அறிக இயற்பியல் -6
ஒருவன் பிற்காலத்தில் கெட்டிக்காரனாக வருவான இல்லையா
என்பதை அவன் சிறுவயதில் செய்யும் ஒரு சில செயல்களைக்
கொண்டே கூறிவிடமுடியும். தன்னுடைய பிள்ளையின்
தனித்த ஈடுபாடுகளை இனமறிந்து அதை ஊக்குவித்தால் அவன் எதிர்காலத்தில் மிகச்சிறந்து விளங்குவான் என்பதை உறுதியாகக் கூறமுடியும் . இதற்கு பல எடுத்துக்காட்டுகளை
நாம் காட்டலாம் .
காரல் பெடரிக் ஹாஸ்(1777-1855) (Carl Friedrick Gauss ) என்பர் ஜெர்மன்
நாட்டு கணிதவியல் அறிஞர். இவர் இயற்பியலிலும்
வானவியலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார் .
ஏழு வயதுச் சிறுவனாகப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது,
அவரது கணக்கு ஆசிரியர் ஒரு முறை 1 முதல் 100 வரையுள்ள எண்களைக் கூட்டி விடை காணுமாறு வகுப்பு மாணவர்களைக்
கேட்டார். அதற்கு மிகச் சரியாக 5050 என்று கணப்பொழுதில்
விடை எழுதி ஆசிரியரிடம் காட்டினார் ஹாஸ் .
ஆச்சரியப்பட்டுப்போன ஆசிரியர் " இந்த விடையை எப்படிக் கண்டறிந்தாய் ? " என்று கேட்டார் .
அதற்கு "1 + 2 + 3 + ..... என்று தொடர்ந்து கூட்டுவது எனக்குச்
சோம்பலாக இருந்தது. இந்த எண் தொடரைக் கவனித்தபோது
முதல் மற்றும் இறுதி எண்களின் கூட்டுத்தொகை 101 அகவும்,
அவற்றை நீக்கிய பின்பு மீதமுள்ள முதல் மற்றும் இறுதி
எண்களின் கூட்டுத் தொகை 101 அக இருப்பதையும் கண்டேன் .
1 + 100 = 101 ; 2 + 99 = 101 ; 3 + 98 = 101 , இதன் இறுதி இணை
50 + 51 = 101 ஆகும். எனவே இதில் 50 மடங்கு 101 என்றும் அல்லது
101 மடங்கு 50 என்றும் இருக்கிறது என்று முடிவு செய்து இத்
தொடரின் கூட்டுத்தொகையை 50 x 101 = 5050 என்று கண்டறிந்தேன் " என்றார் .
நல்ல வீரியமான மரங்கள் வீரிய விதைகளிலிருந்துதான்
வளருகின்றன . பூத்துக் குலுங்கும் செடி அதற்கு முன்பு
ஒரு பூரிப்பை வெளிப்படுத்திக் காட்டும் .
வெப்பக் காற்று பலூனின் ஆற்றல் மூலம்
ஒரு பொருளைத் தரையிலிருந்து மேலுயர்த்தும் போது அதன் நிலையற்றலை அதிகரிக்க வேலை செய்தாக வேண்டும் .இந்த வேலையை வெவ்வேறு மூலங்களி லிருந்து பெற முடியும் .
தூக்கு கூண்டு ஆற்றலை மின்சாரத்திலிருந்து பெறுகின்றது .
ஏவுர்த்தி இந்த ஆற்றலை எரிபொருளை எரிப்பதிலிருந்து
பெறுகின்றது . ஆனால் எந்த இயந்திரப் பொறியும் இல்லாத
வெப்பக் காற்று பலூன் எப்படி தன் நிலை ஆற்றலை உயர்த்திக் கொள்கிறது ?
*******************
வெப்பக் காற்றின் அடர்த்தி குறைவு .எனவே வெப்பக் காற்று பலூன் வெளியேற்றும் காற்றின் எடை அதிகமாக இருப்பதால்
தோற்ற எடைக் குறைவை பலூன் பெறும். அதன் எடையும்
அதனால் வெளியேற்றப்படும் காற்றின் எடையும் சமமாக இருக்கும்
வரை பலூன் மேலுயருகிறது .இது மிதத்தல் விதியே ஆகும் .
காற்றின் அடர்த்தி உயரம் செல்லச் செல்லக் குறைகிறது . பலூனில்
அடைபட்ட வெப்பக் காற்றின் அழுத்தம் புற அழுத்தத்தைவிட
அதிகமாகிவிடுவதால் அது சற்று விரிவடையும். எனினும் அதன்
அடர்த்தி பெரியஅளவில் குறைவதில்லை .எனவே புறக் காற்றின்
அடர்த்தியும் ,பலூனில் அடைக்கப்பட்ட வெப்பக் காற்றின் அடர்த்தியும் சமமாக இருக்கும் வரை பலூன் செல்லும் .
No comments:
Post a Comment