Tuesday, September 7, 2010

Arika iyarpiyal -5

கனவு காணுங்கள் இளைஞர்களே என்று நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்
அவர்கள் அடிக்கடி கூறுவார்கள் . உண்மைதான் , உண்மையான கனவுகளே வாழ்க்கையில்
உயர்ந்த மனிதர்களை உருவாக்குகின்றது ஒரு செயல் எண்ணத்திலிருந்து உருவாகிறது ,ஆனால்
அந்த எண்ணங்களோ ஒருமுகப் படுத்தப்பட்ட சிந்தனையிலிருந்து உருவாகின்றன ,
சேகரித்த சிதறிய கருத்துகள் கனவுகளுக்குக் காரணமாக இருந்தாலும் ,ஒத்ததிரும்
ஒருங்கிணைந்த கருத்துகளே நிஜத்தைக் காட்டும் நிழல் வடிவக் கனவுகளுக்குக் காரணமாக
இருக்கின்றன.
ஒரு ஆசிரியர் தன் மாணவனைப் பார்த்து உன் எதிர்காலக் கனவு என்ன என்று கேட்பார் .
அம் மாணவர் நான் பொறிஞ்கராகப் போகிறேன் என்றோ டாக்டராகப் போகிறேன் என்றோ
கூறுவதைக் கேட்டிருக்கிறோம் . அவனுடைய கனவு உண்மையானதாக இருக்குமானால்
எதிர்காலத்தில் அம் மாணவர் அப்படியே ஆகிறார் . இதில் ஒரு நுட்பமான உளவியல்
கருத்து உள்ளடங்கி இருக்கிறது. ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்ல .அது அதுவாகவே
ஆகிவிடுகிறது என்பதுதான் . ஒப்புக்குச் சொல்லாமல் ,மனப்பூர்வமாகச் சொல்லிப் பாருங்கள் ,
உங்கள் பிள்ளையின் மனதில் அது ஆழப் பதிந்து விட்டால் அவர்களை நீங்கள் எப்படி
உருவாக்கவேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியே உருவாக்கமுடியும் .

ஒரு சிலருக்கு இயல்பாகவே ஒரு ஈடுபாடும் ஆர்வமும் வந்துவிடும் . அவர்களோடு
ஒப்பிட்டு உங்கள் பிள்ளையும் அப்படி வரவேண்டும் என்று உங்கள் முயற்சி இல்லாமல்
அவர்களைக் கட்டாயப் படுத்தாதீர்கள் . ஒவ்வொருவருக்கும் புறச் சூழல் வேண்டுமானால்
ஒரேமாதிரியாக இருக்கலாம் ஆனால் அகச் சூழல் பெரிதும் வேறுபட்டது ..ஒரு கல்லுக்குள்ளே
ஒரு அழகான சிலை இருக்கிறது என்பதை அதை வடிக்கும் சிற்பி மட்டுமே அறிவான் .அதைப்போல
உங்கள் பிள்ளைகளைப் பொருத்தமட்டில் நீங்கள் தான் தலைமைச் சிற்பி .

                                               ********************
 தன்னைத் தானே தூக்க முடியுமா ?

 ஒரு சதுர மரப் பலகையில் ஒரு கப்பியைப் பொருத்தி ,அதன் வழியாக
ஒரு கயிற்றை விட்டு ஒரு முனையை விட்டத்தில் இறுக்கமாகப்
பிணைத்துவிட்டால்,மரப் பலகையில் நின்று கொண்டு கயிற்றை இழுத்து
ஒருவர் தன்னைத் தானே உயரத் தூக்கிக் கொள்ள முடியுமா ?

                                                *******************

கயிறு நீட்சியுறாததாகவும்,நிறையற்றதாகவும் ,அதன் ஒரு முனை நிலையான அமைப்போடு பிணைக்கப்பட்டிருப்பதாகவும் ,கப்பி நிறையற்றதாகவும் இருப்பதாகக் கொள்வோம் .
மரப்பலகையில் உள்ள மனிதர் கயிற்றை மேல்நோக்கி இழுக்கும்
பொது கயிற்றில் இழுவிசை தோன்றுகிறது .வெளியிலிருந்து ஒரு மனிதர் இக் கயிற்றை மேல் நோக்கி இழுக்கும் போது
வேலை பாதியாகக் குறைகிறது. ஏனெனில் இழுவிசை கயிற்றின் இரு பக்கமும் செயல்படுகிறது .ஆனால் கயிற்றை இழுக்கும் மனிதர் மரத்தளத்தில்இருக்கும் போது ,இழுவிசை,மரப்பலகை மற்றும்
அதிலுள்ள பொருட்களின் எடையைவிடக் கூடுதலாக இருக்க வேண்டும் . அப்போதுதான் ஒருவர் தன்னைத் தானே தூக்கிக் கொள்ளமுடியும் .

சோதனையில் 80 கிலோ எடையுள்ள ஒருவர் 50 கிலோ எடையுள்ள
மரப்பலகையில் அமர்ந்துகொண்டு இப்படித் தன்னைத் தானே தூக்கிக்கொள்வதை உறுதி செய்ய முடிந்தது

No comments:

Post a Comment