Thursday, September 30, 2010

Arika ariviyal-9


என்ரிகோ பெர்மியைப்(Entrico Fermi)(l90l - 1954) பற்றி தெரியாதவர்கள் இருக்கமுடியாது,இருபதாம் நூற்றாண்டில்
அவ்வளவு புகழ் பெற்ற விஞ்ஞானி . ஒரு சிலர் தேற்றம் ,
கொள்கை அறிவியலில் சிறந்து விளங்குவார்கள், வேறு சிலர்
சோதனை அறிவியலில் சிறந்து விளங்குவார்கள் .பெர்மியோ
இரு துறைகளிலும் சிறந்து விளங்கினார். அணுகுண்டின் தந்தை
எனப் போற்றப்படுபவர் .அமெரிக்காவில் உலகின் முதல் அணு
உலையை நிறுவிய பெருமை இவரையே சேரும். 1938 -ல் இயற்பியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார். இவர்
பெயரால் பெர்மியான் என்ற துகளும் ,பெர்மியம் என்ற தனிமமும் உள்ளன . உலகெங்கும் பல ஆய்வுக் கூடங்களுக்கு இவர் பெயரிடப்பட்டுள்ளது . இவருக்குத் திருப்புமுனையாக்
அமைந்தது இரண்டு இயற்பியல் நூல்கள் . அந்த நூல்களைப்
படிக்கத் தூண்டியது அவருடைய சகோதரரின் இறப்பால் ஏற்பட்ட
மனவருத்தமும் ,அப்போது கிடைத்த ஓய்வு நேரமும் ஆகும்.
ஒருவருடைய திருப்பு முனை என்பது அவருக்குள்ளே விளையும்
ஓர் உந்துதல் தான் .இதற்கு காரணம் எப்படி வேண்டுமானாலும் ,
எப்பொழுது வேண்டுமானாலும் ,எதன் காரணமாக
வேண்டுமானாலும் இருக்கலாம் .அதை நாம் முன்னறிவித்துக்
கூறிவிட முடியாது. ஆனால் அதற்கான வாய்ப்புகளை நாம்
உருவாக்கி அதிகரிக்க முடியும் .ஒரு சிலருக்கு அந்த வாய்ப்பு
இயல்பாக அமையும், வேறு சிலருக்கு பிறர்தான் காரணமாக இருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு பெற்றோர்தான் இந்த
வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் .இதில் எவர் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுகின்றார்களோ அவர்களுடைய குழந்தைகள்
எதிர்காலத்தில் சிறந்து விளங்குகிறார்கள் . இதற்கு
இப்பொழுதே நீங்கள் செய்யவேண்டியது இதுதான் -
நல்ல நூல்களைப் படிக்க வாங்கிக் கொடுங்கள்,நூலகங்களில்
உறுப்பினராக்குங்கள் ,குழந்தைகளுக்கான போட்டிகளில்
பங்கேற்கச்செய்யுங்கள். பங்கேற்பதுதான் முக்கியம் பரிசு
முக்கியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டிகளில் தவறாது கலந்து கொள்ளச்
செய்யுங்கள் . உங்கள் குழந்தையும் ஒரு என்ரிகோ பெர்மி தான்.
                                                   *****************


வளைவுப் பாதை இயக்கம்


ஒரு பொருள் வளைவுப் பாதையில் இயங்க ஒரு
மைய நோக்கு விசை தேவை .இதன் எதிர் விசையே
மைய விலகு விசை எனப்படும் .மைய நோக்கு
விசைக்கு ஒரு மூலம் இல்லாது போனால் ,செயல்
எதிர் செயல் காரணமாக விளையும் மைய விலகு விசை
ஈடு செய்யப் படாமல் வண்டி வளைவுப் பாதையின்
வெளிப்புறமாக விலகும்.பேருந்துகள் வளைவுப்
பாதைகளில் செல்லும் போது நாம் வெளிப் புறமாகத்
தள்ளப்படுவது இதனால்தான். அப்போது நாம் மைய
நோக்கு விசைக்கு ஒரு மூலத்தைத் தேடுகின்றோம் .
உராய்வை அதிகப்படுத்தியும், கட்டுறுதியான பொருட்களைக்
கைப்பிடித்தும் நாம் மையத்தை விட்டு விலகிச் செல்லும்
நழுவலைத் தவிர்க்கின்றோம் .வளவுப் பாதையின் ஆரம் குறைவாகவும் ,வண்டியின் இயக்க வேகம் அதிகமாகவும்
இருக்கும்போது இப்படி நழுவும் வாய்ப்பு கூடுதலாகின்றது.
இதைத் தடுக்க வளைவுப் பாதையின் வெளிப்புறம்
மேடாகவும் உட்புறம் தாழ்வாகவும் இருக்குமாறு செய்வார்கள் .
இரயில் தடவாளங்களும் இப்படி அமைக்கப் பட்டிருக்கும் .
ஆனால் வானத்தில் இதைச் செய்யமுடியாது .வானவூர்திகள்
வளைவுப் பாதையில்செல்லும் போது மைய நோக்கு
விசையை எப்படிப் பெறுகின்றார்கள் ?

                                                  ******************







வளைவுப் பாதைகளில் செல்லும் போது வானவூர்தியின் உட்புற
இறக்கை தாழ்வாகவும் ,வெளிப்புற இறக்கை உயர்வாகவும்
பறக்குமாறு செய்வார்கள் .அப்போது காற்றழுத்தத்தின் எதிர்
செயலின் கிடைமட்டக்கூறு மைய நோக்கு விசையைத் தருகிறது .
வளைவுப் பாதைகளில் செல்லும் போது வானவூர்தியின் உட்புற
இறக்கை தாழ்வாகவும் ,வெளிப்புற இறக்கை உயர்வாகவும்
பறக்குமாறு செய்வார்கள் .அப்போது காற்றழுத்தத்தின் எதிர்
செயலின் கிடைமட்டக்கூறு மைய நோக்கு விசையைத் தருகிறது .

1 comment: