Sunday, January 2, 2011

arika iyarppiyal

பற்றவைப்புத் தண்டுக்கு உகந்த உலோகம் எது ?




மின்னணுவியல் துறையில் மின் வாய்களையும்,
மின் கம்பிகளையும் இணைத்து மின் சுற்றை
ஏற்படுத்த ஈயத்தால் பற்றவைப்புச் செய்வார்கள் .
இதற்கு பற்றவைப்புத்தண்டு பயன்படுகின்றது.
மின்சாரத்தால் சூடுட்டி ஈயத்தை உருக்கி பற்ற வைக்க
வேண்டிய பகுதியை ஒடடியிணைபார்கள். இரும்பின்
வெப்ப ஏற்புத்திறன் செம்பை விட 20 %அதிகமானது .
அதனால் ஒரேயளவு நிறை ,ஒரே வெப்ப மூலம்
இருக்க, அக ஆற்றல் இரும்பாலான பற்றவைப்புத்
தண்டில், செம்பாலானதை விட 20 % கூடுதலாக
இருக்கும் எனலாம் . அப்படி இருக்கும் பொழுது
மலிவான இரும்பை விட, விலை மிக்க செம்பை
பற்றவைப்புத் தண்டு உற்பத்திக்கு பயன்படுத்துவதேன் ?


                                                ***************
பற்றவைப்புத் தண்டில் அகஆற்றல் முக்கியமானதல்ல.
சுயவெப்பம் அதிகமாக இருப்பின் ஒரு குறிப்பிட்ட அளவு
வெப்பங் கொடுக்க அதில் வெப்பநிலை உயர்வு மிகவும்
குறைவாக இருக்கும். அதுமட்டுமன்று பற்றவைப்புத்
தண்டின் பயன்பாடு எந்த அளவிற்கு பொருள்
வெப்பத்தை ஈயத்திற்கு ஊட்டி உருக்குகிறது என்பதையும் பொறுத்திருக்கிறது. செம்பின் வெப்பங் கடத்தும் திறன்
இரும்பை விட 6 மடங்கு உயர்ந்தது. எனவே செம்பாலான
பற்றவைப்புத் தண்டில் வெப்பம் விரைவாக
வெளியேற்றப்படுகிறது. இது தவிர செம்பு இரும்பைவிட
அரிமானத் தடை மிக்கதாகவும் இருக்கிறது .
                                                         ****************
எப்படி மிதந்தாலென்ன ?




ஒரு தடித்த உருட்டுக் கட்டையுடன் ஒரு பாறாங்கல் இறுக்கமாகக்
கட்டப்பட்டு ஒரு பாத்திரத்தில் உள்ள நீரில் விட அது மிதக்கின்றது .
பாறாங்கல் மேற்புறமாக இருக்க சரியாக பாதியளவு மரக்கட்டை
நீரில் அமிழ்கின்றது. மரக்கட்டை மேலாக இருக்கும் பொழுது பாறாங்கல்லும் பாதியளவை விடச் சற்று குறைவான அளவு
மரக்கட்டையும் நீரில் அமிழ்கின்றன .எந்த நிலையில்
அதிக அளவு நீர் இடம்பெறும் ? நீர்மட்டத்தின் உயரத்தில்
மாற்றம் ஏற்படுமா ?

                                                    ******************
மிதவையின் எடை மாறாத பொழுது ,அதனால் இடப்பெயர்வுக்கு உள்ளாகும் நீரின் எடையும் மாறாது. எனவே இரு நிலைகளிலும்
சம அளவு நீரையே இடப்பெயர்வுக்கு உள்ளாக்கும் .
நீரின் மட்டத்தில் மாற்றம் இருப்பதில்லை .

No comments:

Post a Comment