Thursday, August 11, 2011

Arika ariviyal

சூரியனின் வெப்பநிலை எந்த வெப்பமானியால் அளவிடப்பட்டது ?


           


சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர்
தொலைவில் இருக்கிறது . இதன் வெப்பநிலை இவ்வளவு
என்று எதை வைத்து அளவிட்டார்கள் ?
                                                     ***************

சாதரணமாக ஒரு பொருளின் வெப்பநிலையை
வெப்பமானிகளைக் கொண்டு அளவிடுகிறோம் .
இதில் உள்ள ஊடக அணுக்கள் வெப்ப நிலைக்கு
ஏற்ப இயக்கம் பெற்று விரிவடைவதால் ,அதில்
ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு வெப்பநிலை
மதிப்பிடப்படுகிறது .

சூரியன் மற்றும் விண்மீன்களில் அணுக்கள்,
அணுக்கருத் துகள்கள் எல்லாம் வெப்பஞ் சார்ந்த
இயக்கத்தைப் பெற்றுள்ளன . அதன் மூலம்
அவற்றின் வெப்பநிலையை அறியலாம். ஆனால்
சூரியனின் புறப்பரப்பில் இந்த இயக்கம்
அளவிட்டறியமுடியாதபடி தாழ்வாக இருக்கிறது .
துல்லியமான அளவீட்டிற்கு இது உகந்ததல்ல .

சூரியனின் புறப்பரப்பின் வெப்பநிலையை
கரும்பொருள் கதிர்வீச்சின் நிறமாலையைக்
கொண்டு மதிப்பிடலாம். ஸ்டீபன் விதியைக்
கொண்டும் மதிப்பிடலாம். வளி மண்டலத்திற்கு
அப்பால் ஒரு வினாடியில் ஒலிக்குச்
செங்குத்தாக உள்ள ஒரு சதுர மீட்டார் பரப்பில்
விழும் சூரிய ஆற்றல் சூரிய மாறிலி எனப்படும்.
 சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட சராசரித்
தொலைவிலிருந்து ஒரு வினாடியில் சூரியன்
உமிழும் ஆற்றலைக் கணக்கிடலாம். ஸ்டீபன்
விதிப்படி ஒரு கரும்பொருள் ஓரழுப் பரப்பின்
வழியாக ஒரு வினாடியில் உமிழும் ஆற்றல் ,
அப்பரப்பின் சார்பில வெப்பநிலையின் நான்கு
மடிக்கு நேர் விகிதத் தொடர்பில் இருக்கிறது.
சூரியனின் ஆரத்தைக் கொண்டு அதன் புறப்பரப்பை
அறிந்து அதை ஸ்டீபன் விதிக்கு உட்படுத்தி ,சூரியனின்
புறப் பரப்பின் வெப்பநிலையை அறியலாம். இது
சூரியனுக்கு 6000 கெல்வின் ஆக உள்ளது.

No comments:

Post a Comment