Monday, January 24, 2011

arika iyarppiyal

இரு பக்கமும் திலான குழாயில் ஒலி எதிரொலிக்க
முடியுமா ?

வெவ்வேறு ஊடகங்களின் வழியாக ஊடுருவிச் செல்லும்
ஒலியின் திசை வேகம் ஒரே அளவினதாக இருப்பதில்லை .
காற்றில் 0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஒலி
வினாடிக்கு 331 . 3 மீட்டர் ஆக இருக்கின்றது .ஒளியைப்
போல ஒலியை எதிரொலிக்கவும்,குவிக்கவும் முடியும்.
இரு பக்கமும் திறவலான குழாயின் நீளத்தை ஒரு
குறிப்பிட்ட அளவு இருக்குமாறு எடுத்துக் கொள்ளும்
போது ,அதன் வழிச்செலுத்தப்படும் ஒலி,வெளிமுனையில்
எதிரொலிக்கப் படுகின்றது .எதிரொலிப்பதற்கு அங்கு
தடுப்பான் ஏதும் இல்லாத போது இது எப்படி
ஏற்படுகின்றது ?

                                        ********************
 
ஒலி ஊடகத்தில் ஊடுருவிச் செல்லும் போது ,அதன்
இயக்கத்திற்கு ஏற்படும் தடையில் மாற்றம் தோன்றும்
போதெல்லாம் ஒலியின் பெரும் பகுதி
எதிரோலிக்கப்படவும்,ஒரு பகுதி கடந்து செல்லப்படவும் ,
ஒரு பகுதி உட்கிரகித்துக் கொள்ளப்படவும் செய்கின்றன.
ஒரு திண்மப் பொருளில் ஒலி விழும் போது ,ஊடகத்தின்
அடர்த்தியில் ஏற்படும் பெருத்த மாற்றத்தினால்
ஒலியின் பெரும்பகுதி எதிரொலிக்கப்படுகிறது .இப்படி
எதிரொலிக்கப்படும் ஒலி ,விழும் ஒலியிலிருந்து
அலைக்கட்டத்தால் வேறுபட்டிருக்கும் .அது எவ்வளவு
வேறுபட்டிருக்கும் என்பது பொருளின் தன்மையைப்
பொறுத்தது .இரு பக்கமும் திறவலான குழாய்வழியாகச்
செல்லும் ஒலி ,முனையில் ஒருபகுதியை எதிரொலிக்கிறது .
இப்படி நிகழவேண்டுமானால் குழாயின் முனையில்
இறுக்க நெருக்கம்  ஏற்படுமாறு ,அதன் நீளம் அமைந்திருக்கவேண்டும் .காற்றில் ஒலி ஊடகத்தில்
உள்ள துகள்களை ஒலி செல்லும் திசையிலேயே அலைவுறச்
செய்வதால்,சீரான அடர்த்தி கொண்டிருந்த ஊடகம் ,
ஒலி பரவும் போது ,மாறி மாறி அடர்த்தி குறைந்த ,அடர்த்தி
மிகுந்த வெளிகளைக் கொண்டிருக்கும் .அடர்த்தி மிகுந்த
வெளி மிகச் சரியாக முனையில் ஏற்படும் போது ஒத்ததிர்வு
ஏற்படுகிறது .அப்போது ஒலியின் பெரும் பகுதி
எதிரொலிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment