arika iyarpiyal
சூரியனின் சார்பு இயக்க வேகம்
சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் மிக வேகமாக நகர்வதாகத் தோன்றுகிறது. உச்சி வேளையில் அப்படி இல்லை. ஏன் ?
பூமியின் தற்சுழற்சி இயக்கமே சூரியன் கிழக்கு மேற்காக நகர்வதுபோலத் தோன்றச் செய்கிறது . பூமியின் தற்சுழற்சி இயக்கம் சீரானது,மாற்றம் பெறுவதில்லை என்பதால் சூரியன் ஒரு மாறாக் கோணத் திசை வேகத்துடன் கிழக்கு மேற்காக இயங்குகிறது எனலாம் . ஆனால் தூரத்தில் இயங்கும் சூரியனின் முப்பரிமாணத்தையும் அதன் வட்டப் பாதை இயக்கத்தையும் உணர முடிவதில்லை. நம் பார்வையில் சூரியனின் இயக்கம் என்பது அதன் உயர வேறுபாடே .இது காலை மற்றும் மாலை வேளைகளில் சூரியன் தொடு வானத்தில் இருக்கும் போது அதிகமாகவும் உச்சி வேளையில் குறைவாகவும் உள்ளதால் ,சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் மிக வேகமாக நகர்வது போலவும் உச்சி வேளையில் மெதுவாக நகர்வது போலவும் தோன்றுகிறது .
No comments:
Post a Comment