Wednesday, September 29, 2010

Eluthatha Kaditham-12

எழுதாத கடிதம் -12


அன்பார்ந்த ஆளும் அரசியல்வாதிகளே,


மக்களுக்கு மற்றவர்கள் நல்லது ஏதும் செய்யவில்லை என்று

மனம் வருத்தப்பட்டு ,இந்த அப்பாவி மக்களுக்கு எப்படியாவது

தொண்டாற்றப் போகிறேன் என்று உறுதிகொண்டு அரசியல்வாதியாகி

ஆட்சி அமைப்பில் இடம் பெற்றிருக்கிறீர்கள்.

அரசுமுறைப் பயணமாக நீங்கள் உங்களுடைய பதவிக் காலத்தில்

பல முறை பல நாடுகளுக்குச் சென்று வருகிறீர்கள் .இது போன்ற

பயணங்கள் வெறும் உல்லாசப் பயணங்களாக இருந்துவிடக் கூடாது .

நம் நாட்டிலிருந்து வளங்களை அங்கே இறக்குமதி செய்து

முடக்கிவிடாதீர்கள் ,மாறாக அங்கிருந்து என்னவெல்லாம்

இங்கே இறக்குமதி செய்யமுடியும் என்பதற்கான வாய்ப்புகளைத்

தேடுங்கள். ஒரு தனி மனிதன் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது

இது போன்ற வாய்ப்புகளைப் பார்த்து பிரமித்துப் போகிறான்.

உங்களுடைய கண்களில் இது போன்ற நல்ல நல்ல வாய்ப்புக்கள்

தெரிவதில்லையா ? அவற்றைப் பார்த்த பிறகு அவற்றையும்

நம் நாட்டில் நடைமுறைப் படுத்தவேண்டும் என்று

நினைத்ததில்லையா? நம் நாட்டை மென்மேலும் வளப்படுத்துவதற்கு

அங்கு வெற்றிகரமாகப் பின்பற்றப்பட்டு வரும்

அணுகுமுறைகளைப் பற்றியும் ,அவை தொடர்பான விவரங்களைப்

பற்றியும் நீங்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு நாட்டின் பிரதிநிதியாகச்

செல்லும் உங்களுக்கு அதிகம் .இந்த வாய்ப்பை நீங்கள்

தவறவிட்டால் ,அது நீங்கள் நாட்டு மக்களுக்குச் செய்யும்

இழப்பாகும் .நீங்கள் மக்களுக்கு அதிகம் பயன்தருகிற பிற நாட்டு

அணுகுமுறைகளையும் திட்டங்களையும் தெரிந்து கொண்டால்

அவற்றை நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்தும்

வாய்ப்புகளை உங்களுடைய பதவிக் காலத்திலேயே எளிதாக

உருவாக்க முடியும் .தான் நேர்மையாக ஈட்டிய பொருளைக் கொண்டு

மக்களின் ஒரு சில தேவைகளை நிறைவேற்றினால் அது உங்கள்

தர்மம் .அதை ஒரு தனிமனிதனாக இருந்துகொண்டே

செய்யமுடியும் என்பதால் ஒரு பதவி தேவையில்லை .

அரசு நிதியில் மக்களின் வசதிகளை மேம்படுத்தினால் அது உங்கள்

கடமை .வரி வசூலிக்கும் முறையே அதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டது .

அரசின் கடமைகளைத் தான் செய்யும் தனி மனிதன் தர்மங்களாக

மாற்றிக் கொள்ளாதீர்கள் . இத் தவறான முன் உதாரணமாகி விடும் .



அன்புடன்

"காவேரி"

1 comment:

  1. Dear Dr.Meyyappan,

    Please correct the below mentioned statement given under 'About Me'column.

    "I am hailed from Karaikudi"

    ReplyDelete