாக இருக்கிறது என்பது அந்த
நீர்மத்தின் ஆவி அழுத்தத்தைப் பொறுத்தது. வெப்பநிலை
அதிகரிக்க பொதுவாக ஆவியழுத்தம் அதிகரிக்கும்.
ஆவியழுத்தம், இயல் வெளி அழுத்தத்தை எட்டும் போது
நீர்மம் கொதிக்கிறது . அப்போது ஆவியாக்கம்
நீர்மத்தின் பரப்பில் மட்டுமின்றி பருமனில் எங்கும்
நிகழ்கிறது . எவ் வெப்பநிலையில் ஆவியாக்கம் இப்படி ஏற்படுகின்றதோ,அவ் வெப்பநிலை, அந் நீர்மத்தின்
கொதிநிலையாகும்.புற அழுத்தம் இயல்வெளி அழுத்தத்தை
விடத் தாழ்வுறும் போது நீர்மத்தின் ஆவியழுத்தம் ,
அந் நீர்மத்தை தாழ்வான வெப்பநிலையில்
கொதிநிலையை எட்டுமாறு செய்கிறது . அது போல
புற அழுத்தம் இயல்வெளி அழுத்தத்தை விடக் கூடுதலாகும் போது ,நீர்மத்தின் ஆவி அழுத்தம் அந் நீர்மத்தை
உயர் வெப்பநிலையில் கொதிநிலையைப் பெறச் செய்கிறது.
                                                         ****************


2.பருப்பு வகைகள் பொதுவாக கொதிநீரில் வேக
வைக்கப்படுகின்றன. இது மென்மையான காய்கறிகளைச்
சமைப்பதைவிடச் சற்று கடினமானது.
பருப்பின் செல்களில் நீர் ஊடுருவி அதை விரிவடையச்
செய்து உடையச்செய்வதால் பருப்பு மென்மையகி
விடுகிறது. நுண்துளை வழியாக நீர்
ஊடுருவிச் செல்வது தடைப்படுமானால் பருப்பு வேக
அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது .நேரில் உப்பைச்
சேர்க்கும் போது கரைசலின்ஊடுபரவழுத்தம் காரணமாக
பருப்பில் நீர் ஊடுபரவுதல் தடைப்படுகிறது .
மேலும் பருப்பிலிருந்து நீர் வெளியேறுவதும் இதனால்
தூண்டப் படுகிறது .



 

arika iyarppiyal

துளிகளாகப் பெய்யும் மழை






மழை என்பது மேகம் குளிர்விக்கப் படுவதால் நீராகச் சுருங்கி
மீண்டும் பூமியில் விழுவதாகும். ஆனால் மழை பெய்யும்
போது அருவி போல அல்லாது துளிகளாக
விழுகின்றது .மழை அருவி போலக் கொட்டினால் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து நிகழும். ஏனெனில் அதன்
நிலையாற்றல் மிகவும் அதிகம். நில அரிப்பு
ஆங்காங்கே ஏற்படும் .கட்டடங்கள் பெரும் சேதமடையும். உயிரினங்களுக்குப் பாதுகாப்பாக இயற்கையே
மழையை சிறு துளிகளாக விழுமாறு செய்துள்ளது .
இது எப்படி இயலுவதாகின்றது ?

                                           *******************

. மேகங்கள் நீர் மூலங்களிலிருந்து ஆவியாகித் திரண்டு
தெவிட்டிய நிலையில் இருக்கும் . மேகங்கள் உருவாகும்
போது  நீர்த்துளிகளின் விட்டம் 1 -10 மைக்ரான்
(1 மைக்ரான் = 10 ^6 மீட்டர்)நெடுக்கையில் இருக்கும் .
நீர்த் துளி உருவாக தூசி போன்ற கரு
வேண்டும்.தட்ப வெப்ப மாறுதலால் ஒரு மேகம்
விரிவடையும் போது அது ஒரு செங்குத்து திசை
வேகத்தைப் ( 1 - 10 மீ/வி ) பெறுகிறது .அதனால் நீர்
துளிகள் மேலேடுத்துச் செல்லப்படுகின்றன . மேலே
செல்லச் செல்ல வெப்பநிலை குறைவதால்
கூடுதலான தெவிட்டிய ஆவி நீர்த் துளிகள் மீது
படிந்து பெரியதாக வளர்கின்றன .இந்த
நடைமுறை மிகவும் மெதுவாக நடைபெறுகிறது .
இரு நீர்த் துளிகள் மோதி இணையும் போது பெரிய
கனமான நீர்த் துளிகள் உருவாகின்றன .
கனமான இவை மேலும் மேல் நோக்கிச் செல்ல
முடியாததால் கீழே மழைத் துளிகளாக விழுந்து
விடுகின்றன . அதாவது மேலெழுந்து செல்லும்
காற்றால் மழைத் துளியின் மீது செயல்படும் இயக்க
விசையை விட அதன் எடை அதிகமானால் நீர்த்துளி
கீழே விழுந்து விடுகிறது .இதனால்
மழை அருவி போலக் கொட்டுவதில்லை .

Wednesday, December 15, 2010

ஓப்ஹிசூயஸ் (Ophiuchus)


                                                       ஓப்ஹிசூயஸ் (Ophiuchus)



பாம்பைக் கையில் பிடித்து வைத்திருப்பவர் போலத்
தோன்றுவதாக இவ் வட்டாரத்தைக் கருதுவர்.
இது வடக்கில் ஹெர்குலஸ்லிருந்து பேரண்ட
நடுவரைக் கோட்டைக் கடந்து தெற்கில்
ஸ்கார்பியஸ் வரை விரிந்துள்ளது.
இது மருத்துவத்திற்கான கிரேக்க கடவுளான
அசிலிபியசை (asclepius )க் குறிப்பதாகக் கூறுவார்கள்.
இதுவே பிற்காலத்தில் மருத்துவ முறைகளுக்கான
ஒரு குறியீடாக விளங்கியது.


இவ் வட்டாரத்தின் தோற்றப் பிரகாச மிக்க விண்மீனான
ராஸ்அல்ஹாக் (Rasalhague ) எனப்படும் ஆல்பா (α)
ஓப்ஹியூச்சியின் தோற்ற ஒளிப்பொலிவெண்
2.1 ஆகும். அரேபிய மொழியில் இதற்கு
பாம்பாட்டியின் தலை என்று பொருள். இது
47 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ளது .

இவ் வட்டாரத்தின் பிற விண்மீன்கள்

84 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2. 43 தோற்ற
ஒளிப்பொலிவெண்ணுடன் சபிக் (sabik ) என்ற
ஈட்டா ஓப்ஹியூச்சியும், 4.58 ஒளி ஆண்டுகள்
தொலைவில் 2. 54 ஒளிப் பொலிவெண்ணுடன்
கூடிய ஹான் (Han ) என்ற சீட்டா(ς) ஓப்ஹியூச்சியும் ,
170 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.73
ஒளிப்பொலிவெண்ணுடன் யெட் பிரியார்(yed prior)
என்ற டெல்டா(δ) ஓப்ஹியூச்சியும், 82 ஒளி ஆண்டுகள்
தொலைவில் 2.76 ஒளிப்பொலிவெண்ணுடன்
சிபெல்ராய்(cebelrai) என்ற பீட்டா (β) ஓப்ஹியூச்சியும்,
108 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .23 ஒளிப்
பொலிவெண்ணுடன் யெட் போஸ்டீரியர்(Yed Posterior)
என்ற எப்சிலான் (ε) ஓப்ஹியூச்சியும், 166 ஒளி ஆண்டுகள்
தொலைவில்3 .82 ஒளிப்பொலிவெண்ணுடன் மார்பிக்
(Marfik) என்ற லாம்டா(λ) ஓப்ஹியூச்சியும் உள்ளன.
கேப்பா(κ),தீட்டா(θ), உப்சிலான்(υ) , காமா(γ) ஓப்ஹியூச்சி
விண்மீன்கள் முறையே 86 ,563 ,153 ,95 ஒளி
ஆண்டுகள் தொலைவிலும் 3.19, 3.27, 3.32, 3.75
தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடன் அமைந்துள்ளன.


தேள் வடிவ வட்டாரத்திலுள்ள அண்டாரெசுக்கு
வடக்காக ரோ (ρ) ஒப்ஹியூச்சி என்ற
பலவிண்மீன்களாலான தொகுப்பு விண்மீன்
உள்ளது. இதில் 4 .6 ஒளிப் பொலிவெண்ணுடைய
ஒரு В வகை விண்மீன் அகன்ற இடைவெளியுடன்
ஒளிப் பொலிவெண் 6.8 மற்றும் 7.3 உடைய இரு
துணை விண்மீன்களைப் பெற்றுள்ளது.
தொலைநோக்கி, முதன்மை விண்மீன் 5 . 7 ஒளிப்
பொலிவெண்ணுடன் கூடிய நெருக்கமான ஒரு
துணை விண்மீனைக் காட்டியுள்ளது .இந்த நான்கு
விண்மீன்களும் 'V ' வடிவத்தொகுப்பாக உள்ளன.
இது IC 4604 என்று பதிவு செய்யப்பட்ட ஒரு நெபுலாவில்
புதைந்திருக்கின்றது.



இவ் வட்டாரத்தில் ஒரு சில இரட்டை விண்மீன்கள்
உள்ளன. 20 ஒளி ஆண்டுகள் தொலைவில், ஏறக்குறைய ஒத்த வடிவத்துடன் தோற்ற ஒளிப்பொலிவெண் 5 .2 உடன் ஆரஞ்சு
நிறமுடைய இரு குறு விண்மீன்களாலான இரட்டை
விண்மீனாகும். இதன் சுற்றுக்காலம் 500ஆண்டுகள் என
மதிப்பிட்டுள்ளனர். 70 ஒப்ஹியூச்சியும் ஓர்
இரட்டை விண்மீன்.17 ஒளி ஆண்டுகள் தொலைவில்
88 ஆண்டுகள் சுற்றுக்காலத்துடன், தோற்ற ஒளிப்
பொலி வெண் 4 .2 , 6 . 1 உடைய ,மஞ்சள் மற்றும்
ஆரஞ்சு நிறமுடைய ,சூரியனை விட நிறை தாழ்ந்த
இரு விண்மீன்கள் இதிலுள்ளன.பூமியிலிருந்து நோக்கும்
போது இவை இரண்டும் மெதுவாக விலகிச் செல்வது
போலத் தோன்றுகின்றன.தற்பொழுது இவை 4 .6
வினாடிகள் கோண விலக்கத்துடன் தெரிகின்றன.
இவ் வட்டாரத்தில் பிரக்சிமா மற்றும் ஆல்பா
சென்டாரிக்கு அடுத்து நமக்கு மிக அருகில் இருக்கும்
விண்மீனான பெர்னார்டு விண்மீனும் இவ் வட்டாரத்தில்
உள்ளது. 1857 - 1923 -ல் வாழ்ந்த பெர்னார்டு எட்வர்டு
எமர்சென் என்ற வானவியலார் இதைக்
கண்டுபிடித்ததால், அவர் பெயரையே இவ்விண்மீனுக்குச்
சூட்டியுள்ளனர் .[வியாழனின் துணைக் கோளான
அமெல்தியாவைக் கண்டுபிடித்தவர் இவரே ஆவார்.
9 வயதில் போட்டோ படம் எடுக்கும்
நிலையமொன்றில் பணியாற்றியவர் ,இரவில்
பொழுதுபோக்காக விண்மீன்களைப் பின்தொடர்ந்தார்.
30 வயதிற்குள் 10 வால் விண்மீன்களைக்
கண்டுபிடித்தார். ஒவ்வொரு முறையும் இதற்காக 200
டாலர் அன்பளிப்பு பெற்றார். இதுவே அவருக்கு
வானவியலில் ஈடுபாடு கொள்ளத் தூண்டியது ].

பெர்னார்டு விண்மீன்


பெர்னார்டு விண்மீன் சிவப்பு நிறக் குறு விண்மீனாக
ஓப்ஹியூச்சி வட்டாரத்தின் வடக்கெல்லையில்
உள்ளது. . இவ் விண்மீன் பிற விண்மீன்களைக் காட்டிலும்
உயரளவு தனித்த தன்னியக்கத்தைப்
பெற்றுள்ளது. ஓராண்டில் 10 .4 வினாடிகள் கோண விலக்கம்
பெறுமாறு, அதாவது 180 ஆண்டுகளில் முழு நிலவின்
விட்டத்திற்குச் சமமான தோற்றத் தொலைவை
கடக்குமாறு இடம் பெயருகிறது. இதன்
நிறமாலையில் காணப்படும் பெயர்ச்சி இவ் விண்மீன்
108 கிமீ /வி என்ற உயர் வேகத்தில் நம்மை நோக்கி
வருவதாகத் தெரிவிக்கிறது. அதனால் ஒரு நூற்றாண்டு
காலத்தில் இதன் தொலைவு ௦. 036 ஒளி ஆண்டுகள்
குறைகின்றது. 11000 ஆண்டில் இது மிக நெருக்கமாக
3.85 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் என
மதிப்ப்பிட்டுள்ளனர். இது ஏற்கனவே 10 பில்லியன்
ஆண்டுகள் வயதானதாக இருந்தாலும் இன்னும் 40
பில்லியன் ஆண்டுகள் ஒளிரும் என்றும் அதன்
பின்னரே இது குளிர்ந்து கருந்துளை (Black hole)
குறு விண்மீனாக உருமாறும் என்றும்
கூறுகின்றார்கள். தற்பொழுது 5 .9 ஒளி ஆண்டுகள்
தொலைவில் உள்ள இதன் ஒளிர் திறன்
சூரியனின் ஒளிதிறனில் 2000 ல் ஒரு பங்கு என்றும்,
ஆரம் 0.2 மடங்கு என்றும், நிறை 0.2 மடங்கு என்றும்
அறிந்துள்ளனர். இதன் தோற்ற ஒளிப் பொலி வெண் 9 .54 .

இவ் வட்டாரத்தில் 4000 ஒளி ஆண்டுகள் தொலைவில்
9000 வானியல் அலகு குறுக்கில் NGC 6572
என்று பதிவு செய்யப்பட்ட கோளக நெபுலா ,தோற்ற
ஒளிப்பொலிவெண் 9 உடன், நீள் வட்ட வடிவில்
உள்ளது. இது 70 ஓப்ஹியூச்சிக்கு வடக்காக
அமைந்துள்ளது.

20 விண்மீன்களுடனும் தோற்ற ஒளிப்பொலிவெண்
4.2 உடனும் IC 4665 மற்றும் 60 விண்மீன்களுடன்
தோற்ற ஒளிபொலிவெண் 4.6 உடனும் NGC 6633
என்று பதிவு செய்யப்பட்ட தனிக் கொத்து
விண்மீன்கள் இவ் வட்டராத்தில் உள்ளன. மேலும்
இவ் வட்டாரத்தில் எண்ணிறைந்த கோளகக் கொத்து
விண்மீன் கூடங்கள் காணப்படுகின்றன. அவற்றுள்
சில M.9 (NGC 6333), M.10 (NGC 6254), M.12 (NGC 6218),
M.14(NGC 6402) , M.19 (NGC 6273) ,M.62 (NGC 6266),
M.l07 (NGC 6171) போன்றவைகளாகும். .இதில் M.14
குறைந்த செறிவுடன் கூடிய மையமும்,சிறிய
அளவில் நீள் வட்ட வடிவமும் கொண்டுள்ளது.
M.19 ,27000 ஒளி ஆண்டுகள் தொலைவில் சற்று
நீட்சியுற்ற நீள் கோள வடிவிலும், M.62 மிகவும்
ஒழுங்கற்ற வடிவிலும் இருக்க M..107 கரு வடிவப்
பகுதிகள் உள்ளனன். M.10ம் , M.12 ம் இவ் வட்டாரத்தின்
மையத்தில், பேரண்ட நடுவரைக் கோட்டுக்கு ஓரளவு
கீழே அமைந்துள்ளன. இவை முறையே 19,16
ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.
இவை இரண்டும் ஏறக்குறைய சம எண்னிக்கையில்
விண்மீன்களைக் கொண்டிருந்தாலும் M.12 சற்று
கூடுதலாக வெப்பமிக்க விண்மீன்களைக் கொண்டுள்ளது.

M.62 ம் , M.19 ம் இவ் வட்டாரத்தின் தெற்கத்திய
எல்லையில் சற்றேறக் குறைய சம தொலைவில்
(23 ஆயிரம் ஒளி ஆண்டுகள்) இரட்டை விண்மீன் போல
இரட்டை அண்டங்களாக உள்ளன.M.19ல் கூடுதலான
விண்மீன்களும்M.62 ல் சில குளிர்ந்த விண்மீன்களும்
உள்ளன.

Tuesday, December 14, 2010

arika iyarppiyal

1.ஒட்டிக் கொண்டிருக்கும் பனிக்கட்டிகள்


ஒரு பனிக் கட்டியில் உப்பைத் தூவி மற்றொரு
பனிக் கட்டியை அதன் மீது வைத்தால் ஒட்டிக்
கொள்வதேன் ?

2. பனிக் கட்டி உருகினால் நீர்மட்டம் உயருமா ?


வாய் வரை நீருடன் கூடிய ஒரு பீக்கரில் உள்ள நீரில்
பனிக் கட்டித் துண்டு மிதக்கிறது .புற வெப்பநிலை
அதிகமாக இருப்பதால் பனிக்கட்டி உருகத்
தொடங்குகிறது .உருகிய நீர் வழிந்து வெளியேறுமா?
அல்லது பனிக்கட்டி உருகவே உருகாதா?
                                 * * * *  * *  * * * *
1.பனிக்கட்டியின் மேற்புரப்பரப்பில் ஒரு மெல்லிய
நீர்ப் படலம் இருக்கும். உப்பை பனிக்கட்டியின் மீது
தூவினால் அது இந்த நீரில் கரைகிறது. இது
பனிக்கட்டியின் உருகுநிலையைக்
குறைத்து விடுகிறது. அதனால் உப்புக் கரைந்த
நீராலான பனிக்கட்டியின் வெப்பநிலை 0 டிகிரி C க்கு
கீழே குறைந்து விடுகிறது . எனினும்
அந்நிலையிலும் கூட பனிக்கட்டியின் புறப்
பரப்பில் உருகவே செய்கின்றன . மற்றொரு
பனிக்கட்டியை அதன் மீது வைக்க அவற்றில்
உள்ள நீர் படலங்களால் ஒருங்கிணைகின்றன .
எல்லா உப்பும் கரைந்து முடிந்த பின்பு ,
பனிக்கட்டியின் உருகு நிலை 0 டிகிரி C க்கு
உயருகிறது . இதனால் பனிக்கட்டிகளிடையே
உள்ள நீர்ப்படலம் உறைந்து விடுகிறது .
அதனால் இரு பனிக்கட்டித் துண்டுகளும்
ஒட்டிக் கொள்கின்றன .

2.நீர் மட்டம் மாறாதிருக்கும் . ஏனெனில்
பனிக்கட்டியின் எடை மிதப்பு விசையினால்
ஈடுசெயயப்படுகிறது . அதாவது பனிக்கட்டியினால்
வெளியேற்றப்பட்ட நீரின் எடைக்குச் சமமாக
அப் பனிக்கட்டியின் எடை இருக்கிறது .எனவே
பனிக்கட்டி உருகும் போது அதனால்
இடம் பெயர்த்தப்பட்ட நீரின் கனஅளவிற்குச்
சமமான கன அளவுள்ள நீராக மாறுகிறது .

Monday, December 13, 2010

Vinveliyil ulaa

Vinveliyil Ulaa


ஹெர்குலஸ்


விண்வெளியில் அதிகத் தோற்றப் பரப்பை அடைத்துள்ள
பெரிய வட்டார விண்மீன் கூட்டங்களுள் இதுவும் ஒன்று.
இது பெரிய வட்டாரமாக இருப்பினும் .இதில் அதிக
முக்கியத்துவம் பெற்ற விண்மீன்கள் ஏதும் இல்லை.

கிரேக்க நாட்டில் மாவீரனாகத் திகழ்ந்த ஹெர்குலஸ்சை
பெருமைப்படுத்தும் விதமாக இவ் வட்டாரத்திற்கு
அவன் பெயர் சூட்டியுள்ளனர் .இதில் 150 விண்மீன்களை
இனமறிந்துள்ளனர்.பெரும்பாலானவை வெறும் கண்களுக்குப்
புலப்பட்டுத் தெரிகின்றன. ஹெர்குலஸ் விண்மீன் வட்டாரம்
பூட்டெஸ் (Bootes ) வட்டாரத்திலுள்ள ஆர்க்டூரசுக்கும்
வேகா (vega) வட்டாரத்திற்கும் இடையில்
அமைந்திருக்கின்றது. . ஹெர்குலஸ்சின் தலை தெற்கில் ஆல்பா ஹெர்குலஸ் குறிக்கப்பட, பாதங்கள் வடக்கத்திய விண்மீன்களால்
சித்தரிக்கப்பட்டுள்ளன. மைசினேயின் அரசனான
யுரைஸ்தியஸ், ஹெர்குலஸ்யை அழைத்து அவனிடம் 12
அடிமைகளைக் கொடுத்து .டிராகானைக் கொல்லுமாறு கட்டளையிடுகின்றான். இந்த டிராகன் அடுத்துள்ள டிராகோ
(Dirago ) வட்டாரத்தால் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஹெர்குலஸ் வட்டாரத்தில் ஹெர்குலஸ் தனது வலது
முழங்காலை மடக்கி தரையில் வைத்து அமர்ந்து கொண்டு
இடது பாதத்தை டிராகானின் தலை மீது வைத்திருப்பது
போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ் வட்டாரத்தில் ஆல்பா ஹெர்குலஸ்யை
விடப் பீட்டா ஹெர்குலஸ் தோற்றப் பிரகாசம் மிக்க
விண்மீனாகும். ராஸ்அல்கீத்தி (Rasalgethi) என்ற ஆல்பா
ஹெர்குலஸ் 218 ஒளி ஆண்டுகள்
தொலைவில் உள்ள சிவப்பு நிறப் பெரு விண்மீனாக
(Red giant) உள்ளது.ராஸ்அல்கீத்தி என்றால்
மண்டியிட்டவன் தலை என்று அரேபிய
மொழி பொருள் தருகின்றது. இதன் பரப்பு தொடர்ந்து விரிந்து
சுருங்குவதால் இது ஒரு மாறொளிர் விண்மீனாக
விளங்குகின்றது .அதனால் இதன் தோற்ற ஒளிப்பொலிவெண்
3 .1 முதல் 3 .9 வரை மாற்றத்திற்கு உட்படுகின்றது .இது
ஒரு M5 வகை விண்மீனாகும். இது ஒரியனில்(Orion) உள்ள
பெடல்ஜியூஸ் (Betelgeuse) சை விட ப் பெரியது .
ஆல்பா(α) ஹெர்குலஸ்லிருந்து 4 .6 வினாடி கோண விலக்கத்தில்
மஞ்சள் நிறத் துணை விண்மீன் ஒன்று 5 .4 என்ற
தோற்ற ஒளிப் பொலி வெண்ணுடன் ஹெர்குலஸ்சை
111ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.
இத் துணை விண்மீனே ஒரு நிறமாலை வகை இரட்டை
விண்மீனாகக் காட்சி அளிக்கின்றது. இதன் சுற்றுக் காலம்
52 நாட்கள் என்றும், துணை மற்றும் துணைக்குத் துணை
விண்மீன்கள் விரிவடையும் வளிம மண்டலங்களைக்
கொண்டுள்ளன என்றும் அறிந்துள்ளனர்.

இதன் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல
800 மடங்காக உள்ளது. கொரினிபோரஸ் (koreneforos ) என்ற
பீட்டா(β) ஹெர்குலஸ் 102 ஒளி ஆண்டுகள் தொலைவில்
தோற்ற ஒளிப் பொலி வெண்2 .77 உடன் நிறமாலையால்
G .8 வகை விண்மீனாக உள்ளது.எப்சிலான் ஹெர்குலஸ்
85 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .92 தோற்றஒளிப்பொலி
வெண்னுடன் A0 வகை விண்மீனாகவும் மியூ(µ)ஹெர்குலஸ்
27 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .42 தோற்ற ஒளிப்பொலி
வெண்னுடன் G5 வகை விண்மீனாகவும் காமாஹெர்குலஸ்
140 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .75 தோற்ற ஒளிப்பொலி
வெண்ணுடன் A9 வகை விண்மீனாகவும் உள்ளன.
ரோ(ρ) ஹெர்குலஸ் ஒரு தோற்ற இரட்டை விண்மீனாகும்.
நெடிய இடைத் தொலைவுடன் தோற்றத்திற்கு அருகருகே
இருப்பது போலத் தோன்றுவதால் இது உண்மையான இரட்டை விண்மீனில்லை .இவற்றைத் தொலை நோக்கியால் பகுத்துணர
முடியும். இவற்றின் ஒளிப்பொலிவெண்கள் முறையே 4 .6 , 5 .4
ஆகும்.

ஹெர்குலஸ் வட்டாரத்தின் சிறப்பு அப்பகுதியில் காணப்படும்
கோளாகக் கொத்து விண்மீன்கூட்டங்களாகும்.இவற்றுள்
M .13 மற்றும் M .92 என்று பதிவு செய்யப்பட்ட விண்ணுருப்புகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .M 13 வடக்கு வானில் தோற்றத்தில்
அரை நிலவுப் பரப்பில் காணப்படுகின்றது. 23500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதில் சுமார் 5 லட்சம் விண்மீன்கள் உள்ளன .அண்டகக் கொத்து விண்மீன்கள் போலன்றி இதில் பல வெப்பமிக்க பெரு விண்மீன்கள் உள்ளன. எனினும் பிரகாசமிக்க விண்மீன்கள் குளிர்ந்த சிவப்பு நிறப் பெரு விண்மீன்களாக
இருக்கின்றன. வெப்ப மிக்க நீல நிற விண்மீன்கள் இதில்
மிக அரிதாகக் காணப்படுகின்றன. ஒரு சில விண்மீன்கள்
நம்முடைய சூரியன் போல இருக்கின்றன.

கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் பொதுவாக
அதிகத் தொலைவிலும் மிக அதிக எண்ணிக்கையில் மாறொளிர் விண்மீன்களைக் கொண்டிருக்கும். M .13 ல் , 15 குறுகிய
அலைவு கால சிபிட்ஸ் (Cipids ) வகை மாறொளிர் விண்மீன்களை அறிந்துள்ளனர்.

கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் 130 - 300
ஒளி ஆண்டுகள் நெடுக்கைக்குட்பட்ட வெளியில்
அடர்த்தியாகச் செரிவுற்றிருக்கும் விண்மீன்கள் உள்ளன.
மிகவும் கவனத்தைக் கவருவது என்னவென்றல் இதில் தூசிப் படலங்களோ,கரு வடிவங்களோ அல்லது படர்ந்து சூழ்ந்து
காணப்படும் நெபுலாக்களோ(Nebula)சிறுதும் காணப்படவில்லை.
மேலும் கோளாகக் கொத்து விண்மீன் கூட்டங்கள்
நிலைப்புத்தன்மை மிக்க கட்டமைப்புகளாக உள்ளன.
அவை எப்படி உருவாயின என்பது சரியாகத்
தெரியாவிட்டாலும் பல டிரில்லியன்(trillion)(10 ^ 12 )
ஆண்டுகளுக்கு அவை அடிப்படைமாற்றங்கள் ஏதுமின்றி
தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதை மட்டும் உறுதியாகக்
கூறலாம்.

அயோட்டா (ϊ) மற்றும் ஈட்டா (ε) ஹெர்குலஸ்க்கு மிகச்
சரியாக இடையில் M .92 அமைந்துள்ளது. இது M .13 யை
விடவும் அதிகத் தொலைவில் (24000 ஒளி ஆண்டுகள்)
இருக்கின்றது. இதில் பல வெப்ப மிக்க பெரு விண்மீன்கள்
இருப்பினும் M .13 யை விட குறைந்த எண்ணிக்கையிலேயே
உள்ளன.

Friday, December 10, 2010

விண்மீன்களைப் பார்க்கும்போது அவை வெண்ணிறமுள்ளவை போலத் தோன்றும் .ஆனால் உற்று நோக்கினால், அவற்றிற்கிடையே நிற வேறுபாடுகளைக் காணமுடியும்,. –


நீலம்,வெண்மை,சிவப்பு, பொன்னிறம் போன்ற

நிறங்களில் விண்மீன்கள் ஒளிர்கின்றன. இரவில் இந்த நிறங்களுடன் ஒளிரும் விண்மீன்களைக் காண









நேரிடும் போது இயற்கையின் மௌனமே நம்மை எல்லையில்லா

வியப்பில் ஆழ்த்திவிடுகின்றது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது பற்றி ஏதும் அறியாதிருந்தார்கள். ஆனால் இயற்பியலார் அணுவின் கட்டமைப்பு பற்றியும் ,ஒளியின் உண்மையான மூலம் பற்றியும் அறிந்து கொண்ட பின் இதற்கு தெளிவான விளக்கம் கொடுக்க முடிந்தது.

விண்மீன்களின் நிற வேறுபாடுகளை கரும்பொருள் கதிர் வீச்சு (Black body radiation) மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்



ஒரு விண்மீனின் நிறமாலை, சில நூறு கெல்வின் முதல் பல

இலட்சம் கெல்வின் வரையிலுள்ள வெப்பநிலைகளில்

இருக்கும் கரும் பொருள் உமிழும் கதிர்வீச்சை ஒத்திருக்கிறது.

இந்த உண்மை, விண்மீன்கள் எல்லாம் ஏறக்குறைய கரும் பொருள் ஒத்தவை என்றும், அவற்றின் நிற பேதம் புறப்பரப்பு வெப்ப நிலையைச் சார்ந்திருக்கின்றது என்றும் தெரிவிக்கின்றது.

குளிர்ச்சியான விண்மீன் (நிறமலைக் குறியீடு K மற்றும் M ஆகும்) இவை தன் ஆற்றலில் பெரும் பகுதியை சிவப்பு நிற

அலைகளாகவும், அகச்சிவப்பு கதிர்களாகவும் வெளிப்படுத்துகின்றனஅதனால் அவை சிவப்பாகக் காட்சி தருகின்றன.

வெப்ப மிக்க விண்மீன்களின் நிறமலைக் குறியீடு O மற்றும் B ஆகும். இவை தன் ஆற்றலின் பெரும் பகுதியை நீலம் மற்றும் புறஊதாக் கதிர்களாகஉமிழ்வதால் நீல நிறத்துடன் தெரிகின்றன.

ஒரு விண்மீனின் புறப்பரப்பின் வெப்பநிலையை அறிவதற்கு நாம் கரும் பொருளின் வெப்பநிலைக்கும் அது உமிழும் ஆற்றலின்

பெரும் பகுதியை எந்த அலை நீளத்தில் உமிழ்கிறது

என்பதற்கும் உள்ள தொடர்பை நாம் பயன் படுத்த முடியும். ஒரு கரும் பொருளின் வெப்ப நிலையை உயர்த்த பெரும் பகுதி ஆற்றலின் அலை நீளம் நிறமாலையில் குறைந்த அலைநீளமுள்ள பக்கமாக இடம்

பெயர்கின்றது.

புற ஊதா (U),நீலம் (B),கட் புலனறி (V) போன்ற பகுதிகளில் ஒரு விண்மீன் உமிழும் ஆற்றலைத்

தக்க வடிகட்டிகளைக் கொண்டு அளவிட்டறிவார்கள். ஒளிப் பாயத்தை (Flux ) (ஆற்றல்/வினாடி/ பரப்பு ) க் கொண்டு மதிப்பிடப்படும்

F(U)/F(B) மற்றும் F(B)/F(V) தகவுகள் விண்மீனின் நிறத்தை தெரிவிக்கும் அளவுக் கூறுகளாகக் கொண்டுள்ளார்கள் இவற்றின் மதிப்பு அதிகமாக இருப்பின், விண்மீனின் புறப்பரப்பின் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் எனலாம்.

அண்டாரெஸ் மற்றும் பெடல்ஜியூஸ் போன்ற விண்மீன்கள் சிவப்பு நிறத்துடன் தோன்றும் பெருஞ்சிவப்பு விண்மீன்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் Red Giants என்பர்.

பொதுவாக பெருஞ் சிவப்பு (red giant) விண்மீன்களின் ஆரம் சூரியனின் ஆரத்தைப் போல

10-100 மடங்கு இருக்கும். இவற்றின் ஆற்றல் மூலத்திற்கு முழு முதல் காரணமாக இருந்த ஹைட்ரஜனின் இருப்பு ,புறவோட்டுப்பகுதியை விட , உட்பகுதியான உள்ளகத்தில் விரைவில் தீர்ந்து போய்விடுகின்றது. ஏனெனில் உள்ளகத்தின் வெப்பநிலை புறவோட்டுப்பகுதியை விட அதிகமாக இருப்பதால் ,ஹைட்ரஜன்(Hydrogen) எரியும் வீதம் அங்கு அதிகமாக இருப்பதுதான்.
உண்மையில் பெருஞ் சிவப்பு விண்மீன்கள் பெரிய சிவப்பு கோளமாகவும் ,துல்லியமான வரப்பெல்லையுடனும் காணப்படுவதில்லை.
விண்மீன் ஊடகத்தின் மிகத் தாழ்ந்த அடர்த்தியினால் பெருஞ் சிவப்பு விண்மீன்கள்
துல்லியமான வரப்பெல்லையுடன் கூடிய ஒளி மண்டலத்தை (photosphere) கொண்டிருப்பதில்லை .அதனால் விண்மீன் corona வரை
விரிந்துள்ளது. ௦o.5 முதல் 6 சூரிய நிறை (Solar mass) வரை
பெருஞ் சிவப்பு விண்மீன்கள் முதன்மைத் தொடர் (Main sequence) விண்மீன்களிளிருந்து பரிணாம வளர்ச்சி
பெறுகின்றன. முதன்மைத் தொடர் நிறமாலையால்
A யிலிருந்து K வகைக்கு மாற்றம் பெரும் விண்மீன்களே
பெருஞ் சிவப்பு விண்மீன்களாக மாறுகின்றன.



பிரபஞ்ச வெளியில் நிறைந்திருக்கும் அணுக்கள் ஒன்றையொன்று கவர, அதுவே இறுதியில் ஒரு பெரிய வளிமக் கோளமாக
உருவாகின்றது. இதில் முக்கியமாக 99.9 சதவீதம் ஹைட்ரஜனும் மிகச் சிறிதளவு ஹீலியமும் மற்றும் ஒரு சில உலோக அணுக்களும்
இருக்கும். பொதுவாக இந்த தனிமக் கூறுகள் விண்மீனின் பருமன் முழுவதிலும் சமமாக விரவி இருக்கும். ஈர்ப்பு சுருக்கத்தினால், வளிமக் கோளம் புறவெளி ஊடகத்திலிருந்து பிரிக்கப்படுவதுடன்,வெப்ப மாற்றீடற்ற(adiabatic) வழிமுறையால் வளிமக் கோள த்தின் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. அந்நிலையில் விண்மீனை முதன்மைத் தொடர் விண்மீன் என்பர்.வெப்பநிலை உயர்வு சில மில்லியன் கெல்வின் எட்டியவுடன் ஹைட்ரஜன் அணுக்கள் உயர் வெப்ப நிலையில் ஒன்றிணைந்து ஹீலிய அணுக்கருக்களாக மாற்றமடைகின்றன. இதையே அணுக்கருப் பிணைப்பு வினை(nuclear fusion) என்று கூறுவார். இதனால் ஈர்ப்புச் சுருக்கம் வெப்ப அழுத்தத்தால் ஈடு செய்யப்பட்டு ஒரு சம நிலையை அடைகின்றது. முதன்மைத் தொடர் விண்மீனாக இருக்கும் உள்ளகத்திலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் தொடர்ந்து ஹீலியமாக மாறுகின்றன. முதன்மைத் தொடர்ச்சியில் விண்மீனின் வாழ்க்கை, உள்ளகத்தில் ஹைட்ரஜனின் இருப்பு சுழியாகும் வரை மட்டுமே நீடிக்கின்றது.

சூரியனுக்கு முதன்மைத் தொடர்ச்சி வாழ்க்கை மில்லியன் ஆண்டுகளாகும் .பொதுவாக ஒரு விண்மீனின் முதமைத் தொடர்ச்சி வாழ்க்கை, அது நிறைமிக்கதாக இருப்பின் குறைவாகவும் ,தாழ்ந்த நிறையுடையதாயின் கூடுதலாகவும் இருக்கும்.

உள்ளகத்தில் ஹைட்ரஜன் தீர்ந்த பிறகு ,அங்கு அணுக்கரு பிணைப்பு வினைகள் நிறுத்தப்படுகின்றன. .
அதனால் உள்ளகம், அது வரை தடுத்து நிறுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஈர்ப்புச்சுருக்கத்தால் மீண்டும் சுருங்கத் தொடங்குகிறது. வெப்ப மாற்றீடற்ற வழிமுறையால்
விளையும் வெப்பம் , விண்மீனின் புறக்கூடுகளுக்குக் கடத்தப்பட்டு, அங்குள்ள ஹைட்ரஜனை ஹீலியமாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது. வெப்ப மாற்றீடற்ற வழிமுறையில் உயரளவு வெப்பத்தையும் பெற்று, அதிக வெப்பநிலையை எட்டுமானால் புறக்கூடுகளில் அணுக்கருச் சேர்க்கை வினை வீதம் அதிகமாக இருக்கும். அப்போது விண்மீனின் ஒளிர் திறன் அதிகமாக இருக்கும். இத்தகைய விண்மீனின் புறக்கூட்டுப் பகுதிகள் ஈர்ப்புக்கு எதிராக விரிவடைகின்றது. இதனால் புறப்பரப்பின் வெப்பநிலை ஓரளவு குறைவாக இருக்கின்றது. தாழ்ந்த வெப்பநிலை, பரும பெருக்க விரிவு காரணமாக அந்த விண்மீன் பெருஞ் சிவப்பு விண்மீனாகக் காட்சி தருகின்றது.

உள்ளகத்தின் சுருக்கம் என்பது விண்மீனின் நிறையைப் பொறுத்தது.சூரியன் மற்றும் 2.57 சூரிய நிறையை விடக் குறைவான நிறையுடைய பெருஞ் சிவப்பு விண்மீன்களில் உள்ளகம் மிகவும் அடர்திமிக்கதாக இருக்கும்.. அதனால் அங்குள்ள எலெக்ட்ரான்கள்
ஒரே ஆற்றல் நிலையில் இருக்க இயலாததால் ஒன்றையொன்று எதிர்த்து விலக்குகின்றன. உள்ளகம் degenerate ஆக ஆனவுடன் அதன் உள்ளகம் தொடர்ந்து வெப்பப் படுத்தப்பட்டு
10 ^ 8 கெல்வின் வெப்ப நிலையை அடைகின்றது. இவ் வெப்ப நிலையில் ஹீலியம் அணுக்கருக்கள் அணுக்கரு சேர்க்கை வினையில் ஈடுபடுகின்றன. இதை ஹீலியம் flash என்பர். மிக நிறையுடைய விண்மீன்களில் சுருக்கத்திற்கு உள்ளாகும் உள்ளகம் இந்த வெப்பநிலையை degenerate ஆவதற்கு உகந்த அடர்நிலையை எட்டுவதற்கு முன்பே அடைகின்றது.
அதனால் ஹீலியம் எரிபொருள், ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்தவுடன் எரியத் தொடக்குகிறது. ஹீலியம் எரியத் தொடங்கியவுடன் விண்மீன் சுருங்ககத் தொடக்குகிறது. அதன் பிறகு அது பெருஞ் சிவப்பு விண்மீனாக இருப்பதில்லை.. ஹைட்ரஜன் போல ஹீலியமும் உள்ளகத்தில் முதலில் தீர்ந்ந்து போய் பின்னர் புறவோட்டுப்பகுதிகளில் எரியத் தொடங்குவதால் மீண்டுமொரு முறை பெருஞ் சிவப்பு விண்மீனாகின்றது.

மிகவும் நிறைமிக்க விண்மீன்கள்,உயர் அணுவெண் கொண்ட அணுக்களால் ஆன அணுக்கரு சேர்க்கை வினைகளை அடுத்தடுத்து
பின்பற்றுவதால்,பெருஞ் சிவப்பு விண்மீன் நிலையும் அடுத்தடுத்து தோன்றுகின்றது. எனினும் அது நீடித்திருக்கும் காலம் முன்னதை விடக் குறைவாகவே இருக்கும்.

சூரிய நிறையுடன் கூடிய ஒரு விண்மீன் கார்பன் அணுக்களை அணுக்கருச் சேர்க்கையால் இணைவதில்லை. பதிலாக பெருஞ் சிவப்பு நிலைக் கட்டத்தில் அந்த விண்மீன் தன புறக்கூடுப் பகுதியை வெளித் தள்ளிவிடுகின்றது. இதுவே கோளக ஒன்முகிற்படலமாக (Nebula) மாறுகின்றது. எஞ்சிய உள்ளகம் சிறு வெள்ளை விண்மீனாக (white dwarf) உருமாறுகின்றது.

விண்மீனின் பரிணாம வளர்ச்சியில் பெருஞ் சிவப்பு நிலைக் கட்டம், கோளக ஒன்முகிற்படலத்தின் உருவாக்கத்தோடு முற்றுப் பெறுகின்றது.

பெருஞ் சிவப்பு விண்மீனாக மாறாத விண்மீன்கள்.
தாழ்ந்த நிறையுடிய விண்மீன்களில் வெப்பச் சலன இயக்கம் (convective) தீவிரமாக இருக்கும். அதனால் மந்தமான ஹீலிய உருவாவதில்லை. பெருஞ் சிவப்பு விண்மீனாக உருமாறாது. எல்லா அணு எரிபொருளையும் எரித்துத் தீர்த்து விடுகின்றது.
இந்த விண்மீன்களை சிறுஞ் சிவப்பு விண்மீன்கள் (red dwarf) என்பர்.

இதன் கணக்கிடப்பட்ட வாழ்க்கைக் காலம் பேரண்டத்தின் வாழ்க்கைக் காலத்தி விட அதிகமாக இருக்கின்றது.
மிகவும் அதிக நிறைமிக்க விண்மீன்கள் மாபெருஞ் சிவப்பு (red super giant) ஆக மாறுகின்றன. அவை பெரும்பாலும் உடனழிவு விண்மீனாக (supernova) இறுதியில் முற்றுப்பெறுகின்றன.

Thursday, December 9, 2010

Vanna vanna ennangal

கொட்டிக் கிடக்குது கோடிக் கோடி இன்பம்




எங்கோ தொலைந்தது இன்பம்

எங்கோ மாண்டது மகிழ்ச்சி

எங்கும் தேடி அலைந்தேன்

ஒன்றும் கிடைக்கவில்லை தோழா

இயற்கைதரும் இன்பம் வேறு

நான் தேடும் இன்பம் வேறு

என்பதால் எந்நாளும் தோல்விதான்



சூரியோதயம் வானத் திரையில்

வரும் ஒரு நெடுந்தொடர்

ஒரே கதாநாயகன்

அதே காட்சி என்றாலும்

ஒவ்வொரு நாளும்

பூமியில் உயிரோட்டம்தான்

புதுப் பூக்களின் புன்சிரிப்பும்

பறவைகளின் ஆர்பாட்டமும்

அளவில்லாத மகிழ்ச்சிக்கு

உண்மையான அடையாளங்கள்



காலமெல்லாம் மனிதர்கள்

கண்ணிருந்தும் குருடர்கள்

Tuesday, December 7, 2010

Arika ar5iviyal-20

நுண் புழை ஏற்றத்தில் குழாயின் நீளம் குறைவானால் .......





ஒரு நீர்மத்தில் நுண் புழைக் குழாயின் ஒரு முனை அமிழ்ந்து இருக்குமாறு செங்குத்தாக நிறுத்தினால் நீர்மத்தின் மட்டம்
அதில் உயரும் .இதற்கு காரணம் பரப்பு இழுவிசை .இதன்
மேல் நோக்கிய செங்குத்துக் கூறு, நீர்மத் தம்பத்தின் எடையை
ஈடு செய்கின்றது.அக் குழாயில் இருக்கும் நீர்மத்
தம்பத்தின் உயரத்தை விட குழாயின் நீளம் குறைவாக
இருக்குமானால் என்ன நிகழும் ?


                                               *********************

நுண் புழையில் மேலுயரும் நீர்மத்திற்கு அதன் நீளம்
பற்றி அறியாததால் புழையில் நீர்ம மட்டம் உயரும் .
ஆனால் முனையில் வளைபரப்பின் ஆரம் அதிகரித்து
பரப்பு இழுவிசை கிடைமட்டம் நோக்கிச் சாயும் .
இதனால் அதன் மேல் நோக்கிய செங்குத்துக் கூறு குறைவாக ,
குறைந்த உயரமுள்ள நீர்தம்பத்தின் எடையைச்
சமன் செய்கிறது .சுழி உயரத்தில் புழையில் உள்ள
நீர் மட்டம் கிடைமட்டமாகவும், உயரம் அதிகரிக்க
அதிகரிக்க வளைவாரம் குறைந்து இயல்பாக இருக்கும்
நிலையை அடையும் .

.தானாக மோதிக்கொள்ளும் படகுகள்



இரு படகுகள் நீர் பரப்பில் ஒரே திசையில் இணையாகச்
செல்கின்றன .அவை இரண்டும் ஒன்றுக் கொன்று அருகில்
இருக்கும் போது அவை ஒன்றையொன்று இழுத்துக் கொண்டு
மோதிக் கொள்கின்றன .படகுகளின் வேகம் அதிகரிக்க இந்த
மோதல் தீவிரமாக இருக்கின்றது. இது ஏன் ?
                                     
                                             *****************

இரு படகுகள் அருகருகே இருந்து கொண்டு ஒரே
திசையில் இணையாகச் செல்லும் போது அவைகளுக்
கிடைப்பட்ட நீர் எதிர் திசையில் பாய்வது
போன்ற இயக்கத்தைப் பெறுகிறது . நீரின் இவ்வியக்கம்
படகுகளின் இடையில் அழுத்தத்தைக் குறைத்து விடுகிறது
( இது பெர்னோலியின் கொள்கையாகும். இதன் படி
அழுத்தம் மற்றும் ஓரலகுப் பருமனுள்ள நீரின் இயக்க
ஆற்றல் இவற்றின் கூடுதல் ஒரு மாறிலியாக இருக்கும் .
இயக்க ஆற்றலில் ஏற்படும் கூடுதல் அழுத்தத்தில் குறைவை ஏற்படுத்துகிறது). இது படகுகளை இழுத்து மோதுமாறு
செய்கிறது .

Sunday, December 5, 2010

creative thoughts-17

Creative thought -17




Equal product of two numbers with sum in one pair equals to the difference
 in the other pair.

It is very simple to everyone to show that a sum of two numbers is equal to a
sum of two other numbers and a product of two numbers is equal to a product
of two other numbers separately. It can be proved that same two pairs of numbers
will not satisfy both the conditions simultaneously. Mathematically it can be
 stated if a + b = c +d ,then ab =/= cd and if ab = cd then a+b =/= c+d.
If we assume supernaturally that they coexist, then the equality would become
true for all powers of the numbers in the pairs and it leads to an impossible relation

  n    n       n       n
a + b   = c +   d

where n = 1,2,3,,4…….. In fact such relation will be true under trivial condition
where the numbers in the pairs are equal.

However, a sum and product of two numbers may be made equal
with a difference and product of two other numbers respectively. e.g.,

2+3 = 5 = 6 – 1
2x3 = 6 = 6x1
3+10 = 13 = 15-2
3x10 = 30 = 15x2

For a same sum and difference, one can have two or more pairs of numbers
to give different products. e.g.,

4+21 = 25 = 28-3 ; 4 x 21 = 84 = 28x3
10+15 = 25 = 30-5 ; 10x15 = 150 = 30x5

As the pair of such numbers has substantial influence on the equal sum of
like powers , it is worth to investigate a method of identifying such pairs. For
a given sum (or difference) S and product P , the pairs (a,b) and (c,d) are
related by the following relations

a+b = S = c-d
and axb = P = cxd

Substitute for d (= P/c) in S = c-d ,we get,

(cxc) –Sc – P = 0

The roots of the quadratic equation give the value of c and d

c = [S+ √ (SxS) +4P]/2 and d = [S- √ (SxS)+4P]/2

We derived the solutions for a and b ( See-Creative thought-15)

a = [S + √ (SxS)-4P]/2 and b = [ S- √ (SxS)- 4P]/2

To have integral solutions for c and d , (SxS)+4P must be a square number
and for a and b (SxS)-4P must be a square number .

If (SXS)+4P = (ZxZ) and (SXS) -4P = (YxY),where Z and Y are integral
numbers ,then its sum and difference give

2(SxS) = (ZxZ)+ (YxY) and 8P = (ZxZ)- (YxY)

It implies that the pairs of numbers whose sum and difference are equal
and their products are equal are closely related with the

numeral relation representing the sum of two squares is equal to twice that
of an another square. e.g.,

(1x1) + (7x7) = 2 x (5x5)

It gives S = 5 and P = 6 and therefore we can derive the pairs as (2,3)and (1,6).

(7x7)+ (17x17) = 2 x(13x13)

It gives S=13 and P =30 and the pairs are (10,3) and (15,2).

The numbers expressed by the relation 2(nxn)+2n +1 ,where n is a number ,
generate such numeral relation where the sum of two squares is equal to twice
 the square of that number 2(nxn)+2n + 1

It can be further derived,

(cxc)+(dxd) = (SxS)+2P
and
(axa) + (bxb) = (SxS) – 2P

(axa)+(bxb)+(cxc)+(dxd) = 2 (SxS)= 2 [(a+b)(a+b)]=2[(c-d)(c-d)] Few solutions are

(2,3),(1,6); (2x2) + (3x3) + (1x1) + (6x6) = 2 (5x5)
(3,10),(2,15); (3x3) +(10x10) + (2x2) + (15x15) = 2 (13x13)
(5,12),(3,20); (5x5)+(12x12)+(3x3)+(20x20)= 2x(17x17)
(14,15)(6,35); (14x14)+(15x15)+(6x6)+(35x35)= 2(29x29)

From (ZxZ) +(YxY) = 2 (SxS), one can derive a,b,c and d,the members
of the pairs

a = √ [(ZxZ)+(YxY)]/8 + Y/2 and b = √ [(ZxZ)+(YxY)]/8 – y/2
c = Z/2 + √ [(ZxZ)+(YxY)]/8 and d = Z/2 - √ [(ZxZ)+(YxY)]/8
சின்னக் குமிழும் பெரிய குமிழும்






சோப்புக் கரைசலைக் கொண்டு குமிழ்களை ஏற்படுத்தும்
வித்தையை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் .இவை
சொற்ப நேரமே நிலைத்திருந்து பின்வெடித்து
விடுகின்றது .சில சிறப்பு வேதிப் பொருட்களை கலந்து
நெடுநேரம் நிலைத்திருக்குமாறு செய்ய முடியும். அப்படி
உண்டாக்கப்பட்ட இரு சோப்புக் குமிழிகளில்
ஒன்று சிறியதாகவும் மற்றொன்று பெரியதாகவும்
இருக்கின்றன. அவ்விரண்டுகுமிழ்களையும் ஒரு நுண்
புழைக் குழாய் மூலம் இணைக்கப் படுகின்றன .இச்
சோதனையில் என்ன நிகழும் என எதிர்பார்க்கலாம் ?
                                 *************
பொதுவாக எல்லோரும் தவறாக பெரிய குமிழில் உள்ள
பருமன் மிகுந்த காற்று சிறிய குமிழுக்குச் சென்று இரு
குமிழுகளும் சம அளவு பருமன் கொண்டதாக
இருக்கும் என்று கூறுவர். ஆனால் குமிழியில் உள்ள
காற்றின் பரிமாற்றம் அங்குள்ள அழுத்தத்தைப்
பொறுத்ததேயன்றி பருமனைப் பொறுத்ததில்லை .
குமிழியின் கோளவடிவம் என்பது கொடுக்கப்பட்ட
பருமனுக்கு இருக்கும் மிகக் குறைந்த புறப்பரப்பு .
இதற்கு சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையே
(Surface tension) காரணம். இதன்னால் உள்ளே உள்ள
காற்று பலூனில் அடைக்கப் பட்ட காற்று
போல இறுக்கப் படுகிறது . உள்ளே இருக்கும்
கூடுதல் அழுத்தம் பரப்பு இழுவிசைக்கு நேர்
விகிதத்திலும் ,கோளத்தின் ஆரத்திற்கு எதிர்
விகிதத்திலும் இருக்கிறது .இதனால்
பெரிய கோளத்தில் காற்றழுத்தம் குறைவாகவும் ,
சிறிய கோளத்தில் அதிகமாகவும் இருக்கும் .
அப்போது காற்று சிறிய கோளத்திலிருந்து பெரிய
கோளத்திற்குச் செல்லும் .அதாவது பெரிய கோளம்
இன்னும் பெரியதாகும், சிறியது இன்னும் சிறியதாகும் .
குமிழ் சிறியதாக உல் அழுத்தம் அதிகரிப்பதால் அது
வெடித்து விடலாம் .அல்லது ஒரு பகுதி
வளைவாரத்தை மட்டும் கொண்டு
பரப்பு இழுவிசையைக் குறைத்து எதிர் முனையில்
உள்ள பெரிய கோளத்தின் சொற்ப அளவு அழுத்தத்தை
ஈடுசெய்யலாம் .

Wednesday, December 1, 2010

Vanna vanna ennangal-28

எங்கே இருக்கிறது ?




எடுப்பதும் விடுப்பதும்

காணும் கனவிலிருக்கின்றது

முடிப்பதும் முறிப்பதும்

தொடரும் முயற்சியிலிருகின்றது

இன்பமும் துன்பமும்

மனதின் மயக்கத்திலிருக்கின்றது

இழப்பும் இருப்பும்

செய்யும் செலவிலிருக்கின்றது

சொர்க்கமும் நரகமும்

ஆற்றும் செயலில்லிருக்கின்றது

நல்லதும் கேட்டதும்

விளையும் பயனில்லிருக்கின்றது

விருப்பமும் வெறுப்பும்

எண்ணத்தின் நிழலில்லிருக்கின்றது

இனிப்பும் கசப்பும்

நாவின் உணர்வில்லிருக்கின்றது

அறிவும் அறியாமையும்

காட்டும் ஆர்வத்திலிருக்கின்றது

அன்பும் பண்பும்

பழகும் பழக்கத்திலிருக்கின்றது .


கிரேபியஸ் (Graffias ) என்ற பீட்டா (beta) ஸ்கார்பி 530 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.56 தோற்ற ஒளிபொலிவெண் கொண்ட ஒரு தனி விண்மீன் போலத் தோன்றினாலும் ,அது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு விண்மீன்களின் இணையாக உள்ளது..ஏனெனில் துணை விண்மீன் 1100 ஒளி ஆண்டுகள் தொலைவில் 4 .9 தோற்ற ஒளி பொலிவெண்ணுடன் காணப் படுகின்றது


சீட்டா(zeta) ஸ்கார்பியும் அகன்ற இடைவெளியுடன் கூடிய ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு விண்மீன்களின் இணையாகும். சீட்டா-1 வெண்நீலநிறங் கொண்ட தோற்ற ஒளிப் பொலிவெண் 4.7 உடைய மாபெரும் விண்மீனாகும். இது NGC 6231 என்று பதிவு செய்யப்பட்ட கொத்து விண்மீன் (Cluster) கூட்டத்திலுள்ள பிரகாசமிக்க விண்மீனாகும். சீட்டா-2 ,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 .6 என்ற தோற்ற ஒளிப் பொலிவெண்ணுடன் உள்ளது.

.517 ஒளி ஆண்டுகள் தொலைவில் மறைப்பு வகை மாறொளிர் விண்மீனாக உள்ள .மியூ(mu) ஸ்கார்பி ஓர் உண்மையான இரட்டை விண்மீன் .இதனால் பிரகாசமான முதன்மை விண்மீனின் ஒளிப் பொலிவெண்ணுடன் 2.9 முதல் 3 .2 வரை 34 மணி நேர சுற்றுக்காலத்துடன் மாறுகின்றது. துணை விண்மீனின் ஒளிப் பொலிவெண் 3 .6 ஆகும்.உமேகா (omega) ஸ்கார்பி தொடர்பில்லா ஒரு இரட்டை விண்மீனாகும். இவை 420 , 260 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.9 மற்றும் 4.3 தோற்ற ஒளிப் பொலிவெண்ணுடன் உள்ளன

65 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.29 என்ற தோற்ற ஒளிப் பொலிவெண்ணுடன் வேய் (Wei ) என்ற எப்சிலான்(epsilon) ஸ்கார்பியும்,402 ஒளி ஆண்டில் 2.29 என்ற ஒளிப் பொலிவெண்ணுடன் டிசூபா (Dschubba ) என்ற டெல்டா (delta) ஸ்கார்பியும் (இதை நாம் அனுஷம் என அழைக்கின்றோம்) 464 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.39 ஒளிப்பொலிவெண்ணுடன் கிர்டாப்(Girtab) என்ற கெப்பா(keppa) ஸ்கார்பியும், 519 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.7 ஒளிப்பொலிவெண்ணுடன்

லேசாத் என்ற அப்சிலான்(upsilon) ஸ்கார்பியும், 4300 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.82 ஒளிப்பொலிவெண்ணுடன் டௌ (tau) ஸ்கார்பியும், 735 ஒளி ஆண்டுகள் தொலைவில் அல்நியாட் என்ற சிக்மா(Sigma) ஸ்கார்பியும் உள்ளன.

சிக்மா ஸ்கார்பி ஒரு மாறொளிர் விண்மீனாகும்.703 ஒளி ஆண்டுகள் தொலைவில் 1.62 ஒளிப்பொலிவெண்ணுடன் கூடிய லாம்டா (lambda) ஸ்கார்பியை நாம் மூல நட்சத்திரம் என அழைக்கின்றோம். 2.72 ஒளி ஆண்டுகள் தொலைவில்1.86 ஒளிப்பொலிவெண்ணுடன் கூடிய சர்காஸ் (sargas) என்ற தீட்டா (thetta) ஸ்கார்பியும் ஒரு மாறொளிர் விண்மீனாகும். 459 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.89 என்ற ஒளிப்பொலிவெண்ணுடன் பை(pi) ஸ்கார்பியும் 72 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.32 என்ற ஒளிப்பொலிவெண்ணுடன் ஈட்டா (etta)ஸ்கார்பியும் உள்ளன. 46 ஒளி ஆண்டுகள் தொலைவில் 5.49 என்ற தோற்ற ஒளிப் பொலிவெண்ணுடன் 18 ஸ்கார்பி என்ற விண்மீன் உள்ளது. நிறை, வெப்ப நிலை,நிறம் ,தற்சுழற்சி போன்றவற்றால் சூரியனைப் போலவே தோன்றும் இந்த விண்மீன் நமக்கு அருகில் இருக்கும் விண்மீன்களுள் ஒன்றாகும். இதன் பிரகாசம் சூரியனை விட 5 சதவீதம் அதிகம்.

சக்கிடாரியஸ் வட்டாரம் போல ஸ்கார்பியோ வட்டாரமும் எண்ணிறைந்த கொத்து விண்மீன் கூட்டங்களைக் கொண்டுள்ளது. M.6,M.7 எனப் பதிவு செய்யப்பட்ட இரு தனித்த கொத்து விண்மீன் கூட்டங்கள் தேளின் கொடுக்கு நுனிக்கு அருகாமையில் உள்ளன.

2000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள M.6 வண்ணத்துப் பூச்சி இறக்கையை விரித்தது போல அமைந்துள்ளது. தொலை நோக்கியில் இதிலுள்ள விண்மீன்களைத் தனித்துப் பிரித்துப் பார்க்கமுடிகின்றது. இதிலுள்ள பிரகாசமிக்க விண்மீன் ஆரஞ்சு நிறங்கொண்ட மாறொளிர் விண்மீனாக உள்ளது. இதன் ஒளிப் பொலிவெண் 5 முதல் 7 வரை மாற்றத்திற்கு உள்ளாகின்றது. M.7-ன் பிரகாசம் பிளியட்சுக்கு(Pleiades) அடுத்ததாக உள்ளது. 780௦ ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இது கெப்பா(keppa) ஸ்கார்பிக்கும் காமா (gamma) சக்கிடாரியசுக்கும் நடுவில் அமைந்திருக்கின்றது. முழுநிலவின் உருவத்தைப் போல இரு மடங்கு உள்ளது. இது நமக்கு மிக அருகாமையில் இருக்கும் தனிக்கொத்து விண்மீன் கூட்டங்களுள் ஒன்றாகும்.

அண்டாரசுக்கு 1.5 டிகிரி கோண விலக்கத்தில் M.4 எனப் பதிவு செய்யப்பட்ட ஒரு கோளக் கொத்து விண்மீன் கூட்டம்(globular cluster) உள்ளது. 7000 ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்தாலும் நமக்கு அருகில் இருக்கும் கோளக் கொத்து விண்மீன் கூட்டங்களில் இதுவும் ஒன்று..இது தோற்றத்தில் முழு நிலவின் முக்கால் பங்கு பரப்பில் விரவியுள்ளது ...

Tuesday, November 30, 2010

Vanna vanna ennangal-27

உன்னால் முடியும் தம்பி


உன்னால் முடியும் தம்பி
உள்ளுக்குள்ள திறமையை நம்பி
எட்டி நடந்தால் இமயமும்
எட்டும் தொலைவே தம்பி

உன்னாலும் முடியுமென்று
எந்நாளும் சொல்லச் சொல்ல
எட்டிப்பாக்குது ஒ௫ நம்பிக்கை
எக்கித்தள்ளுது நம்மை முன்னுக்கு
செய்யும் செயல் எதுவானாலும்
செம்மையாய் செய்து முடிக்க
முதலில் வேண்டியது மனவுறுதி
முடிவில் வேண்டுவது நல்வி௫த்தி

உன்னால் முடியும் தம்பி
உள்ளுக்குள்ள திறமையை நம்பி
எட்டி நடந்தால் இமயமும்
எட்டும் தொலைவே தம்பி

நெடுந் தொலைவு நடைப்பயணம்
இடை நிலையில் ஓய்ந்துபோய்
ஒதுங்கி நின்றான் ஒ௫காலம்
ஓரடிஈரடி எடுத்து வைக்க
ஒல்லாத கால்கள் மறுக்க
செல்லுமிடம் சே௫வது எக்காலம்
ஒன்று முடியாததும் நம்மிடமே
வென்று முடிவதும் நம்மிடமே

உன்னால் முடியும் தம்பி
உள்ளுக்குள்ள திறமையை நம்பி
எட்டி நடந்தால் இமயமும்
எட்டும் தொலைவே தம்பி

உறங்கி விழித்த ஓர் அசரீறு
உள்ளுக்குள்ளே ஒலித்த போது
சோர்வே சோர்ந்து போனது
ஒருவினாடியில் ஓர் அதிசயம்
சோர்ந்தவன் சோர்விலன் ஆனான்
ஓய்ந்த கால்கள் ஓடத் தொடங்கின .
அலைமனம் த௫வது அசதி
நிலைமனம் கொள்வது உறுதி

உன்னால் முடியும் தம்பி
உள்ளுக்குள்ள திறமையை நம்பி
எட்டி நடந்தால் இமயமும்
எட்டும் தொலைவே தம்பி

Monday, November 29, 2010

Vinveliyil ulaa-9

ஒளிப்பொலிவெண் (Magnitude)


ஒரு விண்ணுருப்பின் தோற்ற ஒளிப்பொலிவெண் (m ) என்பது 

அதன் பிரகாசத்தை (brightness ) அல்லது ஒளிர் திறனை (Luminosity ) பூமியிலிருக்கும் ஒரு பார்வையாளரால்அளவிட்டறியக் கூடிய் ஒரு கூறு.இது பூமியின் காற்று மண்டலத்திலுள்ள தூசி மற்றும்
மேகம் போன்றவற்றால் தடைப்படும் என்பதால்,இதை காற்று மண்டலத்திற்கு அப்பால் இருந்து மதிப்பிடுவார்கள் .
விண்ணில் எல்லா விண்மீன்களும் ஒரே சமயத்தில் கண்களுக்குப் புலப்படுவதில்லை. சூரியன் மறைந்தவுடன் முதலில் தெரியவரும் விண்மீன்களை பிரகாசமிக்க விண்மீன்கள் என்றும் அதன்
ஒளிப்பொலிவெண் முதல் நிலை என்றும் கூறுவர்.
பின்புல வெளிச்சம் குறையக் குறைய அடுத்தடுத்த பிரகாசமுள்ள விண்மீன்களும் தெரியவருகின்றன .இறுதியாகத் தெரியவருவது மங்கலான விண்மீன்களாகும். இவற்றின் ஒளிப்பொலிவெண் 6 எனக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழிமுறையில் சூரியன் மற்றும்
சந்திரனின் ஒளிப்பொலிவெண்களை வரையறுக்க முடியாது.




1856 -ல் நோர்மன் ராபர்ட் போக்சன்(Norman Robert Fogson ) முதல்
நிலை ஒளிப் பொலிபொலிவெண்ணுடைய விண்மீன்,
மிகவும் மங்கலானத்தை விட 100 மடங்கு பிரகாசமானது என்று
கொண்டு ஒரு அளவுத் திட்டத்தை நிறுவினார் .

விண்வெளியில் கண்களுக்குத் தெரியும் சராசரியாக மிகப்

பிரகாசமான விண்மீன்கள் (அவைகள் எல்லாம் ஒரேயளவு பிரகாசமுடையவை அல்ல . மேலும் அவைகள் மிக
அருகிலும் இருக்கலாம்,வெகு தொலைவு தள்ளியும் இருக்கலாம்) வெறுங்கண்களின் காட்சி எல்லையிலுள்ள மங்கலான விண்மீன்
களைப் போல சரியாக 100 மடங்கு பிரகாசமுள்ளவை எனக் கண்டறிந்துள்ளனர். இது விண்மீன்களின் பிரகாச அளவிற்கு
ஓர் அளவுத் திட்டத்தைத் தந்துள்ளது.அடுத்தடுத்த இரு
ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன்களின் பிரகாச விகிதம்
சமாயிருக்குமாறு இதன் அளவுத் திட்டம் வரையறுக்கப்
பட்டுள்ளது. அதாவது இரண்டாவது ஒளிப்பொலிவெண்ணுடைய
விண்மீன் முதல் ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனை விட
n -மடங்கு பொலிவு தாழ்ந்தது என்போம். எனவே அடுத்தடுத்த
ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன்களின் ஒளிப்பொலிவெண் ஒன்றுக்கொன்று n மடங்கு வேறுபட்டது எனலாம். அதாவது
மூன்றாவது ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனும்
முதலாவது ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனும்
ஒன்றுக்கொன்று (n x n) மடங்கு பொலிவு வேறுபட்டதாக
இருக்கும். இதன்படி ஆறாவது ஒளிப் ஒளிப்பொலிவெண்ணுடைய
விண்மீனும் (மங்கலானது) முதலாவது ஒளிப்பொலி
வெண்ணுடைய விண்மீனும் ஒன்றுக்கொன்று( nxnxnxnxn) மடங்கு
பொலிவு வேறுபட்டதாக இருக்கும் எனலாம்.

சராசரியாகப் பிரகாசமிக்க விண்மீனின் ஒளிப்பொலிவு
மங்கலானதைவிட 100 மடங்கு என்பதால் nxnxnxnxn = 100 .
இது n-ன் மதிப்பு 2 .5 எனத் தெரிவிக்கின்றது. இதை இன்னும்
துல்லியமாகக் கூறினால் n = 2 .512 ஆகும். இதன்படி ஒரு வகை
ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீன் அதற்கு முந்தி இருக்கும்
ஒளிப்பொலிவெண்ணுடைய அல்லது பிரகாச மிக்கதாக இருக்கும் விண்மீனைக் காட்டிலும் 2 .5 மடங்கு மங்கலானது.

இந்த அளவுத் திட்டத்தின்படி 1 என்ற ஒளிப்பொலி
வெண்ணுடைய விண்மீன் மிகவும் பிரகாசமானவை .
அதனால் அவை சூரியன் மறைந்தவுடனேயே விண்ணில்
கண்ணுக்குத் தென்படுகின்றன . இந்த விண்மீன்களின்
சராசரிப் பிரகாசம் வெறும் கண்ணின் தோற்ற எல்லையில்
உள்ள விண்மீன்களைப் போல 100 மடங்கு அதிகம்.
சராசரிப் பிரகாசம் தான் 100 மடங்கு அதிகம். தனி விண்மீனின் பிரகாசமில்லை.உண்மையில் இதில் அடங்கியுள்ள
விண்மீன்களின் பிரகாசம் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.
சமமான பிரகாசம் கொண்டவை இல்லை. இதிலுள்ள சில
விண்மீன்கள் சராசரி விண்மீனை விடச் சில மடங்கு அதிகப் பிரகாசமானவை,சில சில மடங்கு மங்கலானவை.

விண்மீன்களின் பிரகாசத்தைக் குறிக்கும் இந்த அளவுத்
திட்டத்தை நாம் மேலும் புரிந்து கொள்ள வேண்டியது
அவசியமாக் இருக்கிறது. ஒரு சராசரி முதல் நிலைப்
பிரகாசமுள்ள அதாவது ஒளிப் பொலிவெண் ஒன்று
எனவுள்ள விண்மீனை விடவும் 2.5 மடங்கு அதிகப்
பிரகாசமுள்ள விண்மீன் பூஜ்ய ஒளிப் ஒளிப்பொலி
வெண்ணுடைய விண்மீன் எனப்படுகிறது. இதை விட
மேலும் 2.5 மடங்கு கூடுதல் பிரகாசமுள்ள விண்மீனுக்கு
 -1 ஒளிப்பொலி வெண்ணாகும்.ஒரு விண்மீனின்
ஒளிப்பொலிவெண் பூஜ்யம் என்றால் அது ஒளிராத
விண்மீனைக் குறிப்பிடுவதில்லை. உண்மையில் அது
பிரகாசமிக்க விண்மீனாகும். எதிர்குறியுடன் கூடிய ஒளிப்பொலிவெண்ணுடையவை இதை விடவும்
பிரகாசமானவை.

வெப்பநிலைக்கான சென்டிகிரேடு அளவுத் திட்டத்தில்
எதிர் குறியுடைய வெப்பநிலை இருப்பதைப் போல ,
விண்மீன்களின் பிரகாசத்திற்கான இந்த அளவுத்திட்டத்திலும்
எதிர் குறி உடைய ஒளிப்பொலிவெண்கள் உள்ளன.
வெப்பநிலை அளவுத்திட்டத்தில் நீரின் உறை நிலையும்,
கொதி நிலையும் சுழி மற்றும் நூறு டிகிரி
செண்டிகிரேடாகக் கொள்ளப்பட்டுள்ளதை போல
விண்மீன்களுக்கான பிரகாச அளவுத் திட்டத்தில், சூரியன்
மறைந்தவுடன் கண்ணுக்குத் தெரிகின்ற பிரகாசமான
விண்மீனும், வெறும் கண்களின் காட்சி எல்லையில்
தெரிகின்ற மங்கலான விண்மீனும் ஒளிப்பொலிவெண் ஒன்றையும் ,ஆறையும் கொண்டுள்ளதாக கருதப்படுகின்றன.

முதல் நிலை பிரகாசமுள்ள விண்மீனைப் போல் சரியாக
2.5 மடங்கு என்றில்லாமல் 1 .5 மடங்கு அல்லது 2 மடங்கு
அதிகப் பிரகாசமுள்ளதாக இருப்பின் அவை ஒன்றுக்கும்
சுழிக்கும் இடைப்பட்ட மதிப்புள்ள ஒளிப் பொலிவெண்ணைப் பெற்றிருக்கும். இது பின்ன மதிப்புடையதாக இருக்கும்.
எனவே ஒளிப் பொலிவெண் விண்மீன்களுக்கு ஒரு முழு
எண்ணாக இருக்க வேண்டும் என்பதில்லை.மிகப்பிரகாசமான
சராசரி விண்மீனின் பிரகாசம் வெறும் கண்ணுக்கு தெரியக் கூடிய மங்கலான விண்மீனைப் போல 100 மடங்கு பிரகாசமிக்கவை என்ற அடிப்படையில் பிரகாசமிக்க பல விண்மீன்களின் பிரகாசத்தைக் கணக்கிட்டறிந்தால் அவற்றில் ஒன்றுக்குக்கூட
ஒளிப்பொலிவெண் 1 என்றில்லை. ஒளிப்பொலிவெண்ணின்
மதிப்புகள் ஒன்றுக் கீழாகவோ அல்லது மேலாகவோ
இருக்கின்றன. ஏனெனில் ஒப்பிடுவதற்காக பின்புல ஒளிச்
செறிவின் பின்னணியில் அவை நமக்குத் தென்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு நாமாக ஏற்படுத்திக் கொண்ட அது
ஓர் அளவுத் திட்டமாக உள்ளது.  இந்த அளவுத் திட்டத்தில்
ஒரு குறிப்பிட்ட ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனின்
பிரகாசத்தை மற்றொரு ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனின் பிரகாசத்தோடு எப்படி ஒப்பிடுகின்றார்கள் எனப் பாப்போம்.
மூன்றாம் நிலைப் பிரகாசமுடைய விண்மீன் முதல் நிலைப் பிரகாசமுடைய விண்மீனை விட 2 .5 x 2 .5 மடங்கு
அதாவது 6 .3 மடங்கு மங்கலானது. எனவே ஒரு முதல் நிலைப் பிரகாசமுடைய விண்மீனின் பிரகாசம் 6 .3 மூன்றாம் நிலைப் பிரகாசமுடைய விண்மீனின் பிரகாசத்திற்குச் சமம் என
அறியலாம்.இதே கணிப்பு முறையில் ஒரு முதல் நிலைப்
பிரகாசமுடைய விண்மீன், 2 .5 ,இரண்டாம் நிலை 6 .3 ,
மூன்றாம் நிலை 15 .9, நான்காம் நிலை 39 .8 , ஐந்தாம்
நிலை 100 ,ஆறாம் நிலை 251 ,எழாம் நிலை 631 ,எட்டாம்
நிலை 1585 ..... பிரகாசமுடைய விண்மீன்களின் பிரகாசத்திற்குச்
சமம் எனக் கூறலாம். இது போல -௦.5 ஒளிப்பொலி
வெண்ணுடைய விண்மீன் 1 .5 முதல் நிலை ஒளிப்பொலி
வெண்ணுடைய விண்மீனுக்கும்,-௦.19 ஒளிப்பொலி
வெண்ணுடைய விண்மீன் 5 .8 முதல் நிலை ஒளிப் ஒளிப்பொலிவெண்ணுடைய விண்மீனுக்கும் சமம் எனலாம்.

வெறுங் கண்களால் 6 என்ற ஒளிப் ஒளிப்பொலி
வெண்ணுடைய விண்மீன்கள மட்டுமே காண முடியும்.
7 மற்றும் அதற்கும் மேற்பட்ட ஒளிப்பொலிவெண்ணுடைய
விண்மீன்கள் இப் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. அவை வெறும் கண்ணுக்குத் தெரியும் விண்வெளிக்கப்பால் இருக்கின்றன.

விண்மீன்களின் ஒளிப்பொலிவெண் அவற்றின் தொலைவைச் சார்ந்திருப்பதில்லை.எனவே ஒளிப்பொலிவெண் மூலம்
விண்மீன்களின் தொலைவை நேரடியாக மதிப்பிட முடியாது.
எடுத்துக்காட்டாக வெகு தொலைவில் உள்ள - 5 என்று தாழ்ந்த ஒளிப்பொலிவெண்ணுடைய பிரகாசமான விண்மீன்கள்
கண்ணுக்குத் தெரியும். ஆனால் அருகில் அதிக ஒளிப் ஒளிப்பொலிவெண்ணுடன், தாழ்ந்த பிரகாசத்துடன் கூடிய
விண்மீன் கண்ணுக்குத் தெரிவதில்லை.





 −26.74 Sun

1.-1.46 α CMa (Sirius)
2 −0.72 α Car (Canopus)
3 −0.04 var α Boo (Arcturus)
4 −0.01 α Cen A (α1 Cen)
5 0.03 α Lyr (Vega)

6 0.12 β Ori( Rigel)
7 0.34 α CMi (Procyon)
8 0.42 var α Ori ( Betelgeuse)
9 0.50 α Eri (Achernar)
10 0.60 β Cen (Hadar)
11 0.71 α1 Aur (Capella A)
12 0.77 α Aql (Altair)
13 0.85 var α Tau (Aldebaran)
14 0.96 α2 Aur ( Capella B)
15 1.04 α Vir (Spica)
16 1.09 α Sco (Antares)
17 1.15 β Gem (Pollux)
18 1.16 α PsA (Fomalhaut)
19 1.25 α Cyg (Deneb)
20 1.30 β Cru (mimosa)
21 1.33 α Cen B (α2 Cen) (Rigil Kentaurus, Toliman 4.4)
22 1.35 α Leo (Regulus)
23 1.40 α Cru A (α1 Cru) (Acrux A)
24 1.51 ε CMa
25 1.62 λ Sco
26 1.63 γ Cru
27 1.64 γ Ori
28 1.68 β Tau
29 1.68 β Car
30 1.70 ε Ori
31 1.70 ζ Ori A
32 1.74 α Gru
33 1.76 ε UMa
34 1.78 γ2 Vel
35 1.80 ε Sgr
36 1.82 α Per
37 1.84 δ CMa
38 1.85 η UMa
39 1.86 θ Sco
40 1.87 α UMa A
41 1.90 γ Gem
42 1.91 α Pav
43 1.92 α TrA
44 1.96 α Gem A (Castor A)
45 1.97 var α UMi (Polaris)
46 1.98 β CMa
47 1.98 α Hya Alphard
48 2.00 α Ari
49 2.03 δ Vel A
50 2.04 β Cet
51 2.05 κ Ori
52 2.06 σ Sgr
53 2.06 θ Cen
 54 2.06 α And
55 2.06 β And
56 2.08 β UMi
57 2.09 α2 Cru (Acrux
58 2.10 α Oph
59 2.12 var β Per (Algol A)
60 2.13 β Gru
61 2.14 β Leo (Denebola)
62 2.21 ζ Pup
63 2.23 λ Vel
64 2.23 γ Dra
65 2.24 α CrB A
66 2.24 γ Cyg
67 2.25 α Cas
68 2.25 ι Car
69 2.26 γ1 And
70 2.27 ζ1 UMa (Mizar A)
71 2.27 β Cas
72 2.27 ε Cen
73 2.28 γ1 Leo
74 2.28 α Lup
75 2.29 δ Sco
76 2.29 ε Sco
77 2.32 η Cen
78 2.35 β UMa
79 2.37 α Phe
80 2.38 κ Sco
81 2.39 γ Cas
82 2.40 ε Peg
83 2.40 η CMa
84 2.4 ε Car A
85 2.42 β Peg
86 2.43 γ UMa
87 2.44 α Cep
88 2.46 κ Vel
89 2.49 α Peg
90 2.50 ε Cyg

பூமியிலிருந்து பார்க்கும் போது கண்களுக்குப் புலப்பட்டுத்
தெரியும் 90,+ 2 .50 அல்லது அதற்கும் குறைவான ஒளிப்பொலி
வெண்ணுடைய, பிரகாசமிக்க விண்மீன்களின் பட்டியல்
மேலே தரப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் முழுமையானது என்று கூறிவிடமுடியாது.ஏனெனில் இரட்டை மற்றும் பல விண்மீன்கள் இணைந்த பல்லிணைத் தொகுப்பு விண்மீன்கள் ,இப்பட்டியலில்
தனித்த விண்மீன்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன(ஒளிப்பொலி
வெண் 5 க்கும் குறைவாக இருக்கும் பொழுது) எடுத்காட்டாக ஆல்பா
செண்டாரி ( alpha centauri ) - o௦. 27 (மூன்றாவது) காபெல்லா (Capella ) ௦.08
(ஆறாவது ) அக்ரூக்ஸ் (Acrux ) ௦.77 (பதிமூன்றாவது ) போன்றவற்றைக்
குறிப்பிட்டுச் சொல்லலாம் சில விண்மீன்கள் மாறொளிர்
விண்மீன்களாக இருக்கும் போது அதன் ஒளிப்பொலி வெண்ணும் மாறுகிறது

சீரியஸ் (Sirius ) விண்ணில் நமக்குத் தெரியும் மிகப் பிரகாசமிக்க
ஒரு விண்மீன். இதன் தோற்ற ஒளிப் பொலி வெண் - 1 .4 . இந்த
அளவுத் திட்டத்தில் சூரியன், சந்திரனின் ஒளிப்பொலிவெண்களையும் குறிப்பிட முடியும் .சூரியனின் ஒளிப்பொலிவெண் - 26 .74 .
நிலவிற்கு - 12 .74

ஹபுள் தொலை நோக்கி ,கட்புலனறி ஒளி அலைநீளத்தில்
ஒளிப்பொலிவெண் 30  உடைய விண்மீன்களை
இனமறிந்துள்ளது.

விண்ணுருப்பின் சார்பிலா ஒளிப்பொலிவெண்  என்பது
நம்மிடமிருந்து 10 பார்செக் தொலைவில் ( 32 .6 ஒளி ஆண்டுகள் )
இருக்கும் போது அது பெற்றிருக்கும் தோற்ற ஒளிப்
பொலிவெண்ணாகும்

Friday, November 26, 2010

eluthaatha kaditham-19

எழுதாத கடிதம்

 
அன்பார்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்களே நான் ஏன் எழுத்தாளன் ஆனேன் என்று சிலமுறை
வருத்தப்பட்டதுண்டு.அதற்குக் காரணம் நூல்
வெளியீட்டாளர்கள் எழுத்தாளர்களை மிக எளிதாக
ஏமாற்றிவிடுகின்றர்கள் என்பதுதான்.இங்கு
என்னுடைய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

சென்னையிலுள்ள நியூ சென்சுரி புக் ஹவுஸ் என்றொரு
நூல் வெளியீட்டாளர்.மிகக் குறைந்த விலையில் நல்ல
நூல்களை வெளியிட்டு நடுத்தர மக்களுக்கு நூல்கள்
கிடைக்குமாறு இவர்கள் செய்யும் பணி
பாராட்டுதலுக்குரியது.என்றாலும் இவர்கள் சாதாரண
எழுத்தாளர்களை ஓரளவு ஏமாற்றிவிடுகிறார்கள் .

 1986 முதற்கொண்டு என்னுடைய பல நூல்களை இவர்கள்
வெளியிட்டுவந்துள்ளனர் ஆரம்ப காலத்தில்

பல நூல்களுக்கு முழு பதிப்புரிமையை Rs 1000 க்கு வாங்கிக் கொண்டார்கள்.பிற்பாடு வெகு சில நூல்களுக்கு
ராயல்டி அடிப்படியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது..
ஆனால் அந்த ராயல்டியை வாங்குவதற்கு ஆண்டுக்கு
20 முறை தொலைபேசிமூலமும்,20 முறை கடிதம் மூலமும் கேட்கவேண்டியிருக்கிறது .அவர்களாக
ராயல்டியை கணக்கிட்டுத் தருவதே இல்லை.
என்னுடைய 4 நூல்களுக்கு 2008 - 09 , 2009 -10 க்கு இன்னமும்
ராயல்டி வழங்கப்படவே இல்லை.வற்புறுத்திக் கேட்ட
பொழுது அதற்குப் பதிலாக நூல்களை அனுப்பிவைக்கவா
என்று கேட்கின்றார்கள்.

மணிவாசகர் நூலகத்தார் மூலம் வெளியிட்ட என்னுடைய
நூலுக்கு , தமிழக அரசு, நூல்களுக்கு ஆர்டர்
கொடுத்தால்தான் அதற்குரிய சன்மானம் தருவார்களாம் .
ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு மேலாக
இரண்டு நூல்களுக்கு இன்னமும் வெகுமதி
வழங்கப்படவில்லை.அதனால் நானே என்னுடைய நூல்களை வெளியிடலாம் என்று நினைக்கின்றேன். ஆனால்
அதற்கு முன் மக்களிடம் எப்படி வரவேற்ப்பு இருக்கும்

என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

My blog is drmmeyyappan.blogspot.com.
I recently wrote three books in English entitled "Amusement with numbers"
Vol.I: Numbers
Vol.II: Pythagoras numbers
Vol.III: Prime numbers
I myself typed the script in Computer and took a printed copy of Vol.III.Prime numbers.
It is about 100 pages with 20 puzzles described with solutions. I think it can be priced at Rs.100/=
Those who are interested to get one or few copies of the proposed book ,may send the
amount by DD + parcel charge  of Rs.20 upto three books,in the name of M.Meyyappan,.
along with your clear address.

Yours sincerely,
Kaveri
 





arika iyarppiyal-18

அறிக இயற்பியல்-18





1.ஒரே ஒரு பிரபஞ்சத்திலே ஒரே ஒரு குடும்பம்

ஒரே ஒரு குடும்பத்திலே ஒன்பது கோள்கள்

அதிலே என்னைத் தவிர ஒன்று கூட உருப்படியில்லை

நான் யார் ?



2.பூப்பூவாய் பூத்திருக்க

பூமியில் மட்டும் உயிரினங்கள்

உடன்பிறந்தவரெல்லாம் உயர்ப்பின்றி உறங்குவதென்ன ?



3.எல்லோரும் நேர்குத்தாய் தற்சுழல

ஒருவன் மட்டும் என்னை அங்கப்பிரதட்சனம் செய்கிறான்

பச்சைநிற மேனியன்

அவன் யார் ?



4.சூரியக்குடும்பத்தில் நான் ஒரு பீமன்

விரைவாகத் தற்சுழலும் எனக்கு

செவ்விழி ஒன்று நெற்றியில் உண்டு

நான் யார் ?



5.நீரே இல்லாத வாய்க்கால்

இங்கே நெடுந்தொலைவு ஓடுகிறது



6.ஊதிப்போன உடம்பு

ஊளைச் சதை

ஹீலா கூப் தொடர்ந்து விளையாடுவதில்

எனக்குத்தான் கின்னஸ் ரிகார்ட்டு.



விடை

1.பூமி

2.சூரிய வெப்பம் அளவாக இருப்பதால்

3.யூரனேஸ்

4.வியாழன்

5.செவ்வாய்

6.சனி

Vinveliyil ulaa-8

ஸ்கார்பியோ (Scorpio)



விருச்சிக இராசி மண்டலமும் அண்டை விண்மீன்
வட்டாரங்களும்

இது லிப்ரா(Libra) மற்றும் சக்கிடாரியஸ் (Sagittarius)
வட்டாரங்களுக்கு இடையில்அமைந்துள்ள ஏறக்குறைய
100 விண்மீன்களை உள்ளடக்கிய ஒரு பெரிய
வட்டாரமாகும்.இது தேள் வடிவமாகச் சித்தரிக்கப்
பட்டுள்ளது.கிரேக்க புராணத்தில் இது தன் கொடுக்கால்
ஓரியன்(Orion) என்ற வேட்டைக்காரனைத் தீண்டிக் கொன்று விடுகிறது .ஓரியன்மேற்கே மறையும் போது கிழக்கே
ஸ்கார்பியன் உதிப்பதால் இப்படிக் கதை புனைந்து
சொல்லப்பட்டது .இது பால் வழி மண்டலத்தில்
செழிப்பான பகுதியில் அண்ட மையத்தின்
திசையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விருச்சிக இராசிக்குரிய நட்சத்திர மண்டலமான
இவ்வட்டாரத்தில் நமது சூரியன் 23 நவம்பர் முதல்
18 டிசம்பர் வரையிலான காலத்தைக் கழிக்கும்.

ஓரியன் என்ற வேட்டைக்காரன் ,ஆர்டேமஸ் (Artemis )
என்ற பெண் கடவுளையும் அவளுடைய தாயான
லெட்டோ(Letto ) வையும் வணங்கி, தான் எல்லா
விலங்குகளையும் வேட்டையாடிக் கொல்லும்
வல்லமையைத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
ஆர்டேமஸ் வேட்டைத் திறன் மிக்க ஒரு கடவுள்
என்றாலும்,உலக விலங்குகளுக்கு பாதுகாவலனாகவும்
கருதப்பட்டாள். அதனால் ஆர்டேமஸ் ஓரியனின் விஷயத்தை
மேற்கொள்ள ஒரு தேளை அனுப்பி வைத்தார்.ஒரியனும் ,
தேளும் சண்டையிட்டுக் கொண்டபோது தேள் ஒரியனை
கொட்டிவிட்டது. இந்த போட்டிச் சண்டை, ஜுயஸ்
(Zeus ) என்ற முதன்மைக் கடவுளின் கவனத்திற்கு வர,
தேளின் நல்லெண்ணத்தைக் கருதி அதை விண்ணில்
ஒரு விண்மீனாக வடித்தார். அதிகப் பேராசைபடக்
கூடாது என்பது மற்றவர்களுக்கு ஓர் பாடமாக
இருக்கவேண்டும் என்பதற்காக ஆர்டேமஸ் கேட்டுக்
கொண்டதற்கு இணங்க, ஒரியனையும் பிற்பாடு ஜுயஸ்
விண்மீனாக்கி விண்ணில் வடித்தார்.

ஆர்டேமஸ் அழகானவள் என்றாலும் ஓரியன் அவளை
விடவும் அழகானவன். அதனால் அவன் மீது அவளுக்கு
ஒரு பிரியம் இருந்தது . இது அவளுடைய
கூடப் பிறந்த சகோதரன்னான அப்பல்லோ(Appollo) விற்குப்
பிடிக்கவில்லை.அவன் கோபங்கொண்டு ,ஒரு கொடிய
தேளை ஏவி ,ஒரியனைக் கொல்லுமாறு செய்தான் என்றும்
புனைந்து கூறப்பட்டது. ஓரியன் கொல்லப்பட்ட பிறகு ,
ஆர்டேமஸ் , ஜுயஸ்சைக் கேட்டுக்கொள்ள, ஓரியன்
விண்ணில் பாடம் செய்யப்பட்டான்.அதனால் குளிர்
காலத்தில் ஓரியன் விண்ணில் வேட்டையாடி உலா
வருவான். கோடை காலத்தில் தேள் வடிவ விண்மீன்
வட்டாரம் தோன்றுவதால் அவன் மறைந்து போய்
விடுவான்.

அண்டாரஸ்




இவ்வட்டாரத்தின் முதன்மையான விண்மீன் அண்டாரஸ் (Antares ) எனப்படும் ஆல்பா ஸ்கார்பி ( α Scorpi) ஆகும் . அண்டாரஸ் தேள் வடிவ வட்டாரத்தில் தேளின் இதயமாக உள்ளது.




இது வானில் மாபெரும் சிவப்பு நிற விண்மீனாகவும் ,
மாறி மாறி ஒளிரும் ஒரு மாறொளிர் விண்மீனாகவும்
உள்ளது. இதன் பிரகாசம் 4 -5 ஆண்டுகால வட்டச் சுற்றில்
மாறுகிறது .604 ஒளி ஆண்டுகள் தொலைவில்(180 pc) இது
அமைந்துள்ளது. விண்ணில் தெரியும் பிரகாசமான
விண்மீன்களின் வரிசையில் இது 16 வதாக உள்ளது .

காபெல்லா (Capella)என்பது ஒரு நான்கிணைத் தொகுப்பு
விண்மீன். இதில் உள்ள இரு பிரகாசமிக்க விண்மீன்களின்
பிரகாசத்தை ஒன்றெனக்கருதினால் அண்டாரசின்
பிரகாசம் பட்டியலில் 15 வதாக இடம்பெறும்.இதன்
ஆரம் 822 ± 80 சூரிய ஆரம். இதை சூரியன் இருக்கும்
இடத்தில் வைத்தால் ,இதன் விளிம்பு, செவ்வாய்க்கும்
வியாழனுக்கும் இடைப்பட்ட வட்டப்பாதை வரை
விரிந்திருக்கும். இதன் ஒளிர்திறன் (luminosity )
சூரியனைப்போல 10 ,000 மடங்கு அதிகம். இது ஓரளவு
கூடுதலாக அகச் சிவப்புக் கதிர்களை உமிழ்வதால்
வெப்பக் கதிர்வீச்சு முறையில் ஒளிர்திறன் 65,000
மடங்கு சூரியனின் ஒளிர்திறனாகும்.
இதன் நிறை 15 -18 சூரிய நிறை. இதன் பெரிய
உருவமும், குறைந்த நிறையும், அண்டாரசின்
அடர்த்தி மிகவும் குறைவாக இருக்கவேண்டும் என்று
தெரிவிக்கின்றது. மெதுவாக மாறி மாறி ஒளிரக்கூடிய
இது ஒரு மாறோளிர் விண்மீனாகும் .இதன் தோற்ற
ஒளிப்பொலிவெண் 0௦.88 முதல் 1.16 வரை மாற்றம்
பெறுகின்றது. மே 31 ல் அண்டாரசை வானில் தெளிவாகக்
காணமுடியும். அப்போது இந்த விண்மீனுக்கு எதிர்
திசையில் நமது சூரியன் இருப்பதால்
இது இயலுவதாக இருக்கின்றது.அப்போது அண்டாரஸ்,
சூரியன் மறையும் போது தோன்றி, உதிக்கும் போது
மறைகின்றது. நவம்பர் 30 க்கு முன்பின்னாக இரண்டு
அல்லது மூன்று வாரங்களில் சூரியனின் பிரகாசமான
பின்புல வெளிச்சத்தில் இது புலப்பட்டுத் தெரியாததால்
இந்த விண்மீனைப் பார்க்க முடிவதில்லை. இது பூமியில்
தென் அரைக் கோளப் பகுதியை விட, வட அரைக்
கோளப்பகுதியில் இப்படித் தெரியாதிருக்கும் காலம்
கூடுதலாக இருக்கும்.

இதன் நிறம் நமது சூரியக் குடும்பத்திலுள்ள
செவ்வாயைப் (Mars ) போல உள்ளது . அதுவே இதற்குப்
பெயர் சூட்டியது எனலாம். .எரஸ் (ares ) என்பது கிரேக்க
மொழியில் செவ்வாய்க்கான பெயர்.அண்டாரஸ் என்றால்
செவ்வாயின் போட்டியாளன் என்று பொருள். நிலா உலா
வரும் வீதியில் இதற்கு கேட்டை என்று பெயர்.





அண்டாரஸ் ஒரு இரட்டை விண்மீன். அதாவது ஒன்றை
ஒன்று சுற்றிவருமாறு அமைந்த இரு விண்மீன்களாகும் .
அண்டத்திலுள்ள விண்மீன்கள் எல்லாம் தனித்த
விண்மீன்கள் இல்லை. சில இரட்டையாகவும் வேறு
சில மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட விண்மீன்களின்
தொகுப்பாகவும் இருக்கின்றன இரட்டை விண்மீன்களில் இரு விண்மீன்களும் அவற்றின் பொது மையத்தைப் பற்றி
ஒன்றையொன்று சுற்றி வருகின்றன .மூன்று மற்றும்
அதற்கும் மேற்பட்ட விண்மீன்களில் ,சூரியனைச் சுற்றி
வரும் கோள்கள் போல ,ஒரு பெரிய விண்மீனை பிற
விண்மீன்கள் வெவ்வேறு சுற்றுப் பாதைகளில் சுற்றிவரும்.
ஒவ்வொரு அண்டத்திலும் 46 % இரட்டை விண்மீன்களும்
15 % சூரியனைப் போலத் தனித்த விண்மீன்களாகவும்
எஞ்சிய 39 % பல் தொகுப்பு விண்மீன்களாகவும் உள்ளன.

அண்டாரஸ் 3 வினாடிகள் கோண விலக்கத்துடன் அமைந்த
ஒரு துணை விண்மீனைக் கொண்டுள்ளது. இது 5 என்ற
ஒளிப் பொலி வெண்ணுடன் வெண்நீல நிறத்துடன்
அண்டாரஸை 900 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது.
இத் துணை விண்மீன் சூரியனை விட 17 மடங்கு
ஒளிவீசுகிறது. அண்டாரஸ் ஓரியன் வட்டாரத்திலுள்ள
பெடல்ஜியூஸை(Betelgeuse) விடவும் வெப்பமிக்கது. ஏறக்குறைய
700 சூரியன்களின் ஒளியையும் வெப்பத்தையும் கதிர்வீச்சையும்
உமிழ்கிறது. பிரகாசமான அண்டாரசுடன் அதன் துணை
விண்மீனை இனமறிவது மிகவும் கடினம் .

செவ்வாய்க்கு ரோமன் மொழியில் ‘ares’ என்று பெயர் .
ஏரஸ் என்பது கிரேக்கர்களின் போர் கடவுளாகும்.
இக் கடவுளின் உருவம் போருக்குச் செல்லும்
வீரர்களுக்கு மன தைரியத்தை ஊட்டுமாறு இருக்க
வேண்டும் என்பற்காக கோபக்கனல் தெறித்து விழுமாறு
அதன் கண்கள் சிவப்பாக்கப்பட்டிருந்தது. இதுவே
செவ்வாய் கோளுக்கு செந்நிறத்தை தந்தது என்று
காரணம் கற்பிப்பார். அண்டாரஸ், விண்ணில் தெரியும்
சிவப்பு நிற விண்மீன்களுள் மிகவும் சிவப்பானது.சிவப்பு
விருப்பத்தின் நிறமாகக் கருதப்பட்டதால் ,அண்டாரஸ்,
வாழ்க்கையில் விருப்பத்தின் காரணமாக நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் கார்த்தாவாக உள்ளது என்பர்.

அண்டாரஸ் பிற சிவப்பு விண்மீன்களைப் போல தன்னைச்
சுற்றி பரந்து விரிந்துள்ள ஒரு செந்நிற மேகத்தைப்
பெற்றுள்ளது. இது 5 ஒளி ஆண்டுகள் தொலைவு வரை
விரிந்துள்ளது. இது தன் நிறத்தையும் கிளர்ச்சியுற
ஆற்றலையும் அண்டாரசிலிருந்து பெறுகிறது.

ஒப்பீடு

________________________________________________________________________

                                                         ஒளிப்பொலிவெண்
விண்மீன்விட்டம் /வெப்ப /தோற்ற*/சார்பிலா**/அடர்த்தி/நிறை/             
மைல்                        நிலை(o F)                                       (சூரியன்=1) (சூரியன் =1)

சூரியன் 885,000      ௦௦௦ 9900           -26 .7             +4 .8              1.0                  1.0

அண்டாரஸ் 500,000,000  6300  +0.98            -4.0           1/1,000,000      10-15

______________________________________________________________________



                             
*பூமியிலிருந்து பார்க்கும் போது விண்மீனின் பிரகாசம்

**எல்லா விண்மீன்களும் பூமியிலிருந்து சம தொலைவில் இருக்கும் போது விண்மீனுக்கு இருப்பதாகத் தோன்றும் பிரகாசம். இதுவே உண்மையான ஒப்பீட்டு பிரகாசமாகும்.

.

அண்டாரஸ் B என்ற துணை விண்மீன் 2.9 வினாடி
கோணவிலக்கத்துடன் அமைந்துள்ளது. இது 550
வானவியல் தொலைவில் (Astronomical unit) உள்ளது.
இதன் ஒளிப்பொலிவெண் 5.5 .இது 1/370 அண்டாரசின்
பிரகாசத்திற்குச் சமம். எனினும் சூரியனை விட 170
மடங்கு பிரகாசமாக உள்ளது. அண்டாரஸ் A-யைச்
சுற்றி வட்டப்பாதையில் 878 ஆண்டுகளுக்கு
ஒருமுறை சுற்றி வருகிறது. துணை விண்மீன் பச்சை
நிறத்தில் காட்சி தருகிறது. ஆனால் இது அண்டாரசின்
சிவப்பு நிறத்தில் ஏற்படும் ஒரு நிறஜாலம் என்று
கண்டுபிடித்துள்ளனர்.

5 டிகிரி கோண விலக்கத்திற்கு உட்பட்டு நிலா உலா
வரும் கதிர் வீதியை ஒட்டி இருக்கும் முதல்
ஒளிப்பொலிவெண்ணுடைய நான்கு ராஜ விண்மீன்களில்
(ராயல்) அண்டாரசும் ஒன்று . அதனால் இது நிலவால்
இடைமறைப்புக்கு ஆளாகும் வாய்ப்பைப்பெற்றுள்ளது.
அப்போது அண்டாரஸ்-B யைக் காணமுடிகிறது.
31 ஜூலை 2009 , அண்டாரஸ் நிலவால் இடைமறைப்பு
செய்யப்பட்டது.

இதன் செந்நிறம் சரித்திரக் காலந்தொட்டே இதற்கு
ஒரு தனிச் சிறப்பைப் பெற்றுத் தந்துள்ளது.
எகிப்தில் கோயில்கள் எல்லாம் அங்கிருந்து அண்டாரசைக்
காணும்படி கட்டமைக்கப்பட்டுள்ளன .அங்கு நடைபெறும்
விழாக்கள் அனைத்தும் அண்டாரசின் தோன்றுதலோடு தொடர்புபடுத்தப்பட்டன.