புதனும் வெள்ளியும்
சூரியனைச் சுற்றி வரும் 9 கோள்களுள் முதலில் நெருக்கமாக இருப்பது புதன் (mercury ) அடுத்து வருவது வெள்ளி (venus ) .புதன் சூரியனுக்கு அருகாமையிலிருந்தும் அடுத்துள்ள வெள்ளியை விடப் பிரகாசம் குறைந்திருப்பதேன் ?
புதனும் வெள்ளியும் தன் மீது விழும் சூரிய ஒளியை எதிரொளிக்கின்றன. வெள்ளியை விட புதன் சூரிய ஒளியை மிகக் குறைவாகவே எதிரொளிக்கிறது. இதற்குக் காரணம் அவ்விரு கோள்களின் தளப் பரப்பின் மாறுபட்ட தன்மையே ஆகும்.
புதனின் தளப்பரப்பு இருண்ட எரிமலைப் படிவுப்பாறைகளால் ஆனதாக இருக்கிறது. தளப்பரப்பில் ஆயிரக்கணக்கான எரிமலை வாய்கள் காணப்படுகின்றன . எரிமலை முகடால் ஏற்படும் நிழலே இருளை ஏற்படுத்துகின்றது. கரடு முரடான இப்பாறைகள் முழுமையாகச் சூரிய ஒளியை எதிரொளிப்பதில்லை. உண்மையில் விழும் சூரிய ஒளியில் 6 சதவீதம் தான் புதன் எதிரொளிக்கிறது.
கார்பன்டை ஆக்சைடு அடங்கிய ஓர் அடர்த்தியான வளிமண்டலத்தை வெள்ளிக் கிரகம் பெற்றிருக்கிறது. கார்பன்டை ஆக்சைடு ஒரு மேகம் போல வெள்ளிக் கோளை மூடியுள்ளது. வெள்ளியில் விழும் ஒளி இந்த கார்பன்டைஆக்சைடு மேகத்தால் பெரும் பகுதி (76 %) எதிரொளிக்கப்படுகிறது. இதனால் வெள்ளி பிரகாசமாகத் தோன்றுகிறது .
No comments:
Post a Comment