Monday, January 24, 2011

Vinveliyil ulaa-15

கோளகக் கொத்து விண்மீன் கூட்டம்(தொடர்ச்சி)

கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்களில் மாறுபட்ட
சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. முதலாவது
அவற்றின் ஒளிர்திறன் பற்றியது. கோளகக் கொத்து
விண்மீன் கூட்டத்தின் மையத்திலிருந்து உள்ள
தொலைவிற்கு அதிலுள்ள ஒரு விண்மீனின் ஒளிர்திறன்
ஒரு குறிப்பட்ட தொலைவு வரை எதிர் விகிதத்தில்
இருக்கிறது .அதாவது கோள மையத்தை நோக்கிச்
செல்லச் செல்ல ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை
விண்மீனின் பிரகாசம் தொலைவிற்கு ஏற்ப சீராகக்
குறைகிறது.அதன் பின்னர் பிரகாசமின்றி இருக்கின்றன
(level off). இத் தொலைவு பால் வழி மண்டலத்தில் 1 -2
பார்செக் ஆக உள்ளது. இரண்டாவது ஒவ்வொரு
அண்டத்திலும் ஏறக்குறைய 20 விழுக்காடு கோளகக்
கொத்து விண்மீன் கூட்டங்கள் கருச்சிதைவழிவில்
(core collapse ) ஈடுபடுகின்றன.இவற்றின் ஒளிர்திறன்
கோள மையத்தை நோக்கிச் செல்லச் செல்ல
அதிகரிக்கின்றது

M .15 என்ற கோளகக் கொத்து விண்மீன் கூட்டத்தை
இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம் .கருச்சிதைவழிவு
என்பது கோளகக் கொத்து விண்மீன் கூட்டத்திலுள்ள
ஒரு நிறை மிக்க விண்மீன், நிறை தாழ்ந்த துணை
விண்மீனின் நிலைப்புத்தன்மையை சீர்குலைக்கும் போது
விளைகின்றது. இதன் விளைவாக அதிக இயக்க ஆற்றலை
இழக்கும் விண்மீன்கள் கோள மையப் பகுதியில்
இடம்பெற முயலுகின்றன. நீண்ட கால நெடுக்கையில்
நிகழும் இதனால் நிறை மிக்க விண்மீன்களின் நிறை அதிகரித்து மையத்தில் இடம்பெறுகின்றன. இதையே நிறை
ஒதுக்கம் (segregation ) என்பர்.

ஹபுள் தொலைநோக்கியைக் கொண்டு கோளகக்
கொத்து விண்மீன் கூட்டங்களில் நிறை பங்கீட்டுத்
தனத்திற்கான ஓர் உண்மையைக் கண்டறிந்தனர்.
கனமான .நிறைமிக்க விண்மீன்கள் மெதுவாக இயங்கி,
உள்ளகத்தின் பக்கமாக அதிகம் கூடுகின்றன. நிறை
தாழ்ந்த விண்மீன்களின் இயக்க வேகம் அதிகரிந்து,
வெளிப்பக்கமாக விலகிச் சென்று கோளத்தின் விளிம்பு
பகுதிகளில் இடம் பெறுகின்றன.

47 Tucanae




47 Tucanae என்ற கோளாகக் கொத்து விண்மீன் கூட்டம்
(toucan ) என்ற அமெரிக்கப்பறவை ஏறக்குறைய 1
மில்லியன் விண்மீன்களால் ஆனது. விண்வெளியில்
தென்னக அரைக்கோளப்பகுதியில் தெரியும் அடர்த்தி மிக்க
கூட்டமாகும். இதிலுள்ள 15000 க்கும் மேற்பட்ட
விண்மீன்களின் தனி இயக்கத்தைத் துல்லியமாக
வானவியலார் கண்டறிந்துள்ளனர். கருச்சிதைவழிவின்
வெவ்வேறு நிலைகளை மூன்று கட்டங்களாக
வகுத்துள்ளனர். .இள வயது நிலையில் ,கருச்சிதைவழிவு
வழிமுறை கோளத்தின் மையப்பகுதியிலிருந்து தொடங்குகிறது
எனினும்,இரட்டை விண்மீன்களுக்கிடையேயான
இடையீட்டுச் செயல்கள் ,கருச்சிடைவழிவின்
தொடர்ச்சியைத் தடுக்கிறது. இந்நிலையில் கோளகக்
கொத்து விண்மீன் கூட்டம் இடை வயது நிலையை
அடைகிறது.இறுதியில் ,மையப்பகுதியிலுள்ள இரட்டை
விண்மீன்கள் இதனால் மையப்பகுதி அடர்த்திமிக்கதாகின்றது.


பொதுவாக கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள்
கோளவடிவில் இருந்தாலும், ஈர்ப்பின் ஏற்ற வற்றத்தால்
நீள் கோள வடிவிலும் இருக்கும். பால் வழி,ஆண்ட்ரோமெடாவில்
உள்ள கூட்டங்கள், தட்டையான கோள வடிவில் உள்ளன.
(oblate spheroid ) சிறிய மற்றும் பெரிய மெக்லானிக் (small and large
Megellanic cloud ) மேகத்திலுள்ள கூட்டங்கள் நீள் கோள
வடிவில் உள்ளன .
















No comments:

Post a Comment