Friday, January 7, 2011

arika iyarppiyal

உள்ளே இருக்கும் இசை அமைப்பாளர் யார் ?




சங்கு அல்லது தெர்மாஸ் குடுவையின் வாயைக் காதருகே
வைக்க கடுகு தாளிப்பதைப் போன்றதொரு ஓசை
ஒலிப்பதேன் ?அந்த இசையை உள்ளே இருந்து எழுப்புவது
யார்?
                                        ****************

 
 
 
 
சங்கு தெர்மாஸ் குடுவை போன்றவற்றில் உள்ள
உட்குழிவான பகுதி ஒத்ததிர்வானாகச் (resonator)
செயல்படுகிறது.ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடன்
அதிர்வுறும் ஒன்று மற்றொன்றை அதே அதிர்வெண்ணுடன்
அதிர்வுறத் தூண்டுவது ஒத்ததிர்வு(resonance) எனப்படும்.
புறத்திலிருந்து இதனுள் செல்லும் எந்த ஒலியும்
உட்குழிவான பகுதியில் ஒத்ததிர்ந்து ,ஒலிச் செறிவை
பெருக்கிக் கொள்வதால் ஒரு விதமான ஓசை எழுகிறது .
மேலும் சுற்றுப்புற வெப்பநிலையில் இருக்கும் காற்று
அணுக்கள் உட்குழிவான பகுதியில் வெப்பஞ்சார்ந்த
இயக்கத்தைப் பெற்றிருக்கும் .இதனால் அவை
ஒன்றோடொன்று மோதவும், சுவரோடு மோதவும்
செய்கின்றன . இந்த ஓசையும் நிசப்தத்தை ஒழித்து
விடுகிறது .வெந்நீர் ஊற்றி வெளியேற்றிய பின் சூடான சுவர்
பகுதியைக் கொண்ட உட்குழிவுப்பகுதியில் வெப்பஞ் சார்ந்த
இயக்கம் தீவிரமாக இருப்பதால் இந்த ஓசைவலுவாக
இருக்கும்.

உட்குழிவை காதை ஒட்டி வைக்கும் போது
புறவெளியிலிருந்து பிற அதிர்வுகள் செவியை
எட்டுவதில்லை . அதனால் வெப்பஞ் சார்ந்த
துகளின் இயக்கம் எழுப்பும் ஒலியைத் தெளிவாகக்
கேட்க முடிகிறது .

No comments:

Post a Comment