Thursday, September 23, 2010

Arika ariviyal-8

ஒரு பையன் பிற்காலத்தில் சிறந்து விளங்குவானா என்பது
அவன் சிறுவனாக இருக்கும் போதே அவன் காட்டும்
ஈடுபாடுகளிலிருந்து ஓரளவு ஊகித்தறியமுடியும். நாம்
அந்த ஈடுபாட்டிற்கு ஆதரவாக இருக்கிறோமா
அல்லது எதிரியாக இருக்கிறோமா என்பதைப் பொருத்து இது பெரும்பாலும் உறுதி செய்யப்படுகிறது .

பால் எர்லிக் (Paul Ehrlick ) உயிரியல் துறை சார்ந்த ஒரு விஞ்ஞானி ..ஜெர்மனி நாட்டைச் சேர்த்த இவர் 1908 ஆம்
ஆண்டிற்கான மருத்துவத் துறைக்குரிய நோபெல் பரிசைப்
பெற்றவர். இவர் சிறு பையனாக இருந்த போதே அவருடைய மேதாவித்தனம் வெளிப்பட்டது. ஒரு சமயம் அவருடைய பள்ளியில் ஒருவருடைய சொல்லாட்சி மற்றும் கற்பனை வளத்தை மதிப்பிடும் வகையில்
                      " வாழ்க்கை - ஓர் இனிய கனவு"
என்ற

தலைப்பில் கட்டுரை வரையச் சொன்னார்கள் . பால் எர்லிக் கட்டுரை எழுதிக் கொடுத்தார் . அதில் ," ஒருவருடைய வாழ்க்கை முழுதும் கனவுகளால் ஆனதாக இருக்கலாம், ஆனால் கனவுகள் உண்மையில் வேதியல் வழிமுறையாகும். இது ஒரு வைகயான மூளையால் நிறைவேற்றப்படுகின்ற நின்றொளிர்வு (Phosphorescence ) ஆகும்.
எனவே இதில் அறிவியலுக்கு அப்பாற்பட்டகற்பனை எது இல்லை .
இது தொடர்பான வேதியல் பற்றித் தெரியாதவர்களே
கனவுகளைக் கற்பனை என்றும் விஞ்ஞானத்திற்கு புறம்பானது
என்றும்கூறுகின்றனர்.. இதை படித்த ஆசிரியர்கள் மன அமைதியை இழந்தார்கள் . பால் எர்லிக்இதற்கு எவ்வளவோ விளக்கம் கூறியும்,
அதை ஏற்றுக் கொள்ளாத ஆசிரியர்கள் .அவரைத் தேர்வில் தோல்வியடையும்படி செய்தனர் . எனினும் பால் எர்லிக் மனம் தளரவில்லை . பின் நாளில் அவர் தன் விருப்பத் துறையில்
ஒரு பெரிய சாதனையாளராக வளர்ந்தார் .
                                                         *************

மூழ்கிய கப்பல் எங்கே நிலைப்படும் ?




ஈர்ப்பு விசையால் பொருள் இழுக்கப்படுகின்றது, வளிமம் இறுக்கப்படுகின்றது விண் மீன்களில் வளிமக் கோளம் இறுக்கப்படுகின்றது .வியாழன் கோளில் ஹைட்ரஜன் உறைந்து
இறுக்கப் பட்டிருப்பதால் திண்ம நிலையில் இருக்கின்றது
பூமியில் வளிமண்டலம் வெப்பச் சலன இயக்கத்திற்கு எதிராக
இறுக்கப் படுவதால்அடி நிலையில் அடர்த்தி அதிகமாக
இருக்கின்றது .கடலின் ஆழங்களில் நீர் இறுக்கப்படுவதால்
நீரின் அடர்த்தி அங்கு அதிகமாக இருக்கும் எனலாம் .இதனால்
மூழ்கிய கப்பல் கடலின்அடிப் பரப்பை எட்டுவதில்லை
என்றும் ,எவ்விடத்தில் கப்பலின் அடர்த்தியும் இறுகிய நீரின்
அடர்த்தியும் சமமாக இருக்கின்றதோ அவ்விடத்தில் மிதவலாக
இருக்கும் என்றும் கூறலாம் . இது சரியா?

                                                            *************
பொதுவாக நீர்மத்தின் இறுகு திறன் மிகவும் குறைவு .நீரின் மீது

கூடுதலாக 1 வளி மண்டல அழுத்தம் செயல்பட அதன் பருமன்
0௦.00005 % குறைகிறது .அழுத்தத்திற்கு ஏற்ப நீரின் இறுகு திறன்
மாறாதிருந்தால் 50 ,௦௦௦ வளி மண்டல அழுத்தத்தில் நீரின் அடர்த்தி
இரும்பின் அடர்த்திக்கு இணையாகும் . இந்த அழுத்தம் 500 கி மீ
ஆழத்தில் ஏற்படுகிறது .இரும்பின் (கப்பலின் மூலப்பொருள் ) இறுகு
திறனையும் கருத்திற் கொண்டால் இந்த ஆழம் இன்னும் கூட அதிகமாகும்.எனினும் இது பூமியில் சாத்தியமில்லை . ஏனெனில்
கடலின் பெரும ஆழம் 11 கி மீ மட்டுமே .

No comments:

Post a Comment