Wednesday, December 12, 2012

creative thoughts


எண்ணத்தில் பூத்த வண்ணப் பூக்கள்

அன்பு

*அன்பு மனதில் பரி பூரணமாக இருக்குமானால் இந்த உலகில் உள்ள அனைவருமே உனக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்

*அன்பு கூட இயல் வாழ்க்கைக்கு ஆபத்தானதுதான். மிகையான அன்பு வாழ்க்கையில் பற்றுக் கொள்ள ஒரு காரணமாகி விடுவதால் மனம் இறக்க விரும்புவதில்லை

*வாழ்கையில் அன்பு அளவாக இருக்க வேண்டும் .அன்பு இல்லாத வாழ்கை வாழ்க்கையே இல்லை..அன்பு அதிகமானாலும்,குறைவானாலும் வம்புதான். .உணவுக்கு மட்டுமல்ல உணர்வுகளுக்கும் உச்ச நீச்ச வரம்புகள் இருக்கவே செய்கின்றன

 *பிரபஞ்சத்தின் மூலமே நேசிப்பு என்ற அன்புதான். ஓர் அணு மற்றோர் அணுவை நேசித்ததின் விளைவே இப் பேரண்டத்தின் உருவாக்கம். நேசிப்பின்றி இப் பேரண்டத்தில் எதுவுமே உருவாகியிருக்க முடியாது.

*எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக அன்பு செலுத்தி உறவை வலுப்படுத்திக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு பிரிவின் போத வருத்தப் பட நேரிடும். இயற்கையான இறப்பைக் கூட வேண்டாம் என்று சொல்லத் தூண்டும் மட்டுமீறிய அன்பு செய்யும் வம்பு இது.

*சாகாத சமுதாயத்திற்கு இந்த அன்புதான் உயிர் மூச்சு அன்பு இல்லாவிட்டால் இந்த சமுதாயம் இயற்கையால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு வெகு முன்பே இல்லாமற் போய்விடும்.

*அறிவால் சாதிக்க முடியாததை அன்பு மிக எளிதாகச் சாதித்து விடுகிறது .

*அன்பு அகமனதைத் தூண்டி விடக்கூடிய ஒரு வலிமையான நெம்புகோல் .அக மனமும் புற மனமும் ஒன்றிணைந்து செயல்படுமானால் படைப்பாற்றல் பல மடங்கு அதிகரிக்கும்.

*உடலுறவிற்கு அடையாளமாக அன்பு இருக்கலாம் .ஆனால் அன்புக்கு அடையாளம் உடலுறவு இல்லை. பலர் இதைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள்

* மனிதர்களை விட விலங்கினங்கள் தாம் அன்பை மிகச் சரியாகப் பரிமாறிக் கொள்கின்றன.

காதல்

*காதல் இல்லையேல் சாதல்தான் . இது தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கும் பொருந்தும் ,பிரபஞ்சத்திற்கும் பொருந்தும்.

*வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோருக்கும் சமமாய் அளிக்கப் பட்ட பரிசு இந்த காதல் உணர்வு. உள்ளார்ந்த இவ்வுணர்வு இல்லாதிருந்தால் வாழ்கை இவ்வளவு கலகலப்பாக இருக்க முடியாது. அண்ட வெளிச் சூன்யம் போல, அரவமில்லா பாலைவனம் போல,ஆளில்லாத அரண்மனை போல சுவாரசியமின்றித் தோன்றும் .

*ஒரு புதிய கருவியைப் பற்றி ஏதும் தெரியாதவன் ,அதைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்படுவதை விட இயக்கிப் பார்ப்பதிலேயே அதிக விருப்பம் காட்டுவான். அதைப் போல காதலின் புனிதத்தைப் பற்றி ஏதும் அறியாதவர்கள் வெறும் சம்பிரதாயமாக காதலை வெளிப்படுத்துவதையே வழக்கமாகக் கொள்வர் இது காதல் என்பது வெறும் உடலுறவு மட்டுமே என்ற குறுகிய மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகின்றது.

* காதலை வெளிப்படுத்திக் காட்டுவதிலும் அதைச் சுவைப்பதிலும் நாம் அவசரப்படுகின்றோம் காதலைக் காதலிப்பதில்லை இதற்குக் காரணம் காதல் இருமனம் சம்பந்தப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளும் அளவிற்கு புரிந்து கொள்ளததேயாகும்

No comments:

Post a Comment