Sunday, January 9, 2011

Vanna vanna ennangal-33

சுமக்க முடியாதவை



தாயின் மடியில் தவழ்ந்த போது

கண்கள் சுமக்கமுடியாத தூக்கங்கள்

பள்ளியில் படிக்கும் போது

முதுகு சுமக்கமுடியாத புத்தகங்கள்

கல்லூரிக்கு வந்த போது

இளமை சுமக்கமுடியாத காதல்கள்

வேலை தேடி அலைந்தபோது

எண்ணம் சுமக்கமுடியாத ஆசைகள்

குடும்பத் தலைவனான போது

தோள்கள் சுமக்கமுடியாத சுமைகள்

வேலை ஒன்றைப் பெற்ற பின்பு

கைகள் சுமக்கமுடியாத ஊழல்கள்

ஓ.........

ஐம்பது வயது இந்தியனே

உன் பிறப்பும் அப்படித்தான் என்பதால்

பழக்கங்களும் வரம்பு மீறிப் போனதோ



வீடு சுமக்கமுடியாத பிள்ளைகள்

நாடு சுமக்கமுடியாத மக்கள்கள்

சுமப்பதை சுமக்கமுடியாத இளைஞர்கள்

உழைப்பைச் சுமக்கமுடியாத உடல்கள்



செலவைச் சுமக்கமுடியாத வரவுகள்

செம்மையைச் சுமக்கமுடியாத உறவுகள்

மனம் சுமக்கமுடியாத பேராசைகள்

மாற்றத்தைச் சுமக்கமுடியாத காலங்கள்



வயல்கள் சுமக்கமுடியாத வறட்சி

நாடு சுமக்கமுடியாத கடன்.

இதற்கு நான் எப்படிப் பொறுப்பு ?

கிடக்கட்டும் விடு



ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

இதை நினைத்து

ஆனந்தக் கூத்தாடுவோமே

No comments:

Post a Comment