Friday, November 9, 2012

Sonnathum Sollaathathum


சொன்னதும் சொல்லாததும் -5 வியாசர் அருளிய பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான கருட புராணத்தில் சமுதாய வாழ்க்கைக்கு ஏற்ற நெறி முறைகள் சொல்லப்பட்டுள்ளன ஒருவன் தீய வழியில் ஈட்டிய செல்வத்தை தன் உறவினர்களுக்கு விட்டுச் சென்றால் அதனுடைய பாவம் அவர்களையும் தொற்றிக் கொள்ளும். நல்ல வழிகளில் செலவிடப்படாத அப்பொருள் அவனுடைய மறைவிற்குப் பின் பலவிதமாய் அழிந்து போகும். நேர் வழிகள் எப்போதும் எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருக்கும். அதில் ஒளிவு மறைவு இருப்பதில்லை. ஆனால் எதிர் வழிகள் அப்படி இருப்பதில்லை. பொருள் சம்பாதிக்க குறுக்கு வழி என்பதால் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் செயல்படுவதால் பலவிதமாக இருக்கும். குறுக்கு வழிகளில் ஈட்டிய பொருளை எங்கிருந்து பெற்றோமோ அங்கேயே மனம் ஒப்பி கொடுத்துவிடுவது பிராயச்சித்தமாகும் .அப்படிச் செய்யாவிட்டால் அது ஒரு முன் உதாரணமாகி சமுதாயத்தைத் தவறான வழியில் நடத்திச் செல்லும். 1988 ல் பிரான்சு நாட்டின் நாளிதழில் ஒரு செய்தி - டைனமைட் என்ற வெடி மருந்தைக் கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டு மரண வியாபாரி மரணம் என்று நிழல் படத்துடன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். உண்மையில் அப்போது இறந்து போனது அவருடைய சகோதரர் லுட் விக் நோபெல் .இதைத் தவறாக அல்பர்டு நோபெல் என்று வெளியிட்டு விட்டார்கள் .இச் செய்தியைப் படிக்க நேர்ந்த அல்பர்டு நோபெல் தன்னை மக்கள் மரண வியாபாரி என்று குறிப்பிட்டிருப்பதை அறிந்து மனம் நொந்துபோனார். தான் உலக சமுதாயத்திற்கு சொல்லொண்ணா துன்பங்களை கொடுத்து விட்டோம் என்ற குற்ற உணர்வு அவரை வாட்டியது.அந்நேரத்தில் அவருடைய தாயாரும் இறந்து போக அவர் மனம் பெரிதும் சலனமுற்றது. என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்கலானார். 1895 ல் தன்னுடைய இறப்பிற்கு ஓராண்டு காலத்திற்கு முன்னர் அவர் உயில் ஒன்றை எழுதினார்.அதில் “என்னுடைய டைனமைட் விரைவில் உலக அமைதிக்காகப் பாடுபடும். ஆயிரக் கணக்கான பொது இணக்க உடன்படிக்கைகளைக் காட்டிலும் இது வலிமையானதாக இருக்கும்.மக்கள் அதை உணர்ந்த அந்தக் கணத்திலேயே உலகில் அழிவுப் பூர்வமான இராணுவம் முழுதும் இல்லாமல் போகும்.அதன் பிறகு உலகில் முழுமையான அமைதி எங்கும் நிலவும் " என்று குறிப்பிட்டிருந்தார். அவர் டைனமைட் வெடி மருந்தால் சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டு அதனால் வரும் வட்டியை மட்டும் உலக சமுதாயத்திற்கு பயன்படும் கண்டு பிடிப்புகளையும்.பணிகளையும் செய்யும் அறிஞர் பெருமக்களுக்கு பரிசு வழங்கக் கேட்டுக் கொண்டார்.அதுவே பெருமைக்குரிய நோபெல் பரிசாயிற்று . அல்பர்டு நோபெல் அப்படிச் செய்யாது போயிருந்தால் அவருடைய பெருஞ் செல்வம் உறவினர்களால் பலவிதமாக பங்கிடப்பட்டு, ஒற்றுமையின்மையால் பகைமை கொண்டு ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டிருந்திருப்பார்கள் .அவருடைய செல்வம் முழுதும் வீணாகப் போயிருக்கும். கருட புராணத்தில் சொல்லப்பட்ட வாக்கியங்களுக்கு சரியான விளக்கமாக இருப்பது ஆல்பர்ட் நோபலின் வாழ்க்கை உலக அமைதிக்கான நோபெல் பரிசு நார்வேயிலும்,இலக்கியம் மருத்துவம்,இயற்பியல்,வேதியியல் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளுக்கான பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன. நோபெல் பரிசின் மதிப்பு 8 மில்லியன் ஸ்வீடிஸ் குரோனா (SEK),(இது1.2 மில்லியன் அமெரிக்க டாலருக்குச் சமம்,ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) தன்னுடைய மொத்த சொத்தில் 94 சதவீதம் அதாவது அன்றைக்கு 31 டிரில்லியன் SEK (இது 186 மில்லியன் அமெரிக்க டாலருக்குச் சமம்) யை ஒவ்வோராண்டும் தொடர்ந்து நோபெல் பரிசு வழங்க ஒதுக்கி வைத்தார்.1901 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி நோபெல் பரிசு வழங்கப்படுகிறது.இறந்து போனவர்களுக்கு நோபெல் பரிசு வழங்கப் படுவது வழக்கமில்லை .இந்த விதிமுறை இல்லாதிருந்தால் நம் நாட்டின் மகாத்மா காந்தி உலக அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்றிருப்பார். நோபெல் பரிசால் கீர்த்தி பெற்றார் என்றாலும் மரண வியாபாரி என்ற அவப்பெயர் முழுதுமாக மறைவதற்கு இன்னும் நெடுங்காலம் ஆகும்

No comments:

Post a Comment