Monday, September 27, 2010

vanna vanna ennangal-17

வண்ண வண்ண எண்ணங்கள் -17


எண்ண எண்ண வண்ணங்கள்



இந்தியர்களுக்கு இந்தியர்கள் ஆக்கம் தரும் ஊக்கத்திற்குக் காரணமாக
இருப்பதில்லை .

பெரும்பாலானோர் அரசியல் வாதிகளைப் போல இந்தியாவிற்கு மக்கள் தொகைப்பெருக்கமே ஒரு பலவீனம் என்று நினைக்கிறார்கள் .
தங்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச வாய்ப்புகளுக்குக் கூட மற்றவர்கள் போட்டி போடுகிறார்கள் என்ற நினைப்பே இந்த எண்ணத்தை வலுவூட்டுகிறது.ஆனால் உண்மையில் மக்கள் தொகைப்
பெருக்கம் என்பது நாட்டின் கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளங்களைப் பெருக்குவதற்குத் தேவைப்படுகின்ற உழைப்பைத்
தரக்கூடிய மூலங்கள் என்பதால் அதை ஒரு பலவீனமாகக் கருதவே முடியாது.பெரும்பாலான இந்தியர்கள் ஆக்கப்பூர்வமாக ஏதும் செய்வதில்லை .ஒன்று காலத்தை வீணாக்குகிறார்கள் ,அல்லது
தவறான பாதியில் தங்கள் திறமையை வீணடிக்கிறார்கள் .இது பலமாக
இருப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தந்துகொண்டிருக்கிற சிறுபான்மையினரையும் மௌனமாக பலவீனப்படுத்திவிடுகிறது .

இங்கே 'Do as Roman does' என்ற பொன்மொழி பொருந்தாது .


மனதில் பூக்குமா மனிதநேயம் ?









திங்கள்கிழமை ஊக்கம்தரும் திருமால்மருகன் கோயில்


செவ்வாய்க் கிழமை ஆக்கம்தரும் சிவபெருமான் கோயில்


புதன் கிழமை நலம் தரும் புற்று மாரியம்மன் கோயில்


வியாழக்கிழமை வீரம் தரும் வீரமாகாளியம்மன் கோயில்


வெள்ளிக்கிழமை வரம் தரும் விக்ன விநாயகர் கோயில்


சனிக்கிழமை ஆற்றல் தரும் அழகு முருகன் கோயில்


ஞாயிற்றுக்கிழமை ஞானம்தரும் தட்சிணா மூர்த்தி கோயில்


ஓ மனிதா .......


என்ன தேடி இங்கே சென்றாய் ?


என்ன வேண்டி அங்கே நின்றாய்?


என்ன விட்டு எங்கே மீண்டாய் ?


வெளியில் இல்லாதவன் இருக்கிறவனிடம் யாசிக்கிறான்


உள்ளே இருக்கிறவன் இல்லாதவனிடம் யாசிக்கிறான்


மனமிருந்தும் யோசிக்க மறந்துவிட்டாய்


மனிதனை நேசிக்கத் தவறிவிட்டாய்


ஆனால்.........


உண்மையென்று என்னென்னவோ சொல்கிறாய்


உள்ளம் உனக்காவது ஒத்துப்போகிறதா ?


உடல் யாருக்காவது உதவி செய்கிறதா ?


உள்ளே நேயமின்றி உடல்மட்டும் ஊறினால்


உடற்கூறு நோயின்றி நலங்கெட்டு வளராதா ?


உடல் நீர் உள்ளம் நெருப்பென்றால்


உள்வெப்பத்தால் உருவம் தரங்கெட்டுப் போகாதா ?


எனவே.......


ஒருநாள் இந்துக்களின் இராமர் கோயிலுக்குப் போ


மறுநாள் இஸ்லாமியர்களின் தொழுகைக்குப் போ


ஒருநாள் கிருத்துவர்களின் தேவாலயத்திற்குப் போ


மறுநாள் பௌத்தர்களின் மடாலயத்திற்குப் போ


ஒருநாள் சீக்கியர்களின் குருத்துவாரா போ


மறுநாள் சமணர்களின் புனிதத்தலத்திற்குப் போ


பூமியில் எல்லாம் புண்ணியத் தலங்களே






மறுநாள் இல்லாவிட்டால் ஒருநாள்


மலையில் பூக்கும் குறுஞ்சி மலர்போல


மரபழிந்த மனிதநேயம் மலரும்


மாநிலம் முழுதும் மணக்கும்







No comments:

Post a Comment