Thursday, December 27, 2012

Creative thoughts


நாடு   

*ஒரு நாட்டின் வளம் என்பது அதன் இயற்கை வளம் மற்றும் நாட்டு மக்களின் உழைப்பு ஆகிய இரண்டு மட்டுமே.இயற்கை வளமிருந்தும் உழைப்பில்லாவிட்டால் அந்த நாடு பொருளாதாரத்தால் சிறந்தோங்க முடியாது .ஒரு மனிதனிடத்தில் புதைந்து கிடக்கும் சக்தியும் இயக்கை வளம் போன்றதே .

 *மொழியை நேசிக்க வேண்டும்.அதை விட நாட்டை நேசிக்க வேண்டும் .அதற்கும் மேலே ஒரு நேசிப்பு இருக்கிறது .அது தான் மனிதனை மனிதன் நேசிக்கின்ற மனித நேயம் .

*மனித நேயமில்லாத நாட்டுப் பற்று உண்மையானதாகவே இருக்க முடியாது .

*நாடு என்பது நாட்டு மக்களின் தாய் .அவளை என்றைக்கும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவளுடைய பிள்ளைகளாகிய நாட்டு மக்களின் கடமையாகும் .

*நாடு தனக்கு என்ன செய்தது என்று எண்ணிப்பார்பதை விட நாட்டிற்கு என்ன செய்யலாம் என்று எண்ணிச் செயல்படுவது நற்குடிமகனுக்கு அழகு. நாட்டிற்கு தனி மனிதனின் நலன் தேவை ,ஆனால் சமுதாயத்தின் நலனே முக்கியம்.

*கடவுள் உலகைப் படைத்தார்,மனிதர்கள் அங்கே நாடுகளைப் படைத்தனர்.  ஓர் உலகம் பல நாடுகளானது.

*கடவுளை முதலாவதாகவும் தாய் நாட்டை அடுத்ததாகவும் நினைத்துப் பார்கின்ற மக்கள் இருக்கும்வரை நாட்டின் வளர்ச்சியும் இருக்கும் .அம்மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே நாட்டின் வளர்ச்சி விகிதம் அமையும்.

*ஒவ்வொருவரும் தங்கள் தாய் நாட்டை நேசிப்பது என்பது போற்றுதலுக்குரியது .ஆனால் அந்த நேசிப்பு நாட்டின் எல்லையோடு முடிந்துவிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் போது மனித நேயத்தையும் கட்டுப்படுத்த எதோ புறக்காரணங்கள் இருக்கின்றன என்றே எண்ணத் தோன்றுகிறது.

 *எந்நாட்டில் ஒரு தனி மனிதன் நேர்மையாக முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் அருகி கொண்டே வருகின்றதோ அந் நாட்டின் முன்னேற்றம் விரைவில் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும் .ஒரு நாட்டின் தங்கு தடையில்லாத வளர்ச்சிக்கு அங்குள்ள தனி மனிதர்கள் சுயமாக,இயல்பாக முன்னேறுவதற்கான வாய்ப்புக்களைக் குறைவின்றி உருவாக்கிக் கொடுக்க வேண்டும்

  

No comments:

Post a Comment