Saturday, December 1, 2012

Arika Iyarpiyal


அறிக இயற்பியல்

ஒற்றைச் சிறு பிளவின் வழியாக ஒளி ஊடுருவிச் செல்லும் போது அது ப்ரௌன்ஹோபர்(Fraunhofer) ஒளி விலக்கத்திற்கு(diffraction) உட்படுகின்றது அப்போது மையத்தில் பெரும ஒளிச் செறிவுடன்(Central maxima) இரு மருங்கும் சிறுமங்களும்(Minima) துணைப் பெருமங்களும்(secondary maxima) தோன்றுகின்றன



மையப் பெருமத்தினால் ஆன வரைகோடு அடைக்கும் பரப்பு எந்த இயற்பியல் பண்பினை க் குறிப்பிடுகின்றது ? பிளவின் அகலத்தை இரு மடங்காக அதிகரித்தால் இந்த மையப் பெருமத்தின் உயரம் மற்றும் அகலம் எங்ஙனம் மாறுதலுக்கு உள்ளாகும் ? சிறுமங்களின் அமைவிடங்கள் மற்றும் தென்படும் சிறுமங்களின் எண்ணிக்கை போன்றவற்றில் ஏற்படும் மாறுதல்கள் என்ன ?

 வரைபடக் கோட்டால் அடைக்கப்பட்டுள்ள பரப்பு .பிளவின் ஓரலகு நீளத்தின் வழியாகச் செல்லும் ஒளிப் பாயத்தைப் பொறுத்து அமைகிறது. பெருமத்தின் உயரம் 4 மடங்கு அதிகரிக்கிறது ஆனால் அதன் அகலம் தொடக்க நிலை மதிப்பை விட பாதியாகக் குறைகிறது எல்லா சிறுமங்களின் அமைவிடங்களின் ஆயங்கள் பாதியாகக் குறைகிறது. இதன் விளைவாக 2 வது சிறுமம் முதல் சிறுமம் இருந்த இடத்திலும் 4 வது சிறுமம் 2 வது சிறுமம் இருந்த இடத்திலும் அமைகின்றன .இதன் காரணமாக கூடுதல் எண்ணிக்கையில் சிறுமங்கள் தோன்றுகின்றன. பிளவின் அகலம் இரு மடங்காக சிறுமங்களின் எண்ணிக்கையும் இரு மடங்காகின்றது

No comments:

Post a Comment