Sunday, January 23, 2011

Valarum Ariviyal Tamil-5

ஒலி என்பது அதிர்வுகளின் வெள்ளோட்டம் .இது செவிப்பறையை அடையும் போது அதை அதிரத் தூண்டி ஒலியைஉணரச்
செய்கிறது . பொதுவாக உணர் உறுப்புகளின் உணர் திறனுக்கு
ஓர் உச்ச வரம்புண்டு .இந்த வரம்பிற்கு அப்பால் ஆற்றல்
கொண்ட வீரியமான ஒலி அதிர்வுகள் செவிப்பறையைத்
தாக்கிக் கிழித்து விடுவதால்,காது செவிடாகக்கூடிய வாய்ப்பு
இருக்கிறது. இரைச்சலால் தொடர்ந்து இன்னல்படுபவர்களின்
கேள் திறன் மந்தப்படுவதால் வல்லொலி காதைப்
பழுதுபடுத்தும் என்ற பொருள் கூறும் பரிபாடல் வரிகள்
பின்வருமாறு

"இடியெதிர் கழறும் காலுறழ்வு எழுந்தவர்


கொடியறு பிறபு செவி செவிடுபடுவு"


இப்பேரண்டம் எவ்வளவு பெரியது ? எப்போது எப்படித்
தோன்றியது ? ஒரு காலத்தில் அது தோன்றியது என்றால்
அதற்கு முன்னாள் அதன் நிலையென்ன ? அதன் இறுதிக்
கட்டம் எப்படி இருக்கும் ?போன்றவை விண் இயற்பியலில்
தீர்மானமாக ஒரு முடிவுக்கு வர முடியாத சில கேள்விகளாகும்.
அறிவியல் வளர்ச்சியுற்ற இன்றைய காலகட்டத்திலேயே விண் இயற்பியலில் இதற்கு வெட்டியும் ஒட்டியும் கருத்துகள் சொல்லப்படுவதைக் காணும்போது ,அன்றைக்கே மிகத் தெளிவாக
பேரண்டத்தின் அழிவு பற்றி பரிபாடலில் கருத்து கூறப்பட்டிருகிறது .பரிபாடலின் இரண்டாவது பாடலின் முதல்
நான்கு வரிகள் அததகைய அறிவியல் சிந்தனையுடன்
தொடங்குகிறது .

" தொன்முறை இயற்கையின் மதி யொ.....


........................................மரபிற்றாகப்


பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட


விசும்பில் ஊழி ஊழூழ் செல்லக்


கருவளர் வானத் திசையில் தோன்றி "


உலகம் அழியும் போது அது உடனடியாக ,முழுமையாக
அழிந்து போவதில்லை..அது அப்படி படிப்படியாக வளர்ந்து
உருவானதோஅதைப்போல படிப்படியாகவே அழியும். முதலில் ஆற்றலிலிருந்து துகள்கள் பிறந்தன .அதன் பின்னர் காற்று,
தீ ,நீர் ,நிலம் தோன்றின.எல்லாவற்றிற்கும் முதலில் தோன்றிய
துகள்களே மற்றவைகளுக்கு மூலமாயின .இதை உலகின் ஐந்து
ஊழிக் காலங்களாக கருதுவர். பெருவெடிப்புக் கொள்கை
(big bang theory ) யின் கருத்தும் இதற்கு ஒப்பானதே .
உலகின் அழிவு கட்டம் தொடங்கும் போது முதலில் நிலம் நீரில் மூழ்கும் .மாலத்தீவு என்ற நாடு கொஞ்சம் கொஞ்சமாக கடலால் சூறையாடப்பட்டு வரும் நிலை அதை உறுதிபடுத்துவதாக
இருக்கிறது. கார்பன்டை ஆக்சைடு என்ற வளிமம் வளி
மண்டலத்தில் பெருகி வருவதால் உலகின் சராசரி வெப்பநிலை அதிகரித்து பனிப்பாறைகள் உருகுவதால் கடலின் நீர்மட்டம்
அதிகரிக்கிறது என்றும் அதனால் வரும் காலத்தில் மேலும் சில நிலப்பகுதிகள் மூழ்கடிக்கப்படலாம் என்றும்,வளி மண்டலத்தில்
பெருகி வரும் கார்பன்டைஆக்சைடு மாசைக் கட்டுபடுத்தத்
தவறிவிட்டால் இந்த உலகம் ஒரே நீர்காடாக மாறிவிடும் என்றும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிவுறுத்தியுள்ளர்கள் .சுனாமி என்ற
நாம வெள்ளம் அதன் முன்னெச்சரிக்கை தானோ! .

நீர் தீயினுள் ஒடுங்கும் .நீரும் நெருப்பும் ஒன்றுக்கொன்று
எதிரியானது என்றல் எப்படி ஒன்றில் மற்றொன்று ஒடுங்கும்
என்ற ஐயம் ஏற்படலாம் .நீர் பரப்பு அதிகமாவதால் அதிக
அளவு நீர் நீராவியாகும் வாய்பிருகிறது. சுற்றுப்புறத்தின்
வெப்பநிலை அதிகரிப்பதால் நீர் ஆவியாகி வெளியேறுவதையே
இச் சொற்றொடர் தெரிவிக்கிறது .தீ காற்றினுள் ஒடுக்கும்
என்பது ,தீயின் வெப்ப ஆற்றலை காற்றிலுள்ள துகள்கள்
எடுத்துச் செல்வதைக் குறிப்பிடுகிறது. ஒரு வளிமத்தின் வெப்ப நிலை  அதிகரிப்[பு என்பது ,அதிலுள்ள துகள்களின்
வெப்பஞ்சர்ந்த தீவிர இயக்கமாகும். இது மிகுந்த வேகத்துடன்
வீசும் காற்றைக் குறிப்பிடுகிறது.ஈர்ப்பிலாத வெளியில் காற்று
எங்கும் பரவிச் செல்லும் என்பதால் ,காற்று வானத்தில்
கலக்கும் என்று கூறி முடித்தார்.


மம் விகுதியின் பயன்பாடு 


மம் விகுதியின் பயன்பாடு மிக அதிகம் .உயர் அறிவியலில் இதைக்கொண்டு பல புதிய சொற்களை உருவாகலாம்

absorber -உட்கவர்மம்

உட்கவரி என்ற சொல் புழக்கத்தில் இருக்கிறது. இது கருவியை
குறிக்கும் சொல்லாகத் தோன்றுமே அல்லாது பொருளைக்
குறிப்பதில்லை.

condensed matter -உறைமம்

lattice -அணிமம்

அணித்தளம் என்ற சொற்றொடர் பயன்பாட்டில் உள்ளது .சிலர் அணிக்கோவை என்றும் கூறுவர்.
அணிக்கோவையை விட அணித்தளம் உடன் பொருள்
உணர்த்துகிறது .அணிமம் மற்றும் அணித்தளம் போன்ற சொற்கள் துணைச் சொற்களுக்கு அனுகூலமாக இருக்கின்றன.

lattice defect -அணிம மரு, அணித்தள மரு

lattice vibration- அணிம அதிர்வு, அணித்தள அதிர்வு

lattice dynamics-அணிம இயக்கவியல், அணித்தள இயக்கவியல்

lattice energy -அணிம ஆற்றல் அணித்தள ஆற்றல் 

lattice plane -அணிமத் தளம்scalar -எண்மம்

vector- திசைமம்

fringe - வரிமம்
dark fringe இருள் வரிமம்
bright fringe -ஒளி வரிமம்

fringe என்பது நேர்கோட்டில் மட்டும் அமைவதில்லை நியூட்டன் வளையங்களில் வட்ட வளையங்களாகவும் வளைந்த
கண்ணாடித் தகட்டில் ,நீள்வட்ட வளையமாகவோ,
பர வளையமாகவோ இருப்பதுண்டு.எனவே வரி என்பதை விட
வரிமம் என்ற சொல்லைகலைச் சொல்லாகக் கருதலாம் .

buried articles -புதைமங்கள்

maximum  -பெருமம்

minimum -சிறுமம்

adduct -அணைவுச் சேர்மம்

additive compound -கூட்டுச் சேர்மம்

alpha emitter ஆல்பா உமிழ்மம்

antidote- முறிமம்,நச்சு முறிமம்

lubricant-வழுமம்

micro particles நுண்மங்கள்

No comments:

Post a Comment