Thursday, August 4, 2011

arika iyarpiyal

அறிக இயற்பியல்

கடல் ஏற்ற வற்றம்
  
சூரியன் மற்றும் சந்திரன் பூமியின் மீது செலுத்தும்
ஈர்ப்பு விசைகளை ஒப்பிட்டால் ,சூரியன் பூமியை
ஈர்க்கும் விசை ,சந்திரன் பூமியை ஈர்க்கும் விசையை
விட 170 மடங்கு வலுவானது என்பது தெரியவரும்.
எனவே சூரியனால் ஏற்படும் கடல் ஏற்றமே
சந்திரனால் ஏற்படுவதைக் காட்டிலும் அதிக
உயரமானதாக இருக்க வேண்டும் என
எதிர்பார்க்கலாம் .ஆனால் உண்மையில் சந்திரனால்
ஏற்படும் கடல் ஏற்றமே சூரியனால் ஏற்படுவதைக்
காட்டிலும் அதிக உயரமானதாக இருக்கிறது.
இதற்கு காரணம் என்ன ?

                                          ***************
சூரியனும் சந்திரனும் பூமி முழுவதையும் ஒரே அளவு
ஈர்ப்பு விசையுடன் இழுப்பதில்லை. ஏனெனில்
பெரிய கோள வடிவமான பூமியின் ஒவ்வொரு
பகுதியும் சூரியன் மற்றும் சந்திரனிலிருந்து
வெவ்வேறு தொலைவில் இருப்பதால் வெவ்வேறு
அளவு ஈர்ப்புக்கு உள்ளாகின்றன .பூமி முழுவதும்
உறுதியான திண்மப் பொருளாக இருந்தால்
இப்படிப்பட்ட வேறுபாடான ஈர்ப்பால் உருத்திரிபு
ஏற்படுவதில்லை.பூமியின் புறப்பரப்பில் உள்ள
கடல் பூமியின் உள்ளகத்தைப் போல உறுதியானதாக
இல்லை. அதனால் அது ஏற்ற வற்றங்களினால்
உருத்திரிபுக்கு ஆளாகின்றன.எனவே கடலில்
ஏற்படும் ஏற்ற வற்றத்தின் அளவு
சூரியன் மற்றும் சந்திரன் பூமியின் மையத்திலுள்ள
ஒரு பொருளை ஈர்க்கும் விசைக்கும் ,பூமியின்
புறப்பரப்பிலுள்ள அதே பொருளை ஈர்க்கும் விசைக்கும்
உள்ள வேறுபாட்டைப் பொருத்திருகிறது என்று கூறலாம்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தொலைவு ,
பூமியின் ஆரத்தைவிட பல மடங்கு அதிகமானது,
வேறுபாட்டு ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதில்லை .
ஆனால் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தொலைவு ,
பூமியின் ஆரத்தைப் போல சில மடங்கே அதிகமானது.
அதனால் வேறுபாட்டு ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கிறது.

No comments:

Post a Comment