Saturday, November 3, 2012

Cartoon


கார்ட்டூன்

 

சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி. என்ன வளம் இல்லை நம் நாட்டில் மூலப் பொருள் இல்லையா, உற்பத்திப் பொருள் இல்லையா, சந்தை இல்லையா,மனித வளம் இல்லையா? அவர்கள் நாட்டில் விற்பனை தெவிட்டிய நிலையை எட்டியாதால் அவர்களின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியிருகிறது.இந்தியாவில் எந்தப் பொருளையும் சந்தைப்படுத்தி விட முடியும் என்பதும் பொதுவாக அங்கே தரத்திற்கு முக்கியம் அளிக்கப் படுவதில்லை என்பதும் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய முக்கியமான அனுகூலங்கள்.இன்சூரன்ஸ் துறையில் 26 சதவீதமாக இருந்த அந்நிய முதலீட்டை  49 சதவீதமாக உயர்த்தி அனுமதி,பென்சன் துறையில் 49 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி.காரியமின்றி வீரியமாகச் செய்து பழகிப் போனதால் நம்மவர்கள் ஒரு கால கட்டத்தில் பாராளுமன்றத்தில் அந்நியர்களுக்கு 49 சதவீதம் அனுமதியும் அளிப்பார்களோ ? இதனால் புதிய புதிய யோசனைகள்,திட்டங்கள்,நவீன அணுகுமுறைகள்,வர்த்தகத் தொடர்புகளுக்கான அறிமுகங்கள்,சுறுசுறுப்பான இளமை போன்றவைகள் நம்மவர்களுக்குக் கிடைக்கலாமே.தேர்தலிலும்,பதவிகளிலும் பெண்களுக்கு உரிய பங்கை அளிக்கத் தட்டிக் கழிப்பவர்கள் என்னென்னவோ சொல்கின்றார்கள் .  

No comments:

Post a Comment