Friday, December 21, 2012

arika iyarpiyal


அறிக இயற்பியல்

ஒரு மின் சுருளின் வழியாக செல்லும் மின்சாரம் மாறுதலுக்கு உள்ளாகும் போது அச் சுருளோடு தொடர்புடைய காந்தப் பாயமும் ( magnetic flux) மாறுபடுவதால் மின் தூண்டல்(induction) காரணமாக ஒரு மின்னியக்கு விசை ஏற்படுகின்றது.தனக்குத் தானே தூண்டிக் கொண்டால் தன்-மின்தூண்டல் ( Self induction )என்றும் ,அருகிலுள்ள சுருளைத் தூண்டினால் பரிமாற்று மின்தூண்டல்(Mutual induction ) என்றும் கூறுவர்.இரண்டு மின் சுருள்களுக்கிடையே பரிமாற்று மின் தூண்டல் இல்லையென்றால் அவை தொடர் (series ) அல்லது பக்க (parallel ) இணைப்போடு இணைக்கப் படும்போது மொத்த மின் தூண்டல் தொடரிணைப்புக்கு L = L 1 + L 2 என்றும் பக்க இணைப்புக்கு 1/L = 1/L 1 +1/L 2 என்றும் குறிப்பிடலாம்.அதாவது மின்தடைகளின் மொத்த மின்தடையைக் கண்டறிய நாம் பயன்படுத்தும் அதே விதியையே இங்கும் பயன்படுத்தலாம் .ஆனால் அருகருகே யுள்ள மின்

சுருள்களுக்கிடையே பரிமாற்று மின் தூண்டல்களும் இருப்பதால் மொத்த மின் தூண்டல் வேறுபட்டிருக்கும் . மேலும் ஒரு சுருளின் காந்தப் பாயம் மற்றொரு சுருளில் செயல் படும் திசைக்கு ஏற்ப மாறு படும் .இரு சுருள்களும் தொடரினைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் போது அவரின் காந்தப் பாயம் நேரிணையான திசையில் செயல்பட்டால் மொத்த மின் தூண்டல் L =L 1 +L 2 +2 M எதிரிணையான திசையில் செயல்பட்டால் L =

 L 1+L 2 - 2M ,பக்க இணைப்பாக இருந்தால் நேரிணைப்புக்கு L = L 1+L 2 - M 2/

(L 1+L 2- 2M ) என்றும் எதிரிணைப்புக்கு L = L 1+ L 2 + M 2/(L 1 +L 2+ 2M ) என்றும் வருவிக்கலாம்

L என்ற தன்மின்தூண்டல் கொண்ட ஒரு மின்சுருள் பாதியாகப் பிரிக்கப்படுகின்றது .புதிய சுருளின் தன்மின்தூண்டல் எவ்வளவாக இருக்கும்.?

ஒரு மின்சுருள் பாதியாக வகுக்கப்படும் போது அதன் நீளம்(x ) பாதியாகவும் சுற்றுக்களின் எண்ணிக்கை(N) பாதியாகவும் ஆகின்றது.ஆனால் அதன் குறுக்குப் பரப்பு(A) மாறுவதில்லை.ஒரு சுருளின் கட்டமைப்பின் பரிமாண அளவுகளின் படி அதன் தன்மின்தூண்டல் L , எண்ணிக்கையின் இருமடிக்கும் ,பரப்பிற்கும் நேர் விகிதத்திலும் ,நீளத்திற்கு எதிர் விகிதத்திலும் மாறுபடுகின்றது.எனவே ஒரு சுருள் பாதியாக வகுக்கப்படும் போது அதன் தன்மின்தூண்டல் L ' =

 L /2 மாறுபடும்

No comments:

Post a Comment