Friday, November 2, 2012

Mind without fear


Mind without fear பயம் இரு வகைப்படும். நல்ல பயம், கெட்ட பயம். நல்ல பயம் என்பது தீய செயல்களைச் செய்வதற்கும் , பொதுக் கட்டுப்பாடுகளை மீறி தன்னலம் கருதி செயலாற்றுவதற்கும் உள்ள பயமாகும்.கெட்ட பயம் என்பது நல்ல செயல்களைச் செய்வதற்கும் ,பொது நலம் கருதி செயலாற்றுவதற்கும் தடையாக மனதிற்குள் வளர்த்துக் கொள்ளும் பயமாகும். மனதில் பயம் ஏன்,எப்பொழுது வருகிறது என்பதை ஆராய்ந்து தெளிந்து கொண்டால் தேவையற்ற பயத்தை தவிர்த்துக் கொண்டு குறுகிய வாழ்கையில் விரைந்து முன்னேறமுடியும். பயம் - நம் முன்னேற்றத்திற்கு நாமே ஒரு எதிரியாக இருப்பதற்கு நாமே வளர்த்தும் கொள்ளும் உணர்வுகள். பொதுவாக செயலினமையைத் தூண்டும் மனப்பான்மை . அதனால் தான் முரண்டு பிடிக்கும் சில சிறுவர்களை கட்டுப்படுத்தி வைக்க பெரியவர்கள் பயமூட்டி வைத்தார்கள்.இதற்காக நாம் பெரியவர்களைக் குறை கூற முடியாது. நாம் வளர்ந்த பின் பகுத்தறிவினால் உணர்ந்து தெளிந்து அதன் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து அதன் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடலாம்.பயம் அறியாமையாலும் வருவதுண்டு .ஒன்றுமே தெரியாமல் ஒரு செயலில் ஈடுபடும் போது அவநம்பிக்கை மனதில் அச்சத்தைப் புகுத்தி விடும். சியும் செயழலில் சிறு தவறு இருந்தாலும் பேராபத்து விளையும் என்றால் மனதில் பேரச்சமே ஏற்படுகின்றது. மனதில் பயம் தொடர்ந்து இருக்கிறது என்றால் மேற்கொள்ளும் செயலைச் சரியாச் செய்து முடிக்கும் வழிமுறையில் தெளிவு இல்லாமையால் நம்பிக்கையை இழந்து எதோ ஒப்புக்குச் செய்கிறோம் என்றே பொருள்

No comments:

Post a Comment