Saturday, November 24, 2012


வேதித் தனிமங்கள் - குரோமியம் -பயன்கள்

கு டன் சிறிதளவு குரோமியத்தைச் சேர்க்க ,கலப்பு உலோகத்தின் கடினத் தன்மை பல மடங்காக அதிகரிக்கிறது. தேய்மானத்தை எதிர்ப்பதால் இயந்திரப் பொறிகளில் உள்ள உட் கூறுகளின் தேய்மானத்தைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது .துருப் பிடிக்காததால் முலாம் பூச்சுத் தொழிலில் பயன் படுகிறது. 1000 டிகிரி C வரை வெப்ப நிலையைத் தாக்குப் பிடிப்பதால் உயர் வெப்ப நிலையில் செயலாற்றும் கருவிகளை வடிவமைக்கவும் இது பயன் தருகிறது.

குரோமைட் தாதுவை கரித் தூளுடன் சேர்த்து மின் உலை மூலம் வெப்பப் படுத்த பெரோ குரோம் என்ற பொருள் கிடைக்கிறது. இது சுழல் வட்டுக்களைத் (Ball bearing) தயாரிக்க உதவும் மூலப் பொருளாக உள்ளது .இதன் புறப் பரப்பில் வீழ்படியும் குரோமியம் கார்பைடு மிகவும் கடினமான பொருளாகும். இதுவே தேய்மானத்திற்கு எதிரான ஒரு காப்புக் கவசமாக விளங்குகிறது. உயர் வெப்பந்தாங்கும் பொருட்களின் உற்பத்தியில் இது முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது.

17-19 % குரோமியம்,8-13 % நிக்கல் ,.1 % கார்பன் கொண்ட எஃகான துருப் பிடிக்காத எஃகு (Stainless steel) எரி வளிம அடுப்பு சைக்கிள் ,கார் வண்டிகளுக்கான உதிரி பாகங்கள் ,சக்கரங்களுக்கான வட்டச் சட்டம், போன்ற பல பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. 4 % குரோமியம், 34 % நிக்கல் 62 % இரும்பு கலந்த நிக்ரோம் உயரளவு மின்தடை காரணமாக மின்னடுப்பு ,மின்னுலைக்கான மின் கம்பியாகப் பயன்படுகிறது. இதனுடன் சிறிதளவு கோபால்ட் ,மாலிப்பிடினத்தைச் சேர்க்க மின் கம்பியானது 650 -900 டிகிரி C வரை வெப்பம் தாங்குகிறது 74 :18 :8 என்ற விகிதத்திலான இரும்பு,குரோமியம் நிக்கல் கலப்பு உலோகம் 1100 டிகிரி C வரை வெப்பத்தையும், 80 :20 நிக்கல், குரோமியக் கலப்பு உலோகம் 1150 டிகிரி C வரை வெப்பத்தையும் தாங்கவல்லன.

கோபால்ட் மாலிப்பிடினம் மற்றும் குரோமியம் கலந்துள்ள கலப்பு உலோகம் கெமோ குரோமியம் (Chmo chromium) என்பர். இது உடல் நலத்திற்குச் சிறிதும் தீங்கிழைக்காதது அதனால் செயற்கை உறுப்புகள் அறுவைச் சிகிச்சைக் கருவிகள் செய்யப் பயன்படுகின்றது. மாங்கனீஸ் ,குரோமியம் மற்றும் ஆண்டிமணி இவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மலிவான கலப்பு உலோகம் வெப்ப நிலைக்கு ஏற்ப மாறுபடும் காந்தப் பண்பைப் பெற்றுள்ளது. இது தானியங்கு கருவிகளுக்கான வெப்ப நிலை உணர்வறி உறுப்புகளில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

குரோமியத் தையும் மாக்னசைட் என்ற கனிமத் தையும் சேர்த்து உயர் வெப்ப நிலையைத் தாக்குப் பிடிக்கும் தீச்செங்கலை உருவாக்கயுள்ளனர். இது உலோகங்களை உருக்கும் சூட்டுலைகள் வார்ப்பச்சுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. குரோமைட் கனிமம் மற்றும் பொட்டாசியம் சோடியம் குரோமேட்டுகள் கலந்த குரோம் ஆலம் என்ற பொருள் தோல் பதனிடும் தொழில் பங்கேற்றுள்ளது இது துணி ,கண்ணாடி ,பீங்கான் தொழிற்ச்சாலைகளில் சாயப் பொருள் உற்பத்தி முறையிலும் ஈடுபட்டுள்ளது .

 செயற்கை மாணிக்கம் (Ruby)அலுமினியம் ஆக்சைடு (.05 %) மற்றும் குரோமியம் ஆக்சைடு கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது திண்ம லேசர்களை உருவாக்கப் பயனளிக்கிறது காண இரக வண்டிகளின் சோதனை ஓட்டக் காலத்தைக் குறைக்க எரி பொருளோடு சிறிதளவு குரோமிக் ஆக்சைடை சேர்க்கின்றார்கள் . எரிகலனில் எரிக்கப்படும் குரோமிக் ஆக்சைடு நுண் துகள்களாக உட்சுவர் பகுதிகளில் ஒட்டிக் கொண்டு இயக்கத்தின் போது கூடுதலான உராய்வுக்கு உட்பட்டு கரடு முரடான பிறபகுதிகளைச் சமப்படுத்தி தடையில்லா இயக்கத்திற்கு விரைவில் தயார்படுத்தி விடுகிறது..ஒளிப் பதிவு நாடாக்களில் குரோமிக் ஆக்சைடு பயன் படுத்தப்படுகிறது. ஒளிப்படச் சுருள் மருந்துப் பொருள் உற்பத்தியில் வினையூக்கியாக குரோமிக் ஆக்சைடு பயன் படுகிறது.

கலப்பு உலோகங்கள் மட்டுமின்றி முலாம் பூச்சிற்கும் குரோமியம் பெருமளவில் பயன்படுகிறது. இணைதிறன் 2 என்றவாறுள்ள சேர்மங்கள் குரோமியம் புரோமைடு போன்றவை வளி மண்டலக் காற்றால் மிக எளிதில் ஆக்சிஜனேற்றம் பெற்று விடுகின்றன .இணை திறன் 3 என்றவாறுள்ள செர்மங்களிளிருந்து மின்னார் பகுப்பு மூலம் குரோமியத்தைப் பிரித்து பொருளின் மீது படிய வைப்பது மிகவு கடினம். இணைதிறன் 6 என்றவாறுள்ள குரோமியச் சேர்மம் (குரோமிக் அமிலம்) குரோமிய முலாம் பூச்சிற்கு மிகவும் உகந்ததாக உள்ளது. குரோமியப் பூச்சை உலோகங்களுக்கு மட்டுமின்றி நெகிழ்மங்களின் (Plastics) மீதும் செய்ய முடியும்.  
 

No comments:

Post a Comment