Friday, August 19, 2011

arika iyarpiyal

புதனில் வளி மடலம் இல்லாததேன் ?






புதனின் ஈர்ப்பு சக்தியானது ஒரு வளி மண்டலத்தை
இருத்திக் கொள்ளும் அளவு வலிமையானது .
எனினும் புதனுக்குச் சிறிதளவு கூட வளிமண்டலம்
இல்லை. இதற்க்கு என்ன காரணம் என்று
கூற முடியுமா ?
                             *************
புதனில் வளி மண்டலம் இல்லாததற்கு தப்புதல்
வேகத்தால் விளக்க முடியும் . புதனில் தப்புதல்
(escape velocity ) வேகம் 4 .5 கிமீ/வி ஆகும். புதனின்
ஈர்ப்பு விசையை மீறி ஒரு பொருள் அதை விட்டு
வெளியேறிச் செல்ல வேண்டுமானால் அது
பெற்றிருக்க வேண்டிய சிறும வேகத்தின் அளவு
4 .5 கிமீ/வி . வேகம் இதைவிடக் குறைவானால்
புதனுக்கு அது திரும்பவேண்டும் ( பூமியில்
தப்புதல் வேகம் 11 . 2 கிமீ/வி )

பூமியை நிலவு சுற்றுவதைப் போல ,சூரியனைப்
புதன் சுற்றுகிறது. அதாவது புதன் தன் ஒரே
முகத்தை சூரியனுக்குக் காட்டிக் கொண்டே
சுற்றுகிறது . சூரியனை ஒரு முறை வலம வர
புதன் 8 .8 நாட்களை எடுத்துக் கொள்கிறது.
எனவே புதன் தன் அச்சில் தன்னைத் தானே
சுற்ற எடுத்துக் கொள்ளும் காலமும் அதே 8 .8
நாட்கள் தாம். இதனால் சூரியனுக்குத் தெரியும்
பகுதியில் எப்போதும் தொடர்ந்து பகலாகவும் ,
தொடர்ச்சியான வெப்ப மிக்க நாட்களாகவும் ,
சூரியனுக்கு மறைவாய் இருக்கும் பகுதியில்
எப்போதும் இருட்டாகவும் தொடர்ச்சியான
குளிராகவும் இருக்கும்.

சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால்
செறிவுள்ள சூரியக் கதிர்வீச்சு, புதனின் ஒரு
பக்கத்தை மட்டும் தாக்க, அப்பகுதியில் வெப்பநிலை
600 K ஆகவும், சூரியனுக்கு மறைவாக உள்ள
எதிர் புறத்தில் வெப்ப நிலை 100 K ஆகவும்
இருக்கிறது. இந்த முரண்பாடான தட்ப வெப்ப
நிலை புதனின் வளிமண்டலத்திற்கு கேடாக உள்ளது .
அதிகக் குளிர்ச்சி காரணமாக வளிமண்டலத்திலுள்ள
வளிமங்கள் கோளின் இருண்ட பகுதியில் நீர்மமாகி
உறைந்து போய்விடுகின்றன . இதனால் ஏற்படும்
வளிமண்டல அழுத்தக் குறைவு பகல் பகுதியில்உள்ள

வளிமங்களையும் இருண்ட பகுதிக்கு எடுத்துச்
சென்று அங்கேயே உறைந்து போகச் செய்கிறது.

அழுத்தம் குறைவாக வளிமங்களின்
உறைநிலையும் குறையும். இதனால் கனமான
மூலக் கூறுகளை உடைய வளிமங்களும்
உறையும் வாய்ப்பைப் பெறுகின்றன.

பேரண்ட வெளியில் ஹைட்ரஜன் அதிகமாகச் செறிவுற்றிந்தாலும் ,பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் ,ஹைட்ரஜனைவிட அதிகமாகச்
செறிவுற்றிருப்பதையும் பொருள் தப்பிக்கும்
வேகத்தைக் கொண்டு விளக்க முடியும்





No comments:

Post a Comment