Sunday, October 3, 2010

vanna vanna ennangal-18

எண்ண எண்ண வண்ணங்கள்






ஓர் இனத்தின் சாகாமைக்காக இயற்கை அழித்தவரமே காதல் .

இயற்கையின் அந்த நுட்பத்தை நாம் இன்னும் நன்கு புரிந்து

கொள்ளவேண்டும் .

ஓர் இனத்தை மற்றோர் இனம் அழித்தல் என்பது இயற்கைக்கு

எதிரானது .வலிமைமிக்க இனமொன்று பலவீனமான இனத்தை

எளிதாக அழித்துவிடமுடியும்.அப்படி அழித்தால் ,வேறொரு

இனத்தால் அந்த வலிமைமிக்க இனம் அழிக்கப்படுவதற்கு

ஆளாகும். அழிக்கப்படுவது முன் உதாரணமாகி வெகு இயல்பாகி

விட்டால் அழித்தல் தொழில் சங்கிலித் தொடர் போல நிகழும்

நிகழ்வாகிவிடும்.அப்புறம் யார் விரும்பினாலும் தடுத்து நிறுத்தவே

முடியாது .

'நான் வாழனும் ,நீயும் வாழனும்' என்பதுதான் சமுதாய வாழ்க்கை

இயற்கை எதிர்பார்க்கும் இயல்பான வாழ்க்கை. இதை விட்டுவிட்டு

நான் மட்டும் வாழனும் ,நீ ஒழியனும் என்று நினைப்பது முரண்பாடான

சிந்தனை .



சிறை

சிறைக் கதவுகளுக்கு

இரு பக்கங்கள் உண்டு

இரு மருங்கும் மக்கள்

எவர் சிறைக்கு இரையானார் ?

எவர் இரைக்கு சிறையானார் ?



இதென்ன கேள்வி

சிறையொன்றும் அறியாது

எது உள்ளே எது வெளியே என்று

சிந்தித்துப் பார்த்தல் தெரியும்

சிறையிலிருப்பது இருவரும்தான்



சிறைக்குள்ளே சுதந்திரமில்லை

சுகப்பட எதுவுமில்லை

அப்படியென்றால் வெளியிலிருப்பவர்கள்

அதையெல்லாம் அனுபவிக்கிறார்களா என்ன?

பிறப்பதற்கு முன் கருப்பையில்

பிறந்தபின்பு தாயின் மடியில்

படிக்கும் போது பள்ளியில்

பருவம் வந்த போது

பாவையின் பார்வையில்

வாழும் போது சமுதாயத்தில்

சாகும் போது மரணப்படுக்கையில்

செத்த பின்பு மயானத்தில்

சிறைவாசம் இல்லாத நாள் உண்டா ?



உருளும் உலகமொரு

திறந்த வெளி சிறைச்சாலை

எல்லோரையும் அடைத்திருக்கும்

திருந்தும் வெளி சமத்துவபுரம்

இது இயற்கையின் படைப்பு

இதில் ஏனிந்த செயற்கை இணைப்பு

சிறைக்குள் சிறைச்சாலைகள்

வேடிக்கையாக இல்லை .

ஒரு பக்கத்தில் இருப்பவர்களே

மற்றவர்களை

எப்போது அறியப் போகிறீர்கள் ?

No comments:

Post a Comment