கீதை வழியில் ஒரு மொழி
பிறக்கும் போது யாரிடமாவது அனுமதி கேட்டாயா ?
இல்லைதானே .
வளரும்போது யாரிடமாவது அனுமதி கேட்கின்றாயா ?
இல்லைதானே .
உணர்சிகள் வெடித்தபோது யாரிடமாவது அனுமதி கேட்கின்றாயா ?
இல்லைதானே .
மடியும் போது யாரிடமாவது அனுமதி கேட்கப் போகின்றாயா ?
இல்லைதானே .
எல்லாம் நடக்கிறது
எல்லாம் தானாக நடக்கிறது
உனக்கு உன்மூலமாக
அவனுக்கு அவன்மூலமாக
எல்லோருக்கும் அவரவர்மூலமாக
எழுச்சியும் வீழ்ச்சியும் ஆண்மையும் அடிமையும்
வெற்றியும் தோல்வியும் இன்பமும் துன்பமும்
ஊக்கமும் உறக்கமும் உயர்வும் தாழ்வும்
வளமும் வறுமையும் சுகமும் சோகமும்
ஏற்பதும் நீதான் இகழ்வதும் நீதான்
அதுவும் நீதான் இதுவும் நீதான்
எல்லாவற்றிற்கும் நீயே காரணமெனில்
எதிரியைச் சுட்டிக்காட்ட என்ன இருக்கிறது ?
இயலாமைக்கு ஒரு காரணம் கிடைத்தது
என்பதைத் தவிர
No comments:
Post a Comment