Thursday, August 11, 2011

Vanna vanna Ennangal

உடன்கட்டை




என்னோடு நீ உன்னோடு நான்

என்றைக்கும் இணைபிரியாத் தோழர்கள்

நம் நட்புக்கு இல்லை

இன்னொரு எடுத்துக்காட்டு


நான் பிறந்தபோது நீயும் புகுந்தாய்

நீ வளரும் போது நானும் வாழ்ந்தேன்

பிறந்தநாள் மட்டுமின்றி

பிறந்த இடமும் நேரமும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் உண்டபோது நீயும் சுவைத்தாய்

நீ தாகமென்றபோது நானும் குடித்தேன்

நான் நீயாக நீ நானாக

பசிப்பதும் புசிப்பதும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் விளையாண்டபோது நீயும் ரசித்தாய்

நீ வென்றபோது நானும் மகிழ்தேன்

எனக்குள் நீவர உனக்குள் நான்வர

உருவமும் உணர்ச்சியும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் பாடியபோது நீயும் பரவசப்பட்டாய்

நீ ஆடியபோது நானும் பாராட்டினேன்

சிந்தையும் செயலும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் விழுந்தபோது நீயும் வீரிட்டாய்

நீ வாடியபோது நானும் வருந்தினேன்

என்கண்ணில் நீரவர உன்கண்ணில் இரத்தம்வர

இன்பமும் துன்பமும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


நான் உறங்கியபோது நீயும் கனவுகண்டாய்

நீ விழித்தபோது நானும் எழுந்தேன்

நீ நானாக நான் நீயாக

எல்லா நிகழ்வுகளும்

இருவருக்கும் ஒன்றாய் இருந்ததே


என் ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும்

நீயே காரணமென்று

எல்லோரும் சொல்கிறார்கள்

இருந்தும் உன்னை

இன்னும் அறிந்துகொள்ளவே இல்லை


இறந்தபின்பு என்றால்

அன்பிற்கு களங்கமென்று

நான் இறக்கும்போதே நீயும்

உடன்கட்டை ஏறுவேனென்று

உறுதியாய் இருகிறாய்

நானே நீ நீயே நான்

என்பதைப் புரிந்து கொளவே

என்வாழ்க்கை முடிந்துவிட்டதே

நான் மீண்டும் வருவேன்

உன்னைப் புரிந்து கொளவதற்காக



No comments:

Post a Comment