Monday, March 11, 2013


தத்துவம்

நாம் இந்த குறுகிய வாழ்கையையே நிலையானது போல நினைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.மன வலிமையில்லாத போலியான ஆன்மிகவாதிகள் கூட அப்படிதான் வாழ்கின்றார்கள் .வெகு சிலரே உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று உணர்ந்து அமைதியாக வாழ்கின்றார்கள் இவர்களுடைய வாழ்கையே இயற்கையானது என்பதை ஆடம்பரமான உலகியல் வாழ்கையில் யாரும் ஒப்புக் கொள்ளக் கூட முன்வருவதில்லை .

இயற்கையின் படைப்புகளில் எதுவுமே நிலையானது இல்லை .உலகம்.நட்சத்திரங்கள் ,ஏன் இந்தப் பிரபஞ்சம் கூட நிலையானதில்லை. எல்லாம் ஒரு காலத்தில் பிறந்து ஒரு காலத்தில் அழியப் போகின்றவையே. ஆற்றல் அணுக்களாக மாறுவதால் ஆற்றலும்,அணுக்கள் ஆற்றலாக மாறுவதால் அணுக்களும்.அணுக்களால் ஆன படைப்புக்களும் நிலையில்லாதவைகளே.இயற்கையில் நிலையாக இருப்பது இரண்டுதான்.ஒன்று காலம்,மற்றொன்று வெளி (space ).இவை ஆற்றலாலும் அணுக்களாலும் ஆனதில்லை .எல்லாம் வல்ல கடவுளால் கூட மாற்றி அமைக்க முடிவதில்லை.கண்ணால் காண முடியும் எப்பொருளும் அவை உயிருள்ளவையாக இருப்பினும் உயிரற்றவையாக இருப்பினும் நிலையற்றவையாக இருக்கின்றன. கண்ணால் காண முடியாத காலமும் ,வெளியும் நிலையானவைகளாக இருக்கின்றன. எது நிலையாக இருக்கின்றதோ அது தான்  இயற்கை .அதைத்தான் நாம் கடவுள் என்று வர்ணிக்க முடியும். எவையெல்லாம் நிலையாக இருப்பது போன்ற தோற்றத்தைத் தருகின்றனவோ அவையெல்லாம் இயற்கையாக முயற்சிக்கின்றவைகளே .

No comments:

Post a Comment