Tuesday, December 4, 2012

creative thoughts


எண்ணத்தில் பூத்த வண்ணப் பூக்கள்


ஆன்மிகம்

*சலனப்படும் மனதை நிலைப்படுத்தும் பக்குவத்தை தியானம் நமக்குச் சொல்லித் தருகிறது. ஆன்மிகத்தை ஒருவர் மற்றவருக்கு அறிமுகப்படுத்தி விடலாம் ஆனால் ஆன்மிகத்தில் பொதிந்திருக்கும் இன்பத்தை நுகர்ந்து வாழ்கைப் பயனைத் துய்க்க வேண்டுமானால்                ஓவ்வொருவரும் தானே முயற்ச்சிக்க வேண்டும்.

*ஆன்மிகம் வெறும் அறிவு சம்பந்தப்பட்டதோ அல்லது வெறும் உணர்வு சம்பந்தப்பட்டதோ இல்லை. அறிவோடு உணர்வும் கலந்தது. ஒன்றில்லாமல் மற்றொன்றை மட்டும் கொண்டு ஆன்மிகத்தை முழுதுமாக அறிந்து கொள்ள முடியாது.

*ஆன்மிகம் என்பது கடவுளைத் தெரிந்து கொள்வதில்லை ,அறிந்து கொள்வது மில்லை .புரிந்து கொள்வதாகும்.அப்படிச் செய்யும் போது பிறப்பு-வாழ்க்கை- இறப்பு பற்றிய மெய்ப்பொருளை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது .

*முறையான பயிற்சி இல்லாததால் மௌனமாய் உட்கார்திருப்பதே தியானம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் .மனதில் ஒரு மாற்றத்தைத் தூண்டாத எதுவும் வெற்றுச் செயலாகும்.அதுவும் செயலின்மையை ஒத்ததே.

*சமுதாயம் வாழும் போது கூடவே இந்த ஆன்மிகமும் போற்றப்பட்டால்தான் சமுதாயம் வாழும் வாய்ப்பைப் பெரும்.சாகாத சமுதாயத்திற்கு இந்த ஆன்மிகம் உயிர் நாடி .

 *ஆன்மிகத்தை மதிக்காத சமுதாயம் காலத்தால் அழிந்து விடும் .அதனால் ஆன்மிகத்தை நாகரிக வளர்ச்சியின் எந்தக் கால கட்டத்திலும் புறக்கணித்து விட முடியாது.

*ஆன்மிகம் என்பது ஒரு விதத்தில் அறிவியலே. இயல்பாய் வாழும் கலையை வாழும் போக்கிலேயே கற்றுக் கொடுக்கும் கல்வி . இயற்கையைப் பார்த்துப் பார்த்து பாடம் கற்றுக் கொண்டு தன்னைத்தானே வளப்படுத்திக் கொள்ளும் அணுகு முறை .

 *இயற்கையின் வழிமுறைகளே ஆன்மிகத்தின் நெறிமுறைகளாக அமைவதால் ஆன்மிகமும் அறிவியலே 

*ஆன்மிகம் என்பது வெறும் கடவுள் நம்பிக்கை , பக்தி , தியானம் ,படையல் , யாகம் யாகம் வழி பாடு என்பது மட்டுமில்லை . அது ஆத்மாவின் தரத்தை , தகுதிப் பாட்டை உயர்த்திக் கொள்ளும் வழிமுறை ,இயற்கையோடு ஒன்றிணைந்து ஒத்ததிரத் தூண்டும் மனப் போக்கு இயல்பாக வாழும் வழிமுறையைத் தன்வசப் படுத்திக் கொள்ளத் தனக்குத் தானே வழிகாட்டிக் கொள்ளும் எளிய அணுகு முறை .ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களை தாங்களே தூய்மைப்படுத்திக் கொள்ள உதவும் உன்னதமான நடைமுறை.எல்லோருக்கும் இன்பமும் மகிழ்ச்சியும் தரும்  இனிய சமுதாய வாழ்கையின் மூல மந்திரம்

*அறிவியலுக்கு முன்பு மனிதர்களுக்கு அறிமுகமானது ஆன்மிகம் .இதை அறிவியலின் ஆரம்ப கால அரிச்சுவடி எனலாம் .ஆன்மிகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்ற அறிவியலே அதை அழிவிலிருந்து பாதுகாத்து வருகிறது

*அறிவியல் இல்லாமற் கூட ஒரு நாடு தப்பிப் பிழைத்து விடலாம் .ஆனால் ஆன்மிகமின்றி தழைக்க முடியாது .

*இறைவனும் இயற்கையும் வெவ்வேறா என்ன ? இயற்கையை இறைவனிடத்தில் காண்பது ஆன்மிகம் , இறைவனை இயற்கையாக்கிப் பார்ப்பது அறிவியல்

*இறைவன் எல்லாவற்றையும் செய்வான் மனிதர்கள் மூலமாக .இறைவன் வெறும் உடல் மனிதர்களே அவனது உயிர். உடலும் உயிரும் இணைந்தது தான் இந்த பிரபஞ்சம்.

*கோயில் என்பது சமுதாயக் காவல் நிலையம்.அறநெறி மீறாமல் மக்கள் வாழவேண்டும் என்பதற்காக சான்றோர்களால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பே கோயில்களும் அங்கே குடியிருக்கின்ற தெய்வங்களும் .

 *உருவ வழிபாடு என்பது ஆன்மிக அரிச்சுவடியின் ஆரம்ப நிலை. அருவ வழிபாடு என்பது இயற்கையை இறைவனாகக் காணும் உன்னத வழிமுறை. இறைவனைப் போல இயற்கையையும் எல்லோருக்கும் பொதுமைப்படுத்தும் நெறிமுறை

  * ஆன்மிகம் என்பது சமுதாயத்தின் இதயம் .உடலில் இரத்தத்தை இடைவிடாது ஓடச் செய்து உடல் நலம் காப்பதைப் போல ஆன்மிகம் மனதில் ஓடும் எண்ணங்களை தொடந்து சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கிறது இதனால் சமுதாயத்தின் நலம் காக்கப்படுகிறது.

*ஆன்மிகம் சமுதாயத்தின் சுத்தி கரிப்புத் தொழிற்ச்சாலை தொழிற் சாலை

*சமுதாய வாழ்கை இயற்கையாக இருக்குமானால் ஆன்மிகம் தேவையில்லை .

*எல்லோருக்கும் எல்லா ம் கிடைக்க எல்லோரும் ஒருவர்க்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத சமுதாய நீதி .இதைப் பிழையின்றித் தொடரச் செய்யும் ஓர் உந்து சக்தியே ஆன்மிகம் .

*மூளையில் பதிந்திருப்பதைவிட உள்ளத்தில் உறைந்திருக்க வேண்டும் என்பதற்காக ஆன்மிகத்திருக்கும் பல விதமான விளக்கங்கள் .இதில் நம்பமுடிவதுடன் ,நம்ப முடியாதவைகளும் இருக்கின்றன .

No comments:

Post a Comment