Sunday, March 10, 2013

Sonnathum Sollaathathum-16

சொன்னதும் சொல்லாததும் -16
அமெரிக்க நாட்டில் 1928 ல் பிறந்த ஒரு கணிதவியல் அறிஞர் பேராசிரியர் ஜான் .F. நாஷ் .இவர் Game theory, differential geometry போன்ற புலங்களில் சிறந்து விளங்கியவர்.ஸ்வீடன் வங்கி 1994 ல் நோபல் பரிசுக்கு இணையான ஒரு பரிசை பொருளாதாரத் துறையில் இவருடைய                    கண்டுபிடிப்புக்களின் பயன்பாடு கருதி வழங்கி கௌரவித்தது .கணித மேதையான இவர் ஒரு வகையில் மாற்றுத் திறனாளி .Schizophrenia என்ற மனப்பிரமை தொடர்பான நோயால் அவதிப்பட்டார் . இது நிஜங்களை நிழல்களாக கற்பனை செய்யும் மனப் போக்கு.
சிறு வயதில் இவர் தன்னுடைய அறையில் தனிமையில் பரிசோதனைகளைச் செய்து பார்ப்பார் .தனிமையில் இனிமை கண்டு மகிழ்ந்தவர். ஆனால் அவர் தம் வகுப்புத் தோழர்கள் போட்ட ஆட்டமும் பாட்டமும் .அவரை இந்தத் தனிமையிலிருந்து விடுவித்து வாழ்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது .Equilibrium Theory யில் செய்த ஆராய்ச்சிகள் இவருக்கு Ph.D  பட்டம் தந்தது. இதில் இவர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் Nash Equilibrium என்ற சொற்றொடர் பயனுக்கு வந்தது. 1957 ல் அலிசியா லோபஸ் என்ற மாணவியை மனம் புரிந்தார் இந்தப் பெண்மணி அவர் வாழ்கையில் எல்லோரையும் போலச் சிறந்து விளங்க உறுதுணையாக இருந்தார். ஒருவரின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண்மணி இருப்பாள் என்ற கூற்று இவர் வாழ்கையிலும் உண்மையானது .1959 ல் மன நோயாளிக்கான மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார் .அவர் மனைவி அவருடைய பலவீனங்களை அகற்றும் ஒரு வழிகாட்டியாக இருந்தார். அதன் பிறகு அவர் பல விருதுகளைப் பெற்றார். Game Theory க்காக 1994 ல் பொருளாதாரத் துறைக்கான நோபெல் பரிசைப் பெற்றார்.இவருடைய பலமும் பலவீனமும் The Beautiful Mind என்ற ஒரு திரைப்படமாக வந்தது .இது பல ஆஸ்கர் விருதுகளை வென்றது .இந்தப் படத்தில் நாஷ் மாயத் தோற்றங்களை மனவுறுத் தோற்றங்களாகக் கொண்டிருந்தார் எனச் சித்தரிக்கப் பட்டிருந்தாலும் உண்மையில் அவர் அசரீறு வாக்குகளைக் கூடக் கேட்கவில்லை கணிதத் துறையில் அவர் கொண்டிருந்த அபரிதமான ஈடுபாடே அவருடைய மனநிலைப் பதிப்பிற்குக் காரணம் என்று கூறலாம் . இவருடைய திருப்புமுனை அவர் வகுப்புத் தோழர்களுடன் ஈடுப்பாடு கொண்டதும் ,தன் மீது அக்கறை கொண்ட ஒரு பெண்ணை மணம்புரிந்து கொண்டதும் தான் .வாழ்கையில் நாம் முன்னேற வேண்டுமானால் நாமும் நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும் .தன் மீது அக்கறை கொண்ட ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணையாகக் கொள்ளவேண்டும்.நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து பழகுவது சிறுவயதிலும் ,நல்ல பெண்மணியை மனைவியாகப் பெற இல்வாழ்க்கையின் தொடக்கத்திலும் ஒருவருக்கு அனுகூலமாக அமைந்து விட்டால் பின்தொடரும் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை .

No comments:

Post a Comment