Wednesday, December 5, 2012

creative thoughts


எண்ணத்தில் பூத்த வண்ணப் பூக்கள்

இயற்கை

*இயற்கை மிகப் பெரிய விஞ்ஞானி மட்டுமில்லை .அனுபவம் மிக்க பல்துறை அறிஞனுமாகும்.தன் திறமையை 100 சதவீதம்  பயனுறுதிறனுடன் வெளிப்படுத்தக் கூடிய கண்ணுக்குத் தெரியாத கலைஞன் .

*நீ  உன்னை இயற்கை நினைத்தால் உனக்கு இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை.ஏனெனில் நீ பிறந்தாலும் அல்லது இறந்தாலும் இயற்கைதான். இறப்பும் பிறப்பும் இயற்கையின் இரு வேறு அம்சங்களே .

*இறைவன் இயற்கைதான்,எனினும் மனிதனுடைய அணுகுமுறைகள் இறைவனுக்கு ஒரு செயற்கைத் தோற்றத்தை வழங்கியிருக்கின்றன.

 *ஒன்றைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானால் அதுவாகவே ஆகவேண்டும் இது எண்ணங்களில் உறுதி ,செயலில் விடாமுயற்சி பயனில் திட சிந்தனை இவற்றால் மேம்படுகின்றது. இறைவனைப் பற்றியோ அல்லது இயற்கையைப் பற்றியோ அறிய முயன்றாலும் நிலை இதுதான்.

*இயற்கையின் மகத்தான கண்டுபிடிப்புக்களில் தலையாயது மனிதன்தான். தன்னைத் தெரிந்து இரசிக்க ,அறிந்து வியக்க ,புரிந்து ஆராய மனிதர்களைப் படைத்துக் கொண்டது .

*எது முதல் ,எது முடிவு என்று கூற முடியாததோ அதுவே கடவுள். அது இயற்கையைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

*இறைவன் இயற்கை, இயற்கை என்பது இறைவன் .ஏனெனில் இறைவனையும் இயற்கையையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு அனேக ஒற்றுமைகள் இருக்கின்றன.

*இயற்கையின் மாறாத விதிகளுள் ஒன்று,ஒன்று பலவாவதும் ,பல ஒன்றாவதும் தான் உயிரினங்களின் பிறப்பும்,இறப்பும் இந்த விதி முறைக்கு உட்பட்டே நிகழ்கின்றன.

*இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொண்டது மிகமிகக் கொஞ்சமே. இன்னும் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டியிருகிறது.இயற்கை சலிப்பின்றி தொடர்ந்து அறிவுரையும்,எச்சரிக்கையும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. நாம்தான் கவனத்தை வேறு எங்கோ செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

*திரட்டி வைக்கின்ற சொத்துத்தான் நமக்குப் பாதுகாப்பு என்று நாம் தவறாகக் கருதுகிறோம். உண்மையில் உலகில் வாழ்கின்ற ,மனிதனைத் தவிர்த்த எல்லா உயிரினகளும் எதையும் திரட்டி வைத்துக் கொள்வதில்லை.இருந்தாலும் அவைகள் மனிதர்களைக் காட்டிலும் வெகு சிறப்பாக வாழ்ந்து விட்டுப் போகின்றன.

*இனிய உலகம் என்பது எல்லோரும் சேர்ந்து வாழ்வதுதான். மக்களிடம் இயற்கையும் அதைத் தான் எதிர்பார்க்கிறது. உயிரினங்களில் மனிதன் மட்டும் உள்ளத்தால் இணைந்து வாழ மறுக்கிறான்.இதற்குக் காரணம் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த எல்லோரையும் விட ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.

*மனிதப் பிறவியால் மட்டுமே இயற்கையின் முழுப் பரிமாணத்தையும் கண்டு கழிக்க முடியாது. .இயற்கை விசாலமான பரிமாணத்தைக் கொண்டுள்ளது. இயற்கையை ஒவ்வொரு உயிரினமும் முழுமையாக அறிந்து கொள்ள அது தரும் வாய்ப்பே மறு பிறப்பு.

*உயிரினங்களின் பிறப்புகளுக்கு ஓயாது இடமாறிக் கொண்டே இருக்கும் அணுக்களின் தன்னார்வமிக்க செயல்பாடுகள்தாம். காரணம் இயற்கையின் அடிப்படை  விதிமுறைகளுள் ஒன்று.இந்த ஓயா இடமாற்றம் உயிரில்லாப் பொருள் உயிருள்ள பொருளாவதும் உயிர்ப் பொருள் உயிரில்லாப் பொருளாவதும் இந்த இடமாற்றத்தினால் தான். இதனால் .உயிரில்லாப் பொருள் உயிர்ப் பொருளாக மாறுவதற்கு இயற்க்கை வாய்ப்பளிக்கிறது .உயிருள்ள பொருள் மடிந்து உயிரில்லாப் பொருளாக மாறுவது இந்த வாய்ப்பை உண்மையாக்கு வதற்குத் தான் .

*இயற்கையின் படைப்புத் திறன் அளவில்லாதது. அற்புதமானது.காலத்தால் மாறாதது .நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்தது.

 *இயற்கையின் படைப்புத் திறனில் உள்ள தனிச் சிறப்பு அது எப்போதும் ஆக்கப்பூர்வமானதாக இருப்பதுதான்

*இயற்கையின் படைப்பழகில் மயங்கியவன் கவிஞனாகிறான் .இயற்கையை ஆராய்ந்தவன் அறிவியல் அறிஞ னாகிறான் .இயற்கையோடு நட்புக் கொண்டவன் இனிமையாக வாழ்கிறான்

*மதம் மனிதர்களின் கண்டுபிடிப்பு .மனிதர்களை ஒன்று கோர்ப் பதற்காக மனிதர்களால் திரிக்கப்பட்ட நூல்.மதத்தின் மூலமாகத்தான் அது கற்பிக்கின்ற நல்ல விஷயங்களை யெல்லாம் பெறமுடியும் என்பதில்லை.அவற்றை இயற்கையே நமக்குக் கற்றுக் கொடுத்து விடும்.

No comments:

Post a Comment