Saturday, November 17, 2012

arika Iyarpiyal


அறிக இயற்பியல்.

ஐன்ஸ்டீனின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று ஆற்றலுக்கும் பொருளுக்கும் உள்ள ஒரு தொடர்பு. சார்புக் கொள்கை மூலம் E = mC 2 என நிறுவினார். மேலும் நிறை,பரிமாணம் போன்ற பொருளின் நிலைப் பண்புகளும் வேகம், உந்தம் போன்ற பொருளின் இயக்கப் பண்புகளும் சார்பு வேகத்தால் வேறுபடுகின்றன என்றும் தெரிவித்தார். இதன்படி சார்பு வேகம் அதிகரிக்க ஒரு பொருளின் நீளம் இயக்கத் திசையில் குறைகின்றது, பொருளின் நிறை அதிகரிக்கிறது எனலாம். ஒரு மின் துகள் q என்ற மின்னூட்டத்தை K என்ற ஒரு படித்தர ஆய அமைப்பில் பெற்றிருப்பதாகக் கொள்வோம்.K க்கு v என்ற சார்பு வேகத்தைப் பெற்றிருக்கும் K ' என்ற வேறொரு ஆய அமைப்பில் அத்துகள் பெற்றிருக்கும் மின்னூட்டத்தின் அளவு எவ்வளவாக இருக்கும் ?

மின்னூட்டங்கள் சார்பு வேகங்களால் மாறுதலுக்கு உள்ளாவதில்லை என்பதால் அவை சார்பியல் மாறாத் தன்மை கொண்டவை எனலாம்.

No comments:

Post a Comment