Sunday, September 19, 2010

vanna vanna ennangal-16

வண்ண வண்ண எண்ணங்கள் -16




1 .எண்ண எண்ண வண்ணங்கள்


இன்றைக்கு சமுதாயம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. மொழி வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார
வளர்ச்சி இப்படி பல துறைகளில் பெற்ற வளர்சிகளைக்
கொண்டு வாழ்கையை வளப்படுத்திக்கொள்ள மனிதன்
ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறான்.
ஆனால் எதுவுமே மன நிம்மதியைத் தரவில்லை .பழ்ங்காலத்திய சிந்தனைகளைத் தவிர வேறெதுவும் உண்மையான மகிழ்ச்சியைத் தரவில்லை.


2 .கவிதை
  முல்லாவும் முத்துராமனும்




காந்தித் தெரு முஸ்லிம்களுக்கும்


கபார்கான் தெரு இந்துக்களுக்கும்


ஒருவருக்கொருவர் ஆகாது


ஒருநாளும் சண்டை ஓயாது


பொய்யொன்று பற்றிக்கொண்டதால்


மெய்களெல்லாம் தீயின்றி எரிந்தன


எல்லையென்று அதற்கில்லாததால்


எதிர்காலமின்றி எல்லாமே அழிந்தன


வாய்ச்சண்டை வளர்ந்து முற்றியது


கைச்சண்டை தொடர்ந்து மோதியது


வாள்ச்சண்டை தினமும் வழக்கமானது


வெடிச்சண்டை தீவிர முழக்கமானது


அறிவு சுருங்க அறியாமை களித்தது


இதயம் சுருங்க இரத்தம் வழிந்தது


உள்ளம் சுருங்க ஊர் பற்றிஎரிந்தது


ஊர் சுருங்க உலகம் எள்ளிநகைத்தது


நல்லோர் வார்த்தைகள் மண்ணில் வீழ


தீயோர் வார்ப்புகள் கண்ணில் வெறித்தன


உலகப் பெரும் போரைவிட


உள்ளத்தின் உரசல்கள் உயிரைக் குடித்தன


கலவர பூமி ஆனதால்


காலவரையறையின்றி பள்ளிகள் மூடப்பட்டன


அவசரமாய் பள்ளிவாகனம் சென்றபோது


அதுவும் சாலை விபத்துக்குள்ளானது




முதல் வகுப்பு முத்துராமனும்


மூளைச் சாவால் முடங்கிப்போனார்கள்


மூச்சு விடும் உறுப்புகள் தானமாயின


முல்லாவின் கண்கள் கண்ணனின் பார்வையானது


முத்துராமனின் இதயம் கரீமின் பாகமானது


முல்லாவின் சிறுநீரகம் சிவாவின் உறுப்பானது


முத்துராமனின் மூட்டு முஸ்தபாவின் உடைமையானது


மண்ணில் படிந்த கறைகள்


விண்ணில் கழுவப்படுகின்றன !.

அல்லாவின் ஆசிர்வாதம்

கண்ணனுக்கும் சிவாவிற்கும்


அருள்மிகு முருகனின் அன்பு


கரீமிற்கும் முஸ்தபாவிற்கும்


எல்லோரும் ஒற்றுமையாய் வாழ


இதற்குமேல் என்ன வேண்டும் ?

















No comments:

Post a Comment