Wednesday, September 22, 2010

Arika ariviyal-7

சுட்டிப் பையன் தான் பிற்காலத்தில் சுயமாகச் சிந்திக்கும் திறன் கொண்டவனாகத் திகழ்கிறான்.அவனுடைய சுட்டித்தனம் பொறுக்கமுடியாமல் சிலர் வெகுவாகக் கட்டுப்படுத்திவிடுகின்றனர்.
இது அவனுடைய கெட்டிக்காரத் தனத்தை மட்டுப்படுத்தி விடுகிறது.
சுட்டித்தனத்தை வழிப்படுத்தி அது அவனுடைய வளர்ச்சியோடு ஒருங்கிணைந்து செல்லுமாறு செய்யவேண்டியது ஒரு
பெற்றோருடைய கடமையாகிறது . சுட்டித்தனம் என்பது காட்டாற்று வெள்ளம் போன்றது . அது வீனாகிவிடவும் கூடாது ,
வயல்களையும் ,ஊரையும் அழித்துவிடவும் கூடாது . சரியான காலத்தில் ,சரியான இடத்தில் அணை கட்டி சமுதாயத்திற்கு
அர்ப்பணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது .
அந்த விதத்தில் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது
இளைஞர்கள் மட்டுமில்லை ,அப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்குவதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட
பெற்றோர்களும் தான் .
ஜேம்ஸ் வாட்டின் சுட்டித்தனம் இதற்கு சரியான எடுத்துக்காட்டு .
                                        
ஜேம்ஸ் வாட்
ஜேம்ஸ் வாட் நீராவியின் ஆற்றலை வெளிப்படுத்திக்காட்டியவர் .
ஜேம்ஸ் வாட் சிறுவனாக இருந்த போது,ஒரு நாள் அவருடைய
தாயார் அவரைப் பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்று விட்டார் .சில நாட்கள் கழித்து ஊருக்குத் திரும்பி வந்து பெற்ற
மகனைத் திரும்ப அழைக்கச் சென்றார் . அப்போது
அண்டை வீட்டுக்காரி ," ஜேம்ஸ் பல விந்தையான சோதனைகளைச் செய்து காட்டி எங்களை எல்லாம் பெரும் வியப்பில் ஆழ்த்தி
விட்டான் . தொடர்ந்து அவன் இப்படிச் செய்து காட்டுவதை என்னால் இனிமேலும் தாங்கிக் கொள்ள முடியாது . பல நாட்கள்
தூக்கமில்லாமல் அவதிப் பட்டுக்கொண்டிருக்கிறேன் .நான்
அலுவலக வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி ஓய்வாக
இருக்கும் வேளையில் இவன் தன அறிவியல் சாகசங்களை ஒவ்வொன்றாகச் செய்து காட்டி என்னை வியப்பில் ஆழ்த்திவிடுவான்.
அறிவியல் தொடர்புடைய கற்பனைக் கதைகளையும் கூறி
விவாதிக்கத் தூண்டுவான் . அவை வேடிக்கையாகவும் ,
நம்பும் படியாகவும் இருக்கும் . இதைக் கேட்ட அண்டை அயலார் அனைவரும் மெய்மறந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள் .
சில சமயம் மறு நாள் பொழுது கூட விடிந்து விடும். இனி
என்னால் இந்த வியப்பையும், தூக்கமின்மையையும்
தாங்கிக் கொள்ளமுடியாது . உங்கள் பிள்ளையை உடனே
அழைத்துச் சென்றுவிடுங்கள் . கோடிப் புண்ணியம்."
என்று படபடத்தாள் .

பிள்ளைகள் அப்படித்தான் இருக்கவேண்டும் .
                                          ****************
ஒரு கண்ணாடிக் குவளையில் போதிய அளவு நீர் எடுத்துக்
கொள்ளவும் . இரண்டு குழலுரிஞ்சிகளுள் ஒன்றை குவளைக்
குள்ளும் மற்றொன்றை குவளைக்கு வெளியிலும் இருக்குமாறு வைத்து ,ஒரே சமயத்தில் உறிஞ்சவும் .அப்போது என்ன நிகழும் ?
                                        
                                         *****************
அப்போது குவளையிலிருந்து நீரைக் குடிக்கமுடியாது .ஏனெனில்

குழலுறிஞ்சி வழியாக நீரை உறிஞ்சுவதை விடக் காற்றை
உறிஞ்சுவது மிகவும் எளிது .எனவே நீரை உறிஞ்சுவதற்கு ஒரு குழலுறிஞ்சியும் காற்றை உறிஞ்சுவதற்கு மற்றொரு
குழலுறிஞ்சியும் சமகாலத்தில்பயன்படுத்தும் போது ,காற்று
மட்டுமே உறிஞ்சப்படுகிறது . இரண்டு உறிஞ்சிகளால் எது எளிதாக
உறிஞ்சப்படுமோ அது மட்டுமே செய்யப்படுகிறது .மின் தடைக்குக்
குறுக்காக ஒரு மின் கம்பியை இணைக்க எப்படி பாயும் மின்சாரம்
குறுக்கிணைப்புக் கம்பி வழியாகச் செல்கிறதோ அதுபோல .

                                               ******************

No comments:

Post a Comment