Wednesday, August 10, 2011

arika iyarpiyal

சூரியனும் நிலவும்

                     


பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. நிலவு பூமியைச் சுற்றி வருகிறது .

சூரியனுக்கும் நிலவிற்கும் இடையேயான ஈர்ப்பு விசை நிலவிற்கும்

பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசையைவிட அதிகம். அப்படி

இருக்கும் பொழுது நிலவு ஏன்

சூரியனால் கவர்ந்திழுக்கப் படாதிருக்கிறது ?



ஹைட்ரஜனின் செழுமை

பெரு வெடிப்பிற்கு(Big bang ) பிறகு பிரபஞ்சத்தில் முதன் முதலாக

 இயற்கையால் தொகுப்பாக்கம் செய்யப்பட்ட முதல் தனிமம்

ஹைட்ரஜன் .இதன் செழுமை பிரபஞ்சத்தில் 93 % .ஆனால் புவி

வளிமண்டலத்தில் சற்றேறக் குறைய இது 1 % தான்.

 ஹைட்ரஜனின் செழுமை பூமியின் வளி மண்டலத்தில் குறைவாய்

இருப்பதற்கு என்ன காரணம் ?

                                                      *****************

சூரியனின் நிறை பூமியின் நிறையைப்போல 330 000
மடங்கு உள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தொலைவு ,பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட
தொலைவைப் போல் 389 மடங்கு. அதாவது சூரியன்
சந்திரன் மீது செலுத்தும் கவர்ச்சி விசை, பூமி சந்திரன்
மீது செலுத்தும் கவர்ச்சி விசையை விட 2 . 1 மடங்கு
அதிகம். எனினும் சந்திரன், சூரியனின் கவர்ச்சி விசையால் கவரப்படுவதில்லை. இதற்குக் காரணம் பூமியும் சந்திரனும்
இரு உறுப்புகளால் ஆன ஓர் அமைப்பு . இதன் பொது
நிறை மையம் சூரியனை வட்ட வலையைப் பாதியில்
சுற்றி வருகிறது. எனவே நிலவு சூரியனை நோக்கிச்
செல்வதில்லை.

                                           ****************



பூமியின் சராசரி வெப்ப நிலையாக 303 K யைக் கொண்டு,
ஹைட்ரஜனின் வெப்பஞ் சார்ந்த இயக்க வேகத்தைக்
கணக்கிட்டால் 2 . 7 கிமீ /வி என்ற மதிப்பைப் பெறலாம்.
பூமியிலிருந்து ஒரு பொருள் தப்பித்து வெளியேறிச் செல்ல வேண்டுமானால் அதன் இயக்க வேகம் குறைந்தது
11 . 2 கிமீ/வி என்றிருக்கவேண்டும். அப்படி இல்லாததால்
ஹைட்ரஜன் அணு பூமியை விட்டு வெளியேறுவதில்லை.
எனினும் இது சராசரி இருமடி வர்க்கமூல வேகம்தான்
( root mean square velocity ) ஹைட்ரஜனின் வெப்பஞ் சார்ந்த
இயக்க வேகம் சுழி முதல் ஆனந்தம் (infinity ) வரை
(கொள்கை அளவில் ) இருக்கும். இந்த உயர் வேக அணுக்கள் சிறுபான்மையே . இவை வெளியேறும் வாய்ப்பு உள்ளது.
மேலும் 30 - 50 கிமீ உயரங்களில் உள்ள நீர் மூலக்கூறுகள் ,
சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்களின் ஆற்றலால்
பகுக்கப்பட்டு ஹைட்ரஜனாகவும் ,ஆக்சிஜனாகவும்
சிதைவுறும் போது, ஹைட்ரஜன் அணுக்கள் கூடுதலான
இயக்க வேகத்தையும்,ஆக்சிஜன் அணு குறைவான இயக்க
வேகத்தையும் பங்கிட்டுக் கொள்கின்றன. ஏனென்னில்
அவை பெறும் வேகம் அவற்றின் நிறைக்கு எதிர்விகிதப்
பொருத்தத்தில் இருக்கிறது. அதனால் ஹைட்ரஜன் அணு
வளி மண்டலத்திலிருந்து கசிந்து வெளியேறக்கூடிய
வாய்ப்பைப் பெறுகிறது.

1 comment:

  1. விடயங்கள் அறிந்து கொண்டேன் நன்றிங்க சார்

    ReplyDelete