Wednesday, November 7, 2012

Vinveliyil Ulaa


விண்வெளியில் உலா அர்சா மேஜர் அர்சா மேஜர் வட்டார விண்மீன் கூட்டம் 7 விண்மீன்களால்ளான பெரிய கரண்டியாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. இன்றைக்கு இவை வானில் அதிகமான பரப்பை அடைத்துக் கொண்டுள்ளன. இதற்குக் காரணம் இணையான திசைகளில் ஒத்த திசை வேகத்துடன் விண்மீன்களின் ஒரு தொகுதி விண்வெளியில் இயக்கம் பெறுவதுதான். இது ஒரு பொதுவான மையத்தையும் ஒன்றுகொன்று இடையிலான ஈர்ப்பு விசையையும் பொறுத்து அமைகிறது. இதைப் போன்ற இயக்கம் டாரஸ்ஸில் உள்ள அல்டிபாரனைச் சுற்றியுள்ள ஹயாடெஸ்எனப்படும் ஒரு கொத்து மங்கலான விண்மீன்களில் காணப்படுகிறது. அர்சா மேஜரிலும் ஐந்து பிரகாசமிக்க விண்மீன்கள் மட்டுமே இது போன்ற இயக்கத்தைப் பெற்றுள்ளன. விண்வெளியில் மிக அதிக அளவு பரப்பை அடைத்துள்ள வட்டார விண்மீன் கூட்டங்களுள் இது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. .வெறும் கண்களுக்கு அர்சா மேஜர் வட்டாரத்தில் 125 விண்மீன்கள் புலப்படுகின்றன. .இவை முறுக்கப்பட்ட ஒரு நீண்ட வாளுடன் கூடிய பெரிய கரடி போன்ற தோற்றம் தருவதாகக் கற்பனை செய்யப் பட்டுள்ளது..உண்மையில் இது போன்ற வால் உலகில் வாழும் கரடிகளில் காணப்படுவதில்லை. .இது வாடா துருவத் திசையில் அமைந்துள்ளது என்பதால் அப்பகுதிக் குரிய சிறப்பான துருவக் கரடியே அதைச் சுட்டும் உருவமாகக் கொள்ளப் பட்டுள்ளது. கிரேக்க புராணத்தில் இக் கரடி லைகாசஸ் (Lycaces ) என்ற அரசனின் மகளான ஆன்மிகப் பலி கேடான காலிஸ்டோ ஆவாள் . ஜியஸ்சால் தீண்டப்பட்டு இவள் கர்ப்பிழகின்றாள் .ஜியஸ்சின் மனைவி பொறாமையும் கோபமும் கொண்டு இவளைக் கரடியாகச் சபித்து விடுகின்றாள் அர்காஸ் என்ற காலிஸ்டோ.வின் இளைய மகன் வேட்டையாடும் பொழுது இதைப் பற்றி ஏதும் அறியாமல் கரடியைக் கொல்ல இருந்தான் .அதன் பிறகு கடவுள் அவர்கள் இருவரையும் விண்ணில் பெரிய மற்றும் சிறிய கரடியாக அமையுமாறு வடித்து விட்டார் என்று கூறுவார்கள்.வேறொரு கதையில் காலிஸ்டோ ஆர்ட்டமிஸ் என்ற வேட்டை க்காரனின் கூட்டாளி யாவாள் கோபங் கொண்ட ஆர்ட்டமிஸ் இவளைக் கரடியாகச் சபித்து விட்டதாகவும் கூறுவார்கள் சில வட்டார விண்மீன் கூட்டங்களில் கிரேக்க மொழி எழுத்தின் அகர வரிசைப் படி பிரகாசம் இருப்பதில்லை.வெறும் கண்களால் விண்மீன்களை ஆராய்ந்த காலத்தில் வரிசைப் படுத்துதல் மேற்கொள்ளப்பட்டதால்,புவி வளி மண்டலத்தின் ஊடகத் தன்மையால் சில தவறுகளை அறியாமல் செய்ய நேரிட்டதால் இந்நிலை ஏற்பட்டது. அர்சா மேஜர் வட்டாரமும் இச் சிக்கலில் விழுந்தது. அர்சா மேஜரில் பிரகாசமிக்க விண்மீன் அகப்பையின் கைப்பிடியிலுள்ள எப்சிலான் அர்சா மேஜோரிஸ் ,மிகவும் மங்கலானது 7 விண்மீன்களுள் டெல்டா அர்சா மேஜோரிஸ் ஆகும். 1.79 ஒளிப் பொலி வெண் கொண்ட எப்சிலான் அர்சா மேஜோரிஸ்ஸை அலியோத் (Alioth ) என்றும் 3.4 ஒளிப் பொலி வெண் கொண்ட டெல்டா அர்சா மேஜோரிஸ்ஸை மெக்ரெஜ் (Megrez) என்றும் அழைப்பர் . அகப்பை போன்ற உருவம் கொண்ட வடிவத்தில் அமைந்துள்ள விண்மீன்கள் எல்லாம் பிரகாசமானவை என்றாலும் அவை நமக்கு அருகாமையிலில்லை . நமக்கு அருகில் இருக்கும் அர்சா மேஜர் வட்டார விண்மீன் 7.5 ஒளிப் பொலி வெண் கொண்ட தீட்டா அர்சா மேஜோரிஸ் சுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய மங்கலான விண்மீனாகும்.இது 8.25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கிட்டத் தட்ட ஆல்பா செண்டாரியை விட 2 மடங்கு தொலைவில் அமைந்துள்ளது.இதற்குப் புனைப் பெயரோ அல்லது கிரேக்க மொழி எழுத்தோ எதுவும் வழக்கப்படவில்லை.18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வானவியலாரான லாலாண்டே (Lalande ) என்பார் தன்னுடைய அட்டவணையில் இதற்கு 21185 என்று எண் கொடுத்திருந்தார். அதனால் இவ் விண்மீன் லாலாண்டே 21185 என்ற வழங்கப்படுகிறது.இது குறு விண்மீனாகும்.சூரியனை விட ௨௦௦ மடங்கு குறைவாக ஒளியை உமிழ்கிறது.1996 ல் இவ்விண்மீனுக்கு இரு கோள்கள் இருப்பதை ஜியார்ஜ் கேட்வுட் என்ற அமரிக்க விஞ்ஞானி கண்டறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment