Sunday, December 23, 2012

Mind without fear


Mind without fear

சக தோழியர்களுக்கு வேலை கிடைத்துவிட்டது ஆனால் தனக்கு இன்னும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த ஒரு மாணவி மனம் வெறுத்து தற்கொலைக்கு முயன்றாள்.நல்ல வேளை மாத்திரைகளின் அளவு குறைவாக இருந்ததால் தப்பிப் பிழைத்தாள். அவள் கெட்டிக்காரி படிப்பில் மட்டும்.வேலை கிடைப்பதற்கு அது மட்டும் போதாது என்பதை அதற்குப் பிறகும் கூட அவள் தெரிந்து கொள்ளவில்லை.படிப்பு என்பது வகுப்பில் முதலிடம் பெறுவதற்காக இல்லை வாழ்கையில் முதலிடம் பெறுவதற்காக என்பதை இவளைப் போல பெரும்பாலான மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே புரிந்து கொள்வதில்லை. வெறும் நூலறிவு மட்டும் போதாது. பயன்பாடுடைய அறிவே எல்லோருக்கும் தேவையான அறிவு .படித்த வார்த்தைகளையும் தேர்வில் எழுதிய கருத்துக்களையும் செயலாக வடிக்க வளர்த்துக்கொள்ளும் திறமையையே இது குறிப்பிடுகின்றது. பிறருடைய பயன்பாட்டிற்காகவே நாம் படித்து நம் தகுதிப்பாட்டை உயர்த்திக் கொள்கிறோம் என்பது பலருக்குத் தெரிவதில்லை இதனால் வேலை வாய்ப்புக்களை இவர்கள் தவற விட்டுவிடுகின்றார்கள்      

 

மனம் போல வாழ்க்கை என்று கூறுவார்கள்.மனம் எதை விரும்பியதோ அதை அப்படியே அடையும்போது இது எல்லோராலும் சொல்லப்படும் வார்த்தைகள்.இந்த யதார்த்தத்திலிருந்து நாம் வாழ்வியல் தொடர்பான ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடிகின்றது .விரும்பியது தானாகக் கிடைத்தது போலத் தோன்றினாலும் உண்மையில் அதற்கும் நம்மை அறியாமல் நாம் செய்த முயற்சிகளுக்கும் உள்ளார்ந்த சில தொடர்புகள் இருக்கவே செய்கின்றன .அதாவது ஒன்றைப் பெறவேண்டுமானால் அந்த ஒன்றைப் பற்றி முதலில் நினைக்க வேண்டும்.நினைப்பு என்பது கரு.கருவின்றி ஒரு மனிதனால் எதையும் பெற்றெடுக்க முடியாது செயலைப் பொறுத்த வரையில் இக் கரு எண்ணங்களாகவோ,கனவாகவோ கூட இருக்கலாம்.இக் கருவை

வளர்த்து உருவம் கொடுக்க வேண்டியது என்பது அடுத்த முயற்சி.இது கரு முதிர்ச்சி பெறும் வரை உள்ளுக்குள்ளே வளர எண்ணங்களை வளப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளைத் தேடுதலாகும்..இது உறுதியான எண்ணங்களால் மட்டுமே வலுப்பெறும்.இல்லையென்றால் இடையிலேயே கருக்கலைப்பு ஏற்பட்டு விடாலாம். எப்பொழுது தோன்றிய எண்ணமும் தொடங்கிய செயலும் ஒரே முடிவை நோக்கிச் செல்கின்றதோ அப்பொழுது மனம் போல வாழ்க்கை என்பது வெகு இயல்பானதாகி விடுகின்றது.

No comments:

Post a Comment