Monday, January 3, 2011

Vanna vanna ennangal

பொழுது விடியுமா?


நீ என்ன சொன்னாலும் ஏனோ

நானும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்

ஏற்றுக் கொண்டதால் தானே

எல்லாம் இடியப்பச் சிக்கலானது

இன்னும் இன்னும் ஏற்றுக்கொண்டால்

என்னவாகும் என் நிலைமை

என்று எண்ணஎண்ண எகுறுதே

நெஞ்சிலோர் அச்சம்



நான் என்ன சொன்னாலும் ஏனோ

நீ ஏற்றுக்கொள்ள வெறுக்கிறாய்

ஏமாந்தவன் ஏமாற்றுகிறான் என்றுதானே

எண்ணியதால் எண்ணமே இடியானது

இன்னும் இன்னும் ஏற்றுக்கொண்டால்

இருக்க இடம் இல்லாமல் போகுமோ

என்று எண்ணஎண்ண கொதிக்குதே

உடலில் ஓடும் இரத்தம்




நாம் இருவருமே இப்பொழுது மட்டுமல்ல

எப்பொழுதும் இந்தியர்கள் தாம்

என்றைக்கோ ஒரு காலம்

வேற்றுநாட்டான் ஆண்டுபோனான்

என்பதற்காக நீயும் நானும்

அந்நியர்களாகி விடுவதில்லை

பிரிந்தே இருந்ததால்

நாம் எதிரிகளும் இல்லை


வார்த்தை அம்புகள் நித்தம்

நெஞ்சைத் தைக்க

மனித நேயத்தை மறந்துவிட்டு

இருவருமே வாழ்கிறோம்

இது ஒருநாளும் நிலையில்லை

என்பதை நமக்குணர்த்த இனி

இப்பூவுலகில் நம்மைத்

தவிர்த்து யாருமே இல்லை

No comments:

Post a Comment