குரல் மாறிப்போனது
குரல் என்பது ஒருவரது தனிச் சிறப்பியல்பாகும்.அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குரல்
இருக்கின்றது எனலாம் .முகவெட்டுத் தோற்றம்,
கைரேகை போல குரலைக் கொண்டும் ஒருவரை
இனமறிந்து கொள்ள முடியும்.சிலர் இயல்பான சூழலில்
குரலை மாற்றிப் பேச முயற்சித்தாலும் ,ஒலிச்செறிவில்
மட்டும் எளிதாக மாற்றம் செய்யமுடிகிறது .அதன் சுரம்,
அதிர்வெண் போன்ற பண்புகளில் மாற்றம் செய்ய
முடிவதில்லை அதனால் அந்நிலையிலும் அவரை
இனமறிந்து கொள்ள முடிகின்றது .ஒருவர் ஹீலிய
வளிமம் செறிவுள்ள காற்றைச் சுவாசித்த பின்
அவருடைய குரல் வளம் பெரிதும் மாறுகின்றது .
அதிக அதிர்வெண்ணில் ஒலி எழுப்புகின்றது . இது ஏன்?
****************
குரல் வளையில் உள்ள நாணின் அதிர்வு ,அதைச்
சுற்றியுள்ள காற்றின் தன்மையைப் பொறுத்ததில்லை .
இது குரல் நாணின் நிறை ,மற்றும் இழுமைத்
தன்மையைச் சார்ந்திருக்கிறது. ஒருவரது குரலின்
அதிர்வுகளின் நிறமாலை மாறாதிருக்கும். நிலையில் ,
ஹீலியம் செறிவுள்ள காற்றைச் சுவாசிக்கும் போது
அதிர்வுகள் உட்குழிவான வாயில் ஒத்ததிர்வு மூலம்
சில இணைச் சுரங்களை(harmonics) உயர்த்தி, அதன்
அதிர்வெண்ணில் மாற்றம் ஏதுமின்றி செறிவில் மாற்றம்
செய்கின்றன.
ஹீலியம் அணுவின் நிறை ,காற்றில் மிகக் குறைவாக
செறிவுற்றுள்ள ஹைட்ரஜன் தவிர்த்து பிற அணுக்களை
விட தாழ்ந்தது .அதனால் ஒலியின் திசை வேகம்
காற்றை விட ஹீலியத்தில் அதிகம் .ஒரு குறிப்பிட
அலை நீளமுள்ள ஒலியின் அதிர்வெண் காற்றை விட
ஹீலியத்தில் அதிகமாக இருக்கிறது .
*****************
இது என் குரல் தானா ?
ஒலிப் பதிவு செய்யப்பட்ட தனது குரலை ஒருவர்
கேட்கும் போது, அது தன் குரல்தானா என்று பலரும்
ஐயப்படுவார்கள் .அதற்குக் காரணம் அவர் நேரடியாகக்
கேட்டு உணர்ந்த வழக்கமான அவருடைய குரலுக்கும் ,
ஒலிப் பதிவு குரலுக்கும் வேறுபாடு இருப்பதாகும் . இது
வெறும் மனப் பிரமையா அல்லது அந்த வேறுபாடு
உண்மையானதா?
*******************
.இந்தக் குரல் வேறுபாடு உண்மையானதாகும் .ஒருவர்
எழுப்பிய குரல் ஒலி,அவரைக்காட்டிலும் பிறருக்கு
மெலிதாகவே கேட்கும்.இதற்குக் காரணம் ஒருவர்
அவருடைய குரலை மண்டைஓட்டின் எலும்புகளின்
வழியாகக் கடத்தல் மூலமாகவும் ,காற்றில் அலை பரவி
காதில் விழுவதின் மூலமாகவும் அலை ஆற்றலைப்
பெற்று கேட்டு உணர்கிறார் .இதை நாம் எளிதாக உறுதி
செய்தும் பார்க்கலாம். விரலால் செவித் துவாரத்தை
அடைத்து வைத்துக்கொண்டும் ,உதடுகளை மூடிக்
கொண்டும் எழுப்பும் ரீங்கார ஓசை வலுவாகக்
கேட்பதையும் திறவலான நிலையில் மெலிதாகக்
கேட்பதையும் உணரமுடியும். ஒலிப் பதிவு செய்யப்பட்ட
குரலைக் கேட்டும் போது அது இது போல இரு வேறு
வழிகளால் பெற முடிவதில்லை .காற்றின் வழி கடந்து
செல்லும் ஒலியில் பெரும்பகுதி அதிர்வாற்றல்,300 ஹெர்ட்ஸ்
அதிர்வெண்ணுக்கு மேற்பட்ட அதிர் வெண்ணுடைய
அலைகளால் எடுத்துச் செல்லப்படுகிறது.இதற்குக் கீழுள்ள
அதிர்வெண் ஒலிகள் சிறிதளவு ஆற்றலை எடுத்துச்
செல்கிறது .
No comments:
Post a Comment