Tuesday, March 19, 2013

Eluthaatha Kaditham


எழுதாத கடிதம்

மனிதர்கள் பல வகைப்பட்டாலும் அடிப்படையில் இரண்டு வகைதான். ஒன்று நல்லவன் மற்றொன்று கெட்டவன் .நேரத்திற்கு ஏற்பவும்,இருக்கும் நிலைக்கு ஏற்பவும்,எதிராளிக்கு ஏற்பவும் ஒருவரின் இத் தன்மை மாறிக்கொண்டே இருப்பதால் அவர் எத்தகையவர் என்பதை அறிந்து கொள்வதில் மற்றவர்களுக்கு குழப்பம் மேலிடுகின்றது .ஒருவன் இப்படி நடந்து கொள்வதற்குக் காரணம் அவன் ஒவ்வொரு நிமிடமும் தனக்கு கிடைக்கும் அனுகூலங்களைப் பற்றியும் ,எதிராளிக்குக் கிடைக்கக் கூடாத விஷயங்கள் பற்றியும் மட்டுமே சிந்திக்கின்றான்.இதை மறைப்பதற்காக இரட்டை வேடம் போடும் பழக்கத்திற்கு வளரும் போதே கற்றுக்கொண்டு விடுகின்றான். கெட்டவன் தான் ஒரு நல்லவன் என்று காட்டுவதற்கு நல்லவன் போல நடிப்பான்.உண்மையிலேயே ஒரு நல்லவன் கெட்டவனாக இருப்பதில்லை ,அது போல கெட்டவன் நல்லவனாக இருப்பதில்லை. நல்லவன் என்று  நினைத்துக் கொண்டிருந்த ஒருவனைக் காட்டிலும் மேலான நிலைக்கு நீ உயர்ந்து விட்டால் அவன் எவ்வளவு கெட்டவன் என்பதை நீ அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும் . இல்லையென்றால் உண்மைநிலையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்காது .

No comments:

Post a Comment