Saturday, October 13, 2012

Sonnathum Sollathathum



சொன்னதும் சொல்லாததும்

ஒரு தாய் தன் குழந்தை சரியாகச் சாப்பிட மறுக்கிறான் என்று நிலாவை வேடிக்கை காட்டி ஊட்டுகின்றாள் .எட்டாத் தொலைவிலிருந்தாலும் இரவில் எல்லாத் தாய்மார்களுக்கு எட்டும் தொலைவில் இருக்கக் கூடிய ஒரு பொது விளையாட்டுச்சாதனம்.

அம்மா : நிலா நிலா ஓடிவா

நில்லாமல் ஓடிவா

அம்மாவின் இடுப்பில் அமர்ந்து கொண்டு ஓடும் மேகங்களுக்கு இடையில் ஒளியும் நிலவைக் கண்டு ,அம்மாவின் அழைப்பை ஏற்று இந்த நிலவு ஒருநாள் நம்மிடம் வந்து சேரும் என்று எண்ணிக் கொண்டே அடம் பிடிக்காமல் சாப்பிட்டு முடித்தது. .

குழந்தை கொஞ்சம் வளர்ந்து பையனானான் .

அம்மா: நிலா நிலா ஓடிவா

நில்லாமல் ஓடிவா

முன்பெல்லாம் பேசாமல் சாப்பிட்டவன் ,இப்பொழுது கேள்வி கேட்கின்றான். 'போம்மா ,நீயும் வருஷக் கணக்கில் நிலவைக் கூப்பிட்டுப் பார்க்கிறாய். அது உன் அழைப்பை ஏற்று இங்கே வரவே மாட்டேங்குது' .

பையனை எப்படியும் சாப்பிட வைத்து விட வேண்டும் என்பதற்காக ஒவ்வொருநாளும் அம்மாவின் கற்பனை ஒவ்வொரு விதமாக இருக்கிறது.

அம்மா : நிலவு அம்மாவாசைக்கு வரும்பாரு. அன்றைக்கு வானத்தில் நிலவு தெரியாது.

பையன் வளர்ந்து பெரியவனாகி விட்டான். நிலவைப் பற்றி அம்மா சொன்னதில் ஒரு நிஜமும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டான். அப்பொழுதே ஒரு முடிவு செய்து விட்டான் . அம்மா அழைத்தும் நீ வராவிட்டால் என்ன, ஒருநாள் நானே உன்னை வந்து சந்திக்கிறேன் என்று. நிலவிற்கு சவால் விட்டான்.அந்த நாளும் வந்தது. 18 July 1969 அன்று நிலவில் இறங்கி தன் காலடியைப் பதித்தான். அங்கிருந்து தன் அம்மாவுடன் தொடர்புகொண்டு பேசும் போது "அம்மா நீ அழைத்து ஒருநாளும் வராத அந்த நிலவை நான் காலால் மிதித்து விட்டேன்" என்று சொன்னான்.

அவர் வேறு யாருமில்லை.Aug 25,2012 அன்று மறைந்து போன 82 வயதான நீல்ஸ் ஆம்ஸ்ட்ராங்(Neil Armstrong)என்ற அமெரிக்க விண்வெளி வீரர். நிலவை நோக்கிப் பயணித்த போதுஅவர் மனம் இப்படித்தான் முனுமுனுத்திருக்கும் .”நிலா நிலா என்னைப் பாரேன் ,நில்லாமல் ஓடி வாறேன்எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் குடியேறினால் அங்கே நீல்ஸ் ஆம்ஸ்ட்ராங் காலனி,நீல்ஸ்ஆம்ஸ்ட்ராங் வீதி என்று நிச்சியம் இருக்கும்.






1 comment: