அமைதியான அறைக்குள் கட்டைப் பெரு விரலால்
இரு காதுகளையும் இறுக்கமாக அடைத்துக் கொண்டு ,
கவனமாக உற்றுக் கேட்டால் 25 ஹெர்ட்ஸ் அல்லது
அதற்கும் சற்று குறைவான அதிர்வெண்ணுடன் ஒரு
விதமான தொடரோசை கத்திக் கேட்டுக் கொண்டே
இருக்கும் .இந்த ஒலி எங்கிருந்து பிறந்தது ?
****************
கை மற்றும் புயத்தில் உள்ள தசைகளில் ஏறக்குறைய
23 ஹெர்ட்ஸ் அதிர்வெண் அலைகள் எழுப்பப் படுகின்றன .
இதுவே காதில் தொடரோசையாகக் கேட்கப்படுகிறது .
தசைகளில் உள்ள ஆக்டின் மற்றும் மையோசின்
போன்ற நுண்ணிழைகள் தொடர்ந்து சிறிய அளவில் நீட்சி யுற்றும்,மீட்சியுற்றும் இயங்குகின்றன .ஒவ்வொரு
சிறிய இயக்கத்தின் போதும் ,தசைகள் ஒன்றோடொன்று
உராயும் வாய்ப்பைப் பெறுகின்றன .அப்போது எழுப்பப்படும் ஒலி ,புயத்திலுள்ள எலும்பின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு ,முன்கையை அடைந்து கட்டைப்
பெருவிரல் வழியாக காதில் ஒலிக்கிறது .
பொங்கல் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteகமெண்ட்களை பார்பீங்களா இல்ல பார்க்கமாட்டீங்களான்னு ஒன்னுமே தெரியமாட்டேங்குது.